விற்பனை பிரதிநிதிகளுடன் வீடியோ காலில் பேசுவதற்கு புதிய மொபைல் செயலியை வெளியிட்டது கியா!

கொரோனா பிரச்னை காரணமாக ஏற்பட்டுள்ள சூழலை மனதில் வைத்து, விற்பனை பிரதிநிதிகளுடன் வீடியோ காலில் பேசுவதற்காக புதிய மொபைல் செயலியை கியா மோட்டார் வெளியிட்டுள்ளது.

விற்பனை பிரதிநிதிகளுன் வீடியோ காலில் பேசுவதற்கு புதிய செயலியை வெளியிட்டது கியா!

கொரொனா இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதால் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தி உள்ளது.

விற்பனை பிரதிநிதிகளுன் வீடியோ காலில் பேசுவதற்கு புதிய செயலியை வெளியிட்டது கியா!

குறிப்பாக, பெரும் முதலீட்டில் செயல்பட்டு வரும் வாகன நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஸ்தாபனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், விற்பனை இழப்பை தவிர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை வாகன நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

விற்பனை பிரதிநிதிகளுன் வீடியோ காலில் பேசுவதற்கு புதிய செயலியை வெளியிட்டது கியா!

அந்த வகையில், கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் சந்தேகங்களை போக்குவதற்கான புதிய முயற்சியை எடுத்துள்ளது. இதற்காக, புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.

விற்பனை பிரதிநிதிகளுன் வீடியோ காலில் பேசுவதற்கு புதிய செயலியை வெளியிட்டது கியா!

Digi Connect என்ற பெயரில் இந்த புதிய மொபைல் செயலியை கியா இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய மொபைல் செயலி மூலமாக ஷோரூமில் உள்ள விற்பனை பிரதிநிதியுடன் வீடியோ காலில் பேச முடியும். அத்துடன், கார் பற்றிய குறிப்பேடு மற்றும் விலை விபரங்களை வாடிக்கையாளர்கள் எளிதாக பெற முடியும்.

விற்பனை பிரதிநிதிகளுன் வீடியோ காலில் பேசுவதற்கு புதிய செயலியை வெளியிட்டது கியா!

கியா நிறுவனத்தின் கார்னிவல், செல்டோஸ் மற்றும் சொனெட் கார்களின் முழு விபரங்களையும் பெறுவதற்கும், 360 டிகிரி கோணத்தில் பார்த்துக் கொள்வதற்குமான வாய்ப்பையும் இந்த செயலி வழங்கும்.

விற்பனை பிரதிநிதிகளுன் வீடியோ காலில் பேசுவதற்கு புதிய செயலியை வெளியிட்டது கியா!

அதாவது, ஷோரூமில் காரை பார்த்து வாங்கும் உணர்வை தரும் வகையில், கார் பற்றிய அனைத்து விபரங்கள், படங்கள், வீடியோ மற்றும் சந்தேகங்களை டீலர் பணியாளர் மூலமாக நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்பை இந்த செயலி வழங்கும்.

விற்பனை பிரதிநிதிகளுன் வீடியோ காலில் பேசுவதற்கு புதிய செயலியை வெளியிட்டது கியா!

புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது குறித்து கியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைமை அதிகாரி தே ஜின் பார்க் கூறுகையில்,"எங்களது நிறுவனத்தின் தாரக மந்திரத்தை பரைசாற்றுவது போலவே இந்த புதுமையான செயலியை அறிமுகம் செய்துள்ளோம் இதன்மூலமாக, கார் வாங்கும் பயணத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் சிறப்பான அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

விற்பனை பிரதிநிதிகளுன் வீடியோ காலில் பேசுவதற்கு புதிய செயலியை வெளியிட்டது கியா!

ஏற்கனவே ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து வாங்கும் வசதியை பல நிறுவனங்கள் வழங்கும் நிலையில், டீலரில் உள்ள விற்பனை பிரதிநிதியுடன் வாடிக்கையாளர்கள் வீடியோ காலில் பேசி வாங்கும் வாய்ப்பை இந்த செயலி தரும். அத்துடன், கொரோனா பிரச்னையால் நேரடியாக ஷோரூம் செல்லாமல், இந்த வசதி மூலமாக எளிதாக வாங்குவதற்கான வாய்ப்பையும் வழங்கும்.

Most Read Articles
English summary
Amid this pandemic, automobile sales have again taken a hit, but Kia India has come up with an innovative system called Digi-Connect to promote the sales of its models in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X