நாம எதிர்பார்த்தது நடந்திருச்சு... கியா நிறுவனத்தின் புதிய காரின் பெயர் இதுதான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கியா நிறுவனத்தின் புதிய எம்பிவி காரின் பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நாம எதிர்பார்த்தது நடந்திருச்சு... கியா நிறுவனத்தின் புதிய காரின் பெயர் இதுதான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கியா நிறுவனம் இந்திய சந்தையில் புத்தம் புதிய எம்பிவி ரக கார் ஒன்றை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த கார் கேரன்ஸ் (Carens) என்ற பெயரில் அழைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் கியா நிறுவனம் இந்த தகவலை உறுதி செய்யாமல் இருந்து வந்தது. எனவே குழப்பமான சூழல் நிலவிய நிலையில், தற்போது நமக்கு தெளிவான பதில் கிடைத்துள்ளது.

நாம எதிர்பார்த்தது நடந்திருச்சு... கியா நிறுவனத்தின் புதிய காரின் பெயர் இதுதான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆம், தங்களது புத்தம் புதிய எம்பிவி கார் கேரன்ஸ் என்ற பெயரில்தான் அழைக்கப்படும் என்பதை கியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. பெயரை போலவே, கியா கேரன்ஸ் கார் எப்போது அறிமுகம் செய்யப்படும்? என்பதும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கியா கேரன்ஸ் கார் வரும் டிசம்பர் 16ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

நாம எதிர்பார்த்தது நடந்திருச்சு... கியா நிறுவனத்தின் புதிய காரின் பெயர் இதுதான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கியா கேரன்ஸ் எம்பிவி கார் வரும் டிசம்பர் 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு (2022) தொடக்கத்தில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இன்னும் கொஞ்ச காலம் மட்டுமே இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.

நாம எதிர்பார்த்தது நடந்திருச்சு... கியா நிறுவனத்தின் புதிய காரின் பெயர் இதுதான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இதுகுறித்து கியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான டா-ஜின் பார்க் கூறுகையில், ''இந்திய சந்தைக்கு எங்களின் நான்காவது தயாரிப்பாக கேரன்ஸ் காரை கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம் (கியா நிறுவனம் ஏற்கனவே செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் ஆகிய மூன்று கார்களை விற்பனை செய்து வருகிறது).

நாம எதிர்பார்த்தது நடந்திருச்சு... கியா நிறுவனத்தின் புதிய காரின் பெயர் இதுதான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிரீமியமான மற்றும் சௌகரியமான மூன்று வரிசை இருக்கை அமைப்பு கொண்ட காரை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என கியா நிறுவனம் விரும்புகிறது. இது இந்தியாவின் நகர்ப்புறங்களின் வசிக்கும் மக்களின் லைஃப் ஸ்டைலுக்கும், இந்திய சாலைகளுக்கும் ஏற்றதாக இருக்கும். கியா கேரன்ஸ் ஒரு கேம்-சேஞ்ராக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்'' என்றார்.

நாம எதிர்பார்த்தது நடந்திருச்சு... கியா நிறுவனத்தின் புதிய காரின் பெயர் இதுதான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கியா கேரன்ஸ் கார் ஏற்கனவே சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. கியா கேரன்ஸ் எம்பிவி காரில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் என இரண்டு வகையான இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

நாம எதிர்பார்த்தது நடந்திருச்சு... கியா நிறுவனத்தின் புதிய காரின் பெயர் இதுதான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இதில் விலை குறைவான வேரியண்ட்களில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும், விலை உயர்ந்த வேரியண்ட்களில் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் டிசம்பர் 16ம் தேதிக்கு பிறகுதான் நமக்கு உறுதியான தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாம எதிர்பார்த்தது நடந்திருச்சு... கியா நிறுவனத்தின் புதிய காரின் பெயர் இதுதான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆனால் இந்த இரண்டு டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டங்களும் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை சப்போர்ட் செய்யக்கூடியதாக இருக்கும். இதுதவிர கியா கேரன்ஸ் காரில், க்ரூஸ் கண்ட்ரோல், யுவோ கனெக்டட் கார் தொழில்நுட்பம், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், கீலெஸ் எண்ட்ரி, எலெக்ட்ரிக் சன்ரூப் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் உள்ளிட்ட வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாம எதிர்பார்த்தது நடந்திருச்சு... கியா நிறுவனத்தின் புதிய காரின் பெயர் இதுதான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அதே நேரத்தில் கியா நிறுவனத்தின் மற்ற கார்களில் வழங்கப்பட்டுள்ள இன்ஜின் தேர்வுகளைதான் கேரன்ஸ் கார் பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான இன்ஜின் தேர்வுகளும் கியா கேரன்ஸ் காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதன்படி கியா கேரன்ஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படலாம்.

நாம எதிர்பார்த்தது நடந்திருச்சு... கியா நிறுவனத்தின் புதிய காரின் பெயர் இதுதான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் கியா நிறுவனத்திடம் நிறைய பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் இருக்கின்றன. இதன்படி 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின், 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் என கியா நிறுவனத்திடம் நிறைய பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் உள்ளன.

நாம எதிர்பார்த்தது நடந்திருச்சு... கியா நிறுவனத்தின் புதிய காரின் பெயர் இதுதான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மேலும் ஹூண்டாய் நிறுவனத்தின் 2.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜினும் வேறு இருக்கிறது. ஆனால் இதில் எந்தெந்த பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளை கியா நிறுவனம் கேரன்ஸ் காரில் பயன்படுத்த போகிறது? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த கேள்விகளுக்கு எல்லாம் நமக்கு விரைவில் பதில் கிடைத்து விடும் என்பது உறுதி.

Most Read Articles
English summary
Kia carens name confirmed for new mpv here are all the details
Story first published: Wednesday, December 1, 2021, 18:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X