விதிமீறிய அமைச்சரின் கார்... சூப்பர் பாடம் புகட்டிய மோட்டார் வாகனத் துறை... என்ன நடவடிக்கை தெரியுமா?

விதிமீறியதாகக் கூறிய அமைச்சரின் அதிகாரப்பூர்வ கார் மீது மோட்டார் வாகனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

விதிமீறிய அமைச்சரின் கார்... சூப்பர் பாடம் புகட்டிய மோட்டார் வாகனத் துறை... என்ன நடவடிக்கை தெரியுமா?

அரசியல்வாதிகள் என்றாலே செல்வாக்கு மிக்கவர்கள், அவர்கள் என்ன விதிமீறல்களில் ஈடுபட்டாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்காது. வேடிக்கை மட்டுமே பார்க்கும் இவ்வாறெல்லாம் பேச்சுகள் அடிப்படுவது உண்டு. இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் ஓர் தரமான சம்பவம் தற்போது அரங்கேறியிருக்கின்றது.

விதிமீறிய அமைச்சரின் கார்... சூப்பர் பாடம் புகட்டிய மோட்டார் வாகனத் துறை... என்ன நடவடிக்கை தெரியுமா?

விதிமீறலில் ஈடுபட்ட அரசியல்வாதி ஒருவரின் வாகனத்தின்மீது மோட்டார் வாகனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். அவர் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சராக இருக்கின்றபோதிலும், மிக துணிச்சலுடன் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விதிமீறிய அமைச்சரின் கார்... சூப்பர் பாடம் புகட்டிய மோட்டார் வாகனத் துறை... என்ன நடவடிக்கை தெரியுமா?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் ஓர் அதிரடி உத்தரவை வெளியிட்டது. அதில், கார்களின் ஜன்னல்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகள் தெளிவான பார்வைக் கொண்டதாகவும், மறைப்புகள் ஏதும் இன்றியும் இருக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பத்திருந்தது.

விதிமீறிய அமைச்சரின் கார்... சூப்பர் பாடம் புகட்டிய மோட்டார் வாகனத் துறை... என்ன நடவடிக்கை தெரியுமா?

பல்வேறு குற்றச் சம்பங்கள் இதைச் சார்ந்து அரங்கேறியதைத் தொடர்ந்தே இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் வெளியிட்டிருந்தது. இந்த உத்தரவு பொதுமக்களுக்கு மட்டுமின்றி அரசின் முக்கிய பதவிகளில் இருக்கும் உயரதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என கூறப்பட்டது.

விதிமீறிய அமைச்சரின் கார்... சூப்பர் பாடம் புகட்டிய மோட்டார் வாகனத் துறை... என்ன நடவடிக்கை தெரியுமா?

இருப்பினும், இதனை ஒரு சிலர் மீறிய வண்ணம் இருக்கின்றனர். அதில், குடிமக்கள் மட்டுமின்றி அரசு பணியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவரும் அடங்குவர்.

விதிமீறிய அமைச்சரின் கார்... சூப்பர் பாடம் புகட்டிய மோட்டார் வாகனத் துறை... என்ன நடவடிக்கை தெரியுமா?

இந்த நிலையிலேயே அமைச்சரின் அதிகாரப்பூர்வ காரில் கருப்பு நிற ஜன்னல் கண்ணாடி மற்றும் திரை மறைப்புகள் பயன்படுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அந்த வாகனத்தின்மீது மோட்டார் வாகனத்துறையினர் அதிரடி நடவடிக்கையையும் எடுத்திருக்கின்றார்.

விதிமீறிய அமைச்சரின் கார்... சூப்பர் பாடம் புகட்டிய மோட்டார் வாகனத் துறை... என்ன நடவடிக்கை தெரியுமா?

நமது அண்டை மாநிலமான கேரளாவிலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. சுற்றுலாத்துறைக்கு சொந்தமான, அத்துறை அமைச்சருக்காக ஒதுக்கப்பட்ட காரின் மீதே மோட்டார் வாகனத்துறையினர் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். காரில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டிருந்த அனைத்து திரைகள் மற்றும் ஒளி ஊடுருவா வண்ணம் ஒட்டப்பட்டிருந்த கருப்பு ஸ்டிக்கர்களும் (சன் ஃபிலிம்) உடனடியாக சம்பவ இடத்திலேயே நீக்கப்பட்டன.

இத்துடன் அமைச்சரின் அதிகாரப்பூர்வ வாகனத்திற்கு அபராதமும் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதுபோன்று அமைச்சர்களின் வாகனங்கள் மீது மோட்டார் வாகனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே திருவனந்தபுரத்தில் அமைச்சர்கள் மூவரின் வாகனத்தின்மீது போலீஸார் இதேமாதிரியான அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

விதிமீறிய அமைச்சரின் கார்... சூப்பர் பாடம் புகட்டிய மோட்டார் வாகனத் துறை... என்ன நடவடிக்கை தெரியுமா?

இந்த நிலையிலேயே கேஎல் 01 சிஎம் 9354 என்ற பதிவெண் கொண்ட அரசுக்கு சொந்தமான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கார் மீது கேரளா மோட்டார் வாகனத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அதேசமயம், வாகன மாடிஃபிகேஷன் மற்றும் பிற விதிமீறல்களுக்கு எதிராகவும் கேரள மோட்டார்வாகனத்துறையினர் அண்மைக் காலங்களாக அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala MVD Fined Minister's Official Toyota Innova Car For Violating Traffic Rule. Read In Tamil.
Story first published: Wednesday, January 20, 2021, 11:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X