இதற்கெல்லாம் வேறலெவல் திறமை வேண்டும்!! மகன் வைத்து விளையாட எலக்ட்ரிக் ஜீப்பை உருவாக்கிய தந்தை!

கேரளாவை சேர்ந்த ஒருவர் தனது மகனுக்காக சிறிய அளவில் எலக்ட்ரிக் ஜீப் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார். அவரது இந்த தயாரிப்பை பற்றி இனி தொடர்ந்து பார்க்கலாம்.

இதற்கெல்லாம் வேறலெவல் திறமை வேண்டும்!! மகன் வைத்து விளையாட எலக்ட்ரிக் ஜீப்பை உருவாக்கிய தந்தை!

தனது குழந்தைகளுக்காக பெற்றோர் வெவ்வேறு விதமான பைக்குகளையும், கார்களையும் உருவாகியுள்ளதை பல வீடியோக்களில் இதற்கு முன்பும் பலமுறை பார்த்துள்ளோம்.

இதற்கெல்லாம் வேறலெவல் திறமை வேண்டும்!! மகன் வைத்து விளையாட எலக்ட்ரிக் ஜீப்பை உருவாக்கிய தந்தை!

இதில் கேரளாவை சேர்ந்த ராகேஷ் பாபு என்பவரின் தயாரிப்புகள் ஏராளம் ஆகும். ஏனெனில் இவர் ஃபோக்ஸ்வேகன் பெட்லீ, யமஹா ஆர்எக்ஸ்100, ஜீப் உள்பட எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளையும் சிறியவர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்குவதில் கை தேர்ந்தவராக உள்ளார்.

இதற்கெல்லாம் வேறலெவல் திறமை வேண்டும்!! மகன் வைத்து விளையாட எலக்ட்ரிக் ஜீப்பை உருவாக்கிய தந்தை!

இதில் ஃபோக்ஸ்வேகன் பெட்லீ தோற்றம் கொண்ட சிறிய ரக காரில் மோட்டார்சைக்கிளின் என்ஜின் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொதுவாக கேரளாவை சேர்ந்தவர்களிடம் இவ்வாறான திறன்கள் அதிகமாகவே உள்ளன.

இதற்கெல்லாம் வேறலெவல் திறமை வேண்டும்!! மகன் வைத்து விளையாட எலக்ட்ரிக் ஜீப்பை உருவாக்கிய தந்தை!

நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ள மினி மஹிந்திரா ஜீப் வாகனத்தை உருவாக்கிய ஷாகீர் என்பவரும் கேரளா, மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். ஃபுட் என் டிப்ஸ் பை சேஃப்பர் இதுதொடர்பான வீடியோ இதோ உங்களுக்காக...

இந்த வீடியோவில் இந்த ஜீப்பை சுமார் 5- 6 வருடங்கள் முன்பே உருவாக்கியதாக கூறும் ஷாகீர் இந்த வாகனம் தற்போது தான் சுற்று வட்டாரங்களில் வைரலாகி வருவதாக தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 1 வருடமாக இந்த மினி ஜீப்பை உருவாக்கும் பணியில் ஷாகீர் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

இதற்கெல்லாம் வேறலெவல் திறமை வேண்டும்!! மகன் வைத்து விளையாட எலக்ட்ரிக் ஜீப்பை உருவாக்கிய தந்தை!

இத்தனை மாத உழைப்பு தான் இப்போது நம் கண் முன்னே ஒரிஜினல் மஹிந்திரா ஜீப்-ஐ போன்று காட்சியளிக்கிறது. நமது தமிழ்நாட்டில் பெரிய அளவில் இல்லாவிடினும், கேரளாவில் மஹிந்திரா ஜீப் வாகனங்கள் இன்றளவும் பலரால் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கெல்லாம் வேறலெவல் திறமை வேண்டும்!! மகன் வைத்து விளையாட எலக்ட்ரிக் ஜீப்பை உருவாக்கிய தந்தை!

அதிலும் குறிப்பாக மலப்புரத்தில் ஜீப் வாகனங்களின் பயன்பாடும் இப்போதும் அதிகமாகவே உள்ளது. இதனால் தான் ஷாகீருக்கு இந்த மினி ஜீப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானதாம். ஷாகீர் வெளிநாட்டில் பணியாற்றுபவர் ஆவார்.

இதற்கெல்லாம் வேறலெவல் திறமை வேண்டும்!! மகன் வைத்து விளையாட எலக்ட்ரிக் ஜீப்பை உருவாக்கிய தந்தை!

எப்போதெல்லாம் விடுமுறைக்கு வீட்டிற்கு வருகிறாரோ அப்போதெல்லாம் இந்த ஜீப்பின் தயாரிப்பில் இறங்கிவிடுவாராம். இந்த மினி ஜீப்பின் சேசிஸை ஷாகீரே தனது சொந்த முயற்சியில் அவரது வீட்டில் தயாரித்துள்ளார்.

இதற்கெல்லாம் வேறலெவல் திறமை வேண்டும்!! மகன் வைத்து விளையாட எலக்ட்ரிக் ஜீப்பை உருவாக்கிய தந்தை!

இதில் அவருக்கு பெரிய அளவில் எந்த பிரச்சனை ஏற்படவில்லையாம். ஆனால் வாகனத்தை சுற்றிலும் பொருத்தப்படும் பேனல்களை உருவாக்குவதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. அதாவது இரும்பு தகடுகளை தேவைக்கு ஏற்றவாறு வெட்டுவதிலும், தட்டுவதிலும் அதிக சத்தம் ஏற்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் வேறலெவல் திறமை வேண்டும்!! மகன் வைத்து விளையாட எலக்ட்ரிக் ஜீப்பை உருவாக்கிய தந்தை!

இதனால் அக்கம் பக்கத்தினர் சண்டைக்கு வருவார்களோ என அஞ்சிய ஷாகீர் பிறகு உலோக தகடுகளை அருகில் இருந்த பட்டறைக்கு சென்று உருவாக்கியுள்ளார். மற்ற ஜீப் வாகனங்களை போன்று இந்த மினி ஜீப்-பும் சுருள் சஸ்பென்ஷன் அமைப்பை கொண்டுள்ளது.

இதற்கெல்லாம் வேறலெவல் திறமை வேண்டும்!! மகன் வைத்து விளையாட எலக்ட்ரிக் ஜீப்பை உருவாக்கிய தந்தை!

இதனுடன் முன்பக்க மற்றும் பின்பக்கத்தில் உலோக பம்பர்கள், நீக்கக்கூடிய துணி மேற்கூரை, பவர் ஜன்னல்கள், எல்இடி ஹெட்லைட்கள், பவர் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றையும் இந்த மினி ஜீப் பெற்றுள்ளது. இவை எல்லாத்தையும் விட மிக முக்கிய அம்சமாக இது எலக்ட்ரிக் மோட்டாரின் மூலம் இயங்கக்கூடிய ஜீப் ஆகும்.

இதற்கெல்லாம் வேறலெவல் திறமை வேண்டும்!! மகன் வைத்து விளையாட எலக்ட்ரிக் ஜீப்பை உருவாக்கிய தந்தை!

வீடியோவில் ஷாகீரின் மகன் மிகவும் எளிமையான இந்த வாகனத்தை இயக்குகிறார். எந்தவொரு சத்தமும் வெளிப்படவில்லை. இந்த மினி எலக்ட்ரிக் ஜீப்பின் ரேஞ்சு (முழு பேட்டரி சார்ஜில்) 60- 70கிமீ எனவும், இதனை உருவாக்க மொத்தமாக ரூ.1.5 லட்சம் செலவானது எனவும் ஷாகீர் கூறியுள்ளார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala man builds an electric jeep for his children. Read Full Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X