Just In
- 2 hrs ago
ஸ்கோடா ஆக்டேவியாவில் புதிய ஸ்போர்ட்லைன் வேரியண்ட்!! புதுமையான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டது...
- 9 hrs ago
மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!
- 11 hrs ago
சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?
- 14 hrs ago
டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்!
Don't Miss!
- News
கொரோனா தடுப்பூசி திருவிழா.. முதல் நாளில் 27 லட்சம் பேருக்கு தடுப்பூசி.. மத்திய அரசு தகவல்!
- Sports
எவ்வளவு திமிர்.. அவரை ஓரம்கட்டிட்டு இப்ப போய் புலம்பினா எப்படி? வார்னரை வறுத்தெடுக்கும் பேன்ஸ்!
- Finance
தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..!
- Movies
'மாநாடு' சிம்பு, வெங்கட் பிரபுவுக்கு பெரிய மைக் கல்லா இருக்கும்...சொல்றது இவர் தான்
- Lifestyle
தமிழ் புத்தாண்டைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விலையுயர்ந்த போர்ஷே சூப்பர் காரில் வந்த பிரபல நடிகர்! எதிரில் நின்று திருப்பி அனுப்பிய காவலர்... ஏன் தெரியுமா?
விலையுயர்ந்த காரில் வந்த பிரபல நடிகரை காவலர் ஒருவர் இடைமறைத்து அக்காரை திருப்பி அனுப்பியிருக்கின்றார். இதற்கான காரணத்தை இப்பதிவில் காணலாம்.

மலையாள திரையுலகின் நட்சத்திர நடிகர்களில் மம்மூட்டியும் ஒருவர். இவரின் மகனும், பிரபல நடிகருமான துல்கர் சல்மான், தவறான பாதையில் பயணித்து சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார். துல்கர் இதுபோன்று சர்ச்சையில் சிக்குவது முதல் முறையல்ல. முன்னதாக சக நடிகருடன் இணைந்து கார் ரேஸில் ஈடுபட்டு பெரும் சர்ச்சைக்குள் சிக்கினார்.

இந்நிலையிலேயே இவரின் மற்றுமொரு போக்குவரத்து விதிமீறல் பற்றிய தகவல் வெளி வந்திருக்கின்றது. துல்கர் சல்மான் சிக்னலை விரைவாக கடக்க வேண்டும் என்பதற்காக தவறான பாதையில் வந்ததாகக் கூறப்படுகின்றது. இதனை தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவும் உறுதிப்படுத்தியுள்ளது.

அவ்வீடியோவில், தவறான பாதையில் வந்து நிற்கும் துல்கர் சல்மான் காரை, போலீஸார் ஒருவர் இடைமறித்து பின்னே செல்லும்படி கூறுகின்றார். இதனால் ரிவர்ஸிலேயே சென்ற அக்கார் மீண்டும் சரியான பாதையில் பயணித்தது. இந்த சம்பவம் முழுவதையும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தங்களின் செல்போனில் படம் பிடித்து வெளியிட்டிருக்கின்றனர்.

இந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகி, துல்கருக்கு இக்கட்டான சூழ்நிலை உருவாக்கியிருக்கின்றது. துல்கர் சல்மான் பயன்படுத்தியது போர்ஷே பனமேரா டர்போ சொகுசு காராகும். இந்த சூப்பர் கார் தமிழ்நாடு பதிவெண்ணைக் கொண்டிருக்கின்றது.

துல்கர் மற்றும் மம்மூட்டி இருவரும் பயன்படுத்தும் பெரும்பாலான கார்கள் '369' எனும் பதிவெண்ணைக் கொண்டதாக இருக்கின்றன. இந்த பதிவெண்ணைக் கொண்டே இது துல்கருடையது என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆலப்புழாவிற்கு செல்லும் பை பாஸ் சாலையிலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

துல்கர் சல்மானின் இந்த விதிமீறல் செயல் அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என இந்தியாவின் பல மொழிகளில் நடித்து வருகின்றார். ஆகையால், இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் பஞ்சமின்றி காணப்படுகின்றது.

எனவேதான், துல்கரின் இந்த செயலை தவறான முன்னுதாரணம் என கூறி பலர் கடுமையாக சாடி வருகின்றனர். துல்கர் பயன்படுத்திய போர்ஷே பனமேரா டர்போ இந்தியாவில் ரூ. 2.13 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் உயர்நிலை சூப்பர் கார் மாடல் ஆகும். எனவேதான் இந்த உச்சபட்ச விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இக்காரை துல்கர் 2018ம் ஆண்டிலேயே வாங்கிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இந்த கார் தற்போது ஹைபிரிட் வெர்ஷனில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இக்காரில் 4.0 லிட்டர் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 543 பிஎச்பி மற்றும் 770 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், இக்கார் வெறும் 3.8 செகண்டுகளிலேயே 0 பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டிருக்கின்றது.
இத்தகைய திறன்மிக்க காரிலேயே துல்கர் சல்மான் தவறான பாதையில் வந்து சர்ச்சையில் சிக்கியிருக்கின்றது. போலீஸார் இவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தது என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. அண்மைக் காலங்களாக கேரளா மோட்டார்வாகனத்துறை அதிகாரிகள் இணையத்தில் வைரலாகும் வீடியோக்களின் அடிப்படையிலும் அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். ஆகையால், விரைவில் நடிகர் துல்கர் மீதும் போலீஸாரின் நடிவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகின்றது.