புதிய அலாய் சக்கரங்கள் & வசதிகளுடன் தயாராகும் 2021 கியா கார்னிவல்!! விபரங்கள் கசிந்தன

புதிய அலாய் சக்கரங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள 2021 கியா கார்னிவல் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் ரஷ்லேன் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய அலாய் சக்கரங்கள் & வசதிகளுடன் தயாராகும் 2021 கியா கார்னிவல்!! விபரங்கள் கசிந்தன

தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கியா நடப்பு 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் தனது பிராண்டின் புதிய பாணியை அறிவித்தது. அதன்படி புதிய லோகோ சர்வதேச சந்தைகளில் உள்ள கியா கார்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

புதிய அலாய் சக்கரங்கள் & வசதிகளுடன் தயாராகும் 2021 கியா கார்னிவல்!! விபரங்கள் கசிந்தன

இந்தியாவிலும் இந்த தென் கொரிய நிறுவனம் விற்பனை செய்யும் மற்ற இரு கார்களான செல்டோஸ் மற்றும் சொனெட், பிராண்டின் புதிய லோகோவுடன் ஏற்கனவே அப்டேட் செய்யப்பட்டுவிட்டன. இவற்றை தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்ட கார்னிவல் புதிய லோகோவை பெற்றுவரவுள்ளது.

புதிய அலாய் சக்கரங்கள் & வசதிகளுடன் தயாராகும் 2021 கியா கார்னிவல்!! விபரங்கள் கசிந்தன

செல்டோஸ் & சொனெட் என்ற எஸ்யூவி கார்கள் இரண்டும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. ஆனால் கியாவின் ப்ரீமியம் எம்பிவி காரான கார்னிவல் முழுவதுமாக தயாரிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதிய அலாய் சக்கரங்கள் & வசதிகளுடன் தயாராகும் 2021 கியா கார்னிவல்!! விபரங்கள் கசிந்தன

அப்டேட் செய்யப்பட்ட கார்னிவல் எம்பிவி காரின் வரிசையில் லிமௌசைன் ட்ரிம் ஒன்று புதியதாக சேர்க்கப்பட உள்ளது. இதனால் தற்போது இருக்கும் லிமௌசைன் ட்ரிம் ஆனது லிமௌசைன்+ ஆக அழைக்கப்பட உள்ளது. இந்த புதிய கார்னிவல் லிமௌசைன் வேரியண்ட்டிற்கான முன்பதிவுகள் இந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து துவங்கவுள்ளன.

புதிய அலாய் சக்கரங்கள் & வசதிகளுடன் தயாராகும் 2021 கியா கார்னிவல்!! விபரங்கள் கசிந்தன

அதனை தொடர்ந்து இதன் விலை அடுத்த செப்டம்பரில் அறிவிக்கப்பட உள்ளன. இந்த திருத்தப்பட்ட வேரியண்ட்கள் வரிசையுடன் இந்த எம்பிவி காரில் சில கூடுதல் வசதிகளும் வழங்கப்பட உள்ளன. இதன்படி கார்னிவல் ப்ரெஸ்டிஜ் ட்ரிம்-இல் லெதர் இருக்கைகள் கொடுக்கப்பட உள்ளன.

புதிய அலாய் சக்கரங்கள் & வசதிகளுடன் தயாராகும் 2021 கியா கார்னிவல்!! விபரங்கள் கசிந்தன

இருப்பினும் இதற்கு அடுத்ததாக புதிய லிமௌசைன் ட்ரிம் கொண்டுவரப்படுவதால், இதில் அதனை காட்டிலும் சில ப்ரீமியம் தரத்திலான வசதி வழங்கப்பட உள்ளன. இந்த ப்ரீமியம் வசதிகளில், ப்ரீமியம் லெதரால் அலங்கரிக்கப்பட்ட விஐபி இருக்கைகள், யுவிஒ இணைப்பு கார் தொழிற்நுட்பத்துடன் 8-இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு உள்ளிட்டவை அடங்கலாம்.

புதிய அலாய் சக்கரங்கள் & வசதிகளுடன் தயாராகும் 2021 கியா கார்னிவல்!! விபரங்கள் கசிந்தன

இவை மட்டுமின்றி வைரஸ் பாதுகாப்பான் உடன் காற்று சுத்திகரிப்பான் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கும் பொழுதுப்போக்கு போன்றவற்றையும் அப்டேட் செய்யப்பட்ட கார்னிவலில் எதிர்பார்க்கிறோம். இதற்கடுத்த லிமௌசைன்+ ட்ரிம்-இல் புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள் மற்றும் கூடுதல் காஸ்ட்லீயான தரத்தில் இருக்கைகள் வழங்கப்படும்.

புதிய அலாய் சக்கரங்கள் & வசதிகளுடன் தயாராகும் 2021 கியா கார்னிவல்!! விபரங்கள் கசிந்தன

இந்தியாவில் பிரீமியம், ப்ரெஸ்டீஜ் மற்றும் லிமௌசைன் என்ற மூன்று விதமான ட்ரிம்களில் தற்சமயம் விற்பனை செய்யப்படுகின்ற கியா கார்னிவல் லக்சரி எம்பிவி கார் 7, 8 மற்றும் 9 இருக்கை தேர்வுகளில் கிடைக்கிறது. இவை மூன்றிலும் ஒரே ஒரு 2.2 லிட்டர் சிஆர்டிஐ டீசல் என்ஜின் மட்டும் தான் வழங்கப்படுகிறது.

புதிய அலாய் சக்கரங்கள் & வசதிகளுடன் தயாராகும் 2021 கியா கார்னிவல்!! விபரங்கள் கசிந்தன

அதிகப்பட்சமாக 200 பிஎச்பி மற்றும் 441 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த டீசல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. கிளாசியர் வெள்ளை பேர்ல், அரோரா ப்ளாக் பேர்ல் & இரும்பு சில்வர் என்ற மூன்று நிறத்தேர்வுகளில் கார்னிவலை இந்தியாவில் வாங்கலாம்.

புதிய அலாய் சக்கரங்கள் & வசதிகளுடன் தயாராகும் 2021 கியா கார்னிவல்!! விபரங்கள் கசிந்தன

கார்னிவல் எம்பிவி காரின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.24.95 லட்சத்தில் இருந்து ரூ.33.95 லட்சம் வரையில் உள்ளன. அப்டேட் செய்யப்படும் கார்னிவலின் வேரியண்ட்களின் வரிசை திருத்தியமைக்கப்பட உள்ளதால் இந்த எம்பிவி காரின் வேரியண்ட்கள் அனைத்தின் விலைகளும் மாற்றியமைக்கப்படும்.

புதிய அலாய் சக்கரங்கள் & வசதிகளுடன் தயாராகும் 2021 கியா கார்னிவல்!! விபரங்கள் கசிந்தன

புதிய லிமௌசைன் வேரியண்ட்டின் வருகையால் கார்னிவலின் அதிகப்பட்சமாக விலை மேலும் அதிகரிக்கும். இந்த நிலையில் தற்போதைய கார்னிவலுக்கு ரூ.3.75 லட்சத்தில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனால் கார்னிவலின் ஆரம்ப விலை ரூ.21.2 லட்சமாக குறைந்துள்ளது.

புதிய அலாய் சக்கரங்கள் & வசதிகளுடன் தயாராகும் 2021 கியா கார்னிவல்!! விபரங்கள் கசிந்தன

கார்னிவல் கார்களை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவுகள் தற்சமயம் 2 மாதங்களாக உள்ளன. அப்டேட் செய்யப்பட்ட கார்னிவலை தொடர்ந்து கார்னிவலின் அடுத்த தலைமுறை மாடலையும் இந்தியாவிற்கு கொண்டுவர கியா நிறுவனம் தயாராகி வருகிறது. வெளிநாட்டு சந்தைகளில் கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக விற்பனையில் இருக்கும் அடுத்த தலைமுறை கார்னிவல் இந்தியாவில் அடுத்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம்.

Most Read Articles

மேலும்... #கியா #kia
English summary
2021 Kia Carnival To Get New Features, Alloys & Corporate Logo.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X