விரைவில் விற்பனைக்கு வரப்போகும் கியா கேரன்ஸ் எம்பிவி... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள கியா கேரன்ஸ் எம்பிவி கார் பற்றிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விரைவில் விற்பனைக்கு வரப்போகும் கியா கேரன்ஸ் எம்பிவி... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

கியா இந்தியா மிகவும் வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தற்போதைய நிலையில் செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் என மூன்று கார்களை கியா இந்தியா நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. ஆனால் வரும் காலங்களில் நிறைய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு கியா திட்டமிட்டுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வரப்போகும் கியா கேரன்ஸ் எம்பிவி... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

இதில், கேரன்ஸ் மிகவும் முக்கியமானது. கியா கேரன்ஸ் எம்பிவி கார் சமீபத்தில்தான் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து வெகு விரைவில் கியா கேரன்ஸ் எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்திய சந்தையில் 2022 காலாண்டர் ஆண்டின் முதல் காலாண்டில் கியா கேரன்ஸ் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வரப்போகும் கியா கேரன்ஸ் எம்பிவி... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

அதாவது 2022ம் ஆண்டின் ஜனவரி-மார்ச் கால கட்டத்தில் கியா கேரன்ஸ் எம்பிவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும். இந்த கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கியா கேரன்ஸ் எம்பிவி பற்றிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

விரைவில் விற்பனைக்கு வரப்போகும் கியா கேரன்ஸ் எம்பிவி... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

வெளிப்புற டிசைன்

கியா கேரன்ஸ் மிகவும் ஸ்போர்ட்டியாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் முன் மற்றும் பின் பகுதியில் எல்இடி ஹெட்லேம்ப்களும், எல்இடி டெயில்லேம்ப்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் முன் மற்றும் பின் பக்க பம்பர்கள் ஸ்போர்ட்டியாக இருக்கும் அதே நேரத்தில், இதன் பக்கவாட்டு தோற்றம் எஸ்யூவி போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

விரைவில் விற்பனைக்கு வரப்போகும் கியா கேரன்ஸ் எம்பிவி... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

கியா கேரன்ஸ் எம்பிவி மொத்தம் 7 வண்ண தேர்வுகளில் கிடைக்கும். அவை பின்வருமாறு:

  • இம்பீரியல் ப்ளூ
  • மாஸ் ப்ரவுன்
  • ஸ்பார்க்கிளிங் சில்வர்
  • இன்டென்ஸ் ரெட்
  • அரோரா ப்ளாக் பேரல்
  • க்ராவிட்டி க்ரே
  • க்ளாசியர் ஒயிட் பேரல்
  • விரைவில் விற்பனைக்கு வரப்போகும் கியா கேரன்ஸ் எம்பிவி... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

    பிளாட்பார்ம்

    கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் அதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கியா கேரன்ஸ் எம்பிவி காரும் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பின் பகுதியில் மூன்றாவது வரிசை இருக்கை அமைப்பை வழங்குவதற்காக சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சுவாரஸ்யம் அளிக்கும் விதமாக ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள எம்பிவி காரிலும் மாற்றியமைக்கப்பட்ட இதே பிளாட்பார்ம்தான் பயன்படுத்தப்படவுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த புதிய எம்பிவி ஸ்டார்கஸார் என்ற பெயரில் அழைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விரைவில் விற்பனைக்கு வரப்போகும் கியா கேரன்ஸ் எம்பிவி... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

    இன்டீரியர்

    கியா கேரன்ஸ் எம்பிவி காரின் கேரன் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது. இதற்கு இன்டிகோ மற்றும் பழுப்பு நிற தீம்தான் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதன் டேஷ்போர்டின் மைய பகுதியில் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விலை குறைவான வேரியண்ட்களில் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படும்.

    விரைவில் விற்பனைக்கு வரப்போகும் கியா கேரன்ஸ் எம்பிவி... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

    இதுதவிர முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் (மல்டி-ஃபங்ஷன்) ஆகியவையும் முக்கியமான ஹைலைட்களாக உள்ளன. இதுதவிர 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங்கும் கியா கேரன்ஸ் எம்பிவி காரின் அழகியலை மேம்படுத்துகிறது. ஒட்டுமொத்தத்தில் இதன் கேபின் பிரீமியமாக திகழ்கிறது.

    விரைவில் விற்பனைக்கு வரப்போகும் கியா கேரன்ஸ் எம்பிவி... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

    வசதிகள்

    கியா நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே கேரன்ஸ் எம்பிவி காரிலும் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், 8 ஸ்பீக்கர் பாஸ் சவுண்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி (ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ), யுவோ கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்றவை மிகவும் முக்கியமானவை.

    விரைவில் விற்பனைக்கு வரப்போகும் கியா கேரன்ஸ் எம்பிவி... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

    இதுதவிர எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஏர் ப்யூரிஃபையர் உள்ளிட்ட வசதிகளையும் கியா கேரன்ஸ் எம்பிவி கார் பெற்றுள்ளது. இங்கே முக்கியமான வசதிகளை மட்டும்தான் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். எனவே நாங்கள் ஏற்கனவே கூறியபடி கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களின் மற்ற கார்களை போலவே கேரன்ஸ் எம்பிவியிலும் வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை.

    விரைவில் விற்பனைக்கு வரப்போகும் கியா கேரன்ஸ் எம்பிவி... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

    பாதுகாப்பு

    கேரன்ஸ் எம்பிவி காரில் பயணிகளின் பாதுகாப்பிற்கு கியா நிறுவனம் அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளது. ஏபிஎஸ், இஎஸ்சி, ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், காரின் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை கியா கேரன்ஸ் எம்பிவி கார் பெற்றுள்ளது.

    விரைவில் விற்பனைக்கு வரப்போகும் கியா கேரன்ஸ் எம்பிவி... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

    இந்தியாவில் தற்போது கார்களின் பாதுகாப்பு தொடர்பாக வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்து கொண்டே வருகிறது. சமீப காலமாக டாடா நிறுவன கார்களின் விற்பனை உயர்ந்து கொண்டே வருவதற்கு இதுதான் மிக முக்கியமான காரணம். எனவே கியா நிறுவனம் கேரன்ஸ் எம்பிவியில் பாதுகாப்பு வசதிகளை வாரி வழங்கியிருப்பது சாமர்த்தியமான முடிவாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் கியா கேரன்ஸ் எம்பிவி காரின் குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் முடிவுகள் இன்னும் நமக்கு தெரியவரவில்லை.

    விரைவில் விற்பனைக்கு வரப்போகும் கியா கேரன்ஸ் எம்பிவி... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

    இருக்கை தேர்வுகள்

    கியா கேரன்ஸ் எம்பிவி கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கும். இதில், 6 சீட்டர் மாடலின் இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 7 சீட்டர் மாடலின் இரண்டாவது வரிசையில் வழக்கமான பென்ச் இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் தேவையை பொறுத்து முடிவு செய்யலாம்.

    விரைவில் விற்பனைக்கு வரப்போகும் கியா கேரன்ஸ் எம்பிவி... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

    இன்ஜின் தேர்வுகள்

    செல்டோஸ் காரில் வழங்கப்படும் அதே மூன்று இன்ஜின் தேர்வுகளையும், கேரன்ஸ் எம்பிவி காரிலும் கியா நிறுவனம் வழங்கவுள்ளது. இதன்படி கியா கேரன்ஸ் எம்பிவி காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தேர்வு கொடுக்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படும்.

    விரைவில் விற்பனைக்கு வரப்போகும் கியா கேரன்ஸ் எம்பிவி... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

    இதுதவிர 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் கியா கேரன்ஸ் எம்பிவி பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7 ஸ்பீடு டிசிடி தேர்வுகளை வாடிக்கையாளர்கள் தேர்ந்து எடுக்கலாம்.

    விரைவில் விற்பனைக்கு வரப்போகும் கியா கேரன்ஸ் எம்பிவி... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

    மேலும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் தேர்வையும் கியா கேரன்ஸ் எம்பிவி கார் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

Most Read Articles
English summary
Key features about upcoming kia carens mpv
Story first published: Friday, December 17, 2021, 13:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X