வாட்ச் இலவசம்னு சொன்னதும் சொன்னாங்க ஒரு யூனிட்டைகூட விட்டு வைக்கல! இவி6 காரை வாங்க போட்டி போட்ட அமெரிக்கர்கள்!

கியா இவி6 காரை அமெரிக்கர்கள் போட்டி போட்டு வாங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்னதான் இருக்கு அக்காரில் என்பதைப் பார்க்கலாம் வாங்க.

ஆப்பிள் வாட்ச் இலவசம்னு சொன்னதும் சொன்னாங்க ஒரு யூனிட்டைகூட விட்டு வைக்கல... கியா இவி6 காரை வாங்க போட்டி போட்ட அமெரிக்கர்கள்!

விற்பனைக்கு வந்த ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே கியா நிறுவனத்தின் புதுமுக காரொன்று விற்று தீர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கியா இவி6 காரே விற்பனைக்கு வந்த ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் விற்று தீர்ந்த வாகனம் ஆகும்.

ஆப்பிள் வாட்ச் இலவசம்னு சொன்னதும் சொன்னாங்க ஒரு யூனிட்டைகூட விட்டு வைக்கல... கியா இவி6 காரை வாங்க போட்டி போட்ட அமெரிக்கர்கள்!

இந்நிறுவனம் மிக சமீபத்திலேயே இக்காரை அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, விற்பனைக்கான புக்கிங்கையும் தொடங்கியது. இது தொடங்கப்பட்டு ஒரு மணி நேரம் முழுமையடைவதற்குள் அனைத்து கார்களையும் அமெரிக்கர்கள் வாங்கியிருக்கின்றனர்.

ஆப்பிள் வாட்ச் இலவசம்னு சொன்னதும் சொன்னாங்க ஒரு யூனிட்டைகூட விட்டு வைக்கல... கியா இவி6 காரை வாங்க போட்டி போட்ட அமெரிக்கர்கள்!

முதல் கட்டமாக 1,500 அலகுகள் (யூனிட்) கியா இவி6 கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டன. இதனால் புக்கிங் செய்வதில் அமெரிக்கர்கள் இடையே போட்டி நிலவியது. காரை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. வீட்டிலேயே இலவச சார்ஜிங் வசதி ஏற்படுத்திக் கொடுப்பது மற்றும் 1000 kWh வரையில் கட்டணமில்லாமல் சார்ஜிங் நிலையங்களில் சார்ஜ் செய்துகொள்வது ஆகிய சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

ஆப்பிள் வாட்ச் இலவசம்னு சொன்னதும் சொன்னாங்க ஒரு யூனிட்டைகூட விட்டு வைக்கல... கியா இவி6 காரை வாங்க போட்டி போட்ட அமெரிக்கர்கள்!

மேற்கூறிய சலுகைகளில் விருப்பிமில்லை என்றால் ஆப்பிள் வாட்சை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே கியா இவி6 முதல் லாட் அனைத்தும் அமெரிக்க சந்தையில் விற்று தீர்ந்திருக்கின்றன. குறிப்பாக, கியா இவி6 காரை வாங்கிய 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சையே தேர்வு செய்திருக்கின்றனர்.

ஆப்பிள் வாட்ச் இலவசம்னு சொன்னதும் சொன்னாங்க ஒரு யூனிட்டைகூட விட்டு வைக்கல... கியா இவி6 காரை வாங்க போட்டி போட்ட அமெரிக்கர்கள்!

கியா இவி6 ஓர் மின்சார காராகும். இந்த காரை இ-ஜிஎம்பி எனும் பிளாட்பாரத்தில் வைத்து நிறுவனம் கட்டமைத்திருக்கின்றது. கியா இவி6 மின்சார காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 480 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த மாதிரியான அம்சங்கள் இடம் பெற்றிருந்தால் யார் தான் காரை வாங்க போட்டியிட மாட்டாங்க என்கிறீர்களா?, இதைவிட ஸ்பெஷலான அம்சமும் இக்காரில் இருக்கின்றது.

ஆப்பிள் வாட்ச் இலவசம்னு சொன்னதும் சொன்னாங்க ஒரு யூனிட்டைகூட விட்டு வைக்கல... கியா இவி6 காரை வாங்க போட்டி போட்ட அமெரிக்கர்கள்!

அதாவது, இக்காரை வெறும் ஐந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் 112 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இதேபோன்று, 18 நிமிடங்கள் வரை சார்ஜ் செய்தால் 330 கிமீ தூரம் பயணிக்கலாம் என கியா கூறியுள்ளது. இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜ் வசதி கியா இவி6 காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆப்பிள் வாட்ச் இலவசம்னு சொன்னதும் சொன்னாங்க ஒரு யூனிட்டைகூட விட்டு வைக்கல... கியா இவி6 காரை வாங்க போட்டி போட்ட அமெரிக்கர்கள்!

இதுமாதிரியான அம்சங்களே கியா இவி6 உடனடியாக விற்று தீர முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. முதல் பதிப்பு கியா இவி6 மின்சார கார் ஸ்பெஷல் பதிப்புகளை போல் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அக்காரில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆப்பிள் வாட்ச் இலவசம்னு சொன்னதும் சொன்னாங்க ஒரு யூனிட்டைகூட விட்டு வைக்கல... கியா இவி6 காரை வாங்க போட்டி போட்ட அமெரிக்கர்கள்!

முதல் பதிப்பு என்ற பேட்ஜ், ஹெட்-அப் டிஸ்பிளே, ரிமோட் பார்க்கிங் அசிஸ்ட், சன்ரூஃப், 20 இன்ச் வீல், 14 பிரீமியம் தர மெரிடியன் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் இவி6 காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் 576 குதிரை திறன்களை வெளியேற்றக்கூடிய இரட்டை மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இது ஓர் சூப்பர் ஃபாஸ்ட் மின்சார காராகும்.

Most Read Articles

English summary
Kia EV6 Sold Out In Hours In US Market. Read In Tamil.
Story first published: Friday, June 11, 2021, 10:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X