அட இவ்ளோ சூப்பரான காராங்க இது... Tesla Model S இ-காரை பின்னுக்கு தள்ளி கின்னஸ் சாதனை படைத்த Kia EV6!

கியா இவி6 (Kia EV6) மின்சார கார் டெஸ்லா மாடல் எஸ் (Tesla Model S) இ-காரின் சாதனயை முறியடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அட இவ்ளோ சூப்பரான காராங்க இது... Tesla Model S இ-காரை பின்னுக்கு தள்ளி கின்னஸ் சாதனை படைத்த Kia EV6!

கியா நிறுவனத்தின் புகழ்மிக்க கார் மாடல்களில் ஒன்றாக இவி6 இருக்கின்றது. இது ஓர் மின்சார கார் மாடலாகும். இந்த காரே முன்னதாக டெஸ்லா மாடல் எஸ் கார் செய்த கின்னஸ் உலக சாதனையை உடைத்தெறிந்து புதிய வரலாற்று சாதனையைப் படைத்திருக்கின்றது.

அட இவ்ளோ சூப்பரான காராங்க இது... Tesla Model S இ-காரை பின்னுக்கு தள்ளி கின்னஸ் சாதனை படைத்த Kia EV6!

மிகவும் குறைவான நேரங்களை சார்ஜ் செய்யும் நேரமாக பயன்படுத்திக் கொண்டு இக்கார் 4,635 கிமீ தூரத்தைக் கடந்திருக்கின்றது. அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்துள்ள கிழக்கு கடற்கரையில் தொடங்கி லாஸ் ஏஞ்சல்ஸின் மேற்கு கடற்கரை வரையில் பயணித்து இத்தகைய சாதனை கியா இவி6 படைத்திருக்கின்றது.

அட இவ்ளோ சூப்பரான காராங்க இது... Tesla Model S இ-காரை பின்னுக்கு தள்ளி கின்னஸ் சாதனை படைத்த Kia EV6!

7 மணி நேரங்கள் 10 நிமிடங்கள் மற்றும் 1 செகண்டுகளை மட்டுமே மேலே பார்த்த இரு பகுதிகளுக்கும் இடைப்பட தூரத்தைக் கடக்க கியா இவி6 சார்ஜ் செய்யப் பயன்படுத்தியிருக்கின்றது. 4,635 கிமீ எனும் மிக நீண்ட தூரத்தைக் கடப்பதற்காக இத்தகைய மிகக் குறைவான நேரத்தையே மின்சார கார் சார்ஜ் செய்ய பயன்படுத்தியிருக்கின்றது.

அட இவ்ளோ சூப்பரான காராங்க இது... Tesla Model S இ-காரை பின்னுக்கு தள்ளி கின்னஸ் சாதனை படைத்த Kia EV6!

அதேநேரத்தில், இந்த அதிகபட்ச தூரத்தைக் கடக்க கியா இவி6 ஒட்டுமொத்தமாக 7 நாட்கள் வரை எடுத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு முன்னதாக இந்தளவு குறைவான இடைவெளியில் எந்தவொரு காரும் இத்தகைய அதிகபட்ச தூரத்தைக் கடக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், இந்நிகழ்வு ஒட்டுமொத்த மின் வாகன பிரியர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

அட இவ்ளோ சூப்பரான காராங்க இது... Tesla Model S இ-காரை பின்னுக்கு தள்ளி கின்னஸ் சாதனை படைத்த Kia EV6!

இதன் விளைவாக இக்கார் தற்போது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கின்றது. முன்னதாக டெஸ்லா மாடல் எஸ் மின்சார கார், 12 மணி நேரங்கள் 48 நிமிடங்கள் 19 செகண்டுகளை சார்ஜிங் நேரமாக எடுத்துக் கொண்டு இதே இடைவெளியை கடந்து ஆறு வருடங்களுக்கு முன்னர் சாதனைப் படைத்திருந்தது.

அட இவ்ளோ சூப்பரான காராங்க இது... Tesla Model S இ-காரை பின்னுக்கு தள்ளி கின்னஸ் சாதனை படைத்த Kia EV6!

இந்த உலக சாதனையையே தற்போது கியா இவி6 முறியடித்துள்ளது. கியா இவி6 ஓர் க்ராஸோவர் ரக மின்சார வாகனம் ஆகும். இதன் 2022ம் மாடல் மிக விரைவில் ஷோரூம்களில் காட்சியளிக்க இருக்கின்றது. இதற்கு முன்னதாகே இக்கார் வாடிக்கையாளர்களின் மனதைக் கவர தொடங்கியிருக்கின்றது.

அட இவ்ளோ சூப்பரான காராங்க இது... Tesla Model S இ-காரை பின்னுக்கு தள்ளி கின்னஸ் சாதனை படைத்த Kia EV6!

ஆம் தற்போது குறைவான நேரங்களைச் சார்ஜிங்கிற்காக பயன்படுத்தி கின்னஸ் உலக சாதனை படைத்திருப்பது விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் 2022 கியா இவி6 ஆகும். இந்த சாதனையின் வாயிலாக இது உலக மின் வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

அட இவ்ளோ சூப்பரான காராங்க இது... Tesla Model S இ-காரை பின்னுக்கு தள்ளி கின்னஸ் சாதனை படைத்த Kia EV6!

கியா நிறுவனம் இக்காரை அதன் எலெக்ட்ரிக் குளோபல் மாடுலர் பிளாட்பாரத்தில் (Electric-Global Modular Platform) வைத்தே கட்டமைத்திருக்கின்றது. 400v மற்றும் 800v சார்ஜிங் பாயிண்டுகளை சப்போர்ட் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. மேலும், இக்காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 510 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை வழங்கும்.

அட இவ்ளோ சூப்பரான காராங்க இது... Tesla Model S இ-காரை பின்னுக்கு தள்ளி கின்னஸ் சாதனை படைத்த Kia EV6!

இக்காரில் கூடுதல் சிறப்பு வசதியாக அதி-வேக சார்ஜிங் திறன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு வெறும் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் சுமார் 112 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதே நேரத்தில் 18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 330 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்தகைய சூப்பர் திறன்களுடனேயே 2022 கியா இவி6 உருவாக்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
Kia ev6 enters guinness world record hers is full details
Story first published: Thursday, December 2, 2021, 18:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X