சூசைட் ரக கதவு, 482 கிமீ ரேஞ்ஜ்... அசத்தலான அம்சங்களுடன் முதல் முறையாக தரிசனத்தை வழங்கிய Kia EV9!

கியா (Kia) நிறுவனம் அதன் இவி9 (EV9) கான்செப்ட் மாடலை முதல் முறையாக எல்ஏ வாகன கண்காட்சியில் முதல் முறையாக காட்சிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.

சூசைட் ரக கதவு, 482 கிமீ ரேஞ்ஜ்... அசத்தலான அம்சங்களுடன் முதல் முறையாக தரிசனத்தை வழங்கிய Kia EV9!

கியா நிறுவனம் அதன் இவி9 கான்செப்ட் (முன் மாதிரி) மாடலை முதல் முறையாக காட்சிப்படுத்தியுள்ளது. நடுத்தர அளவுள்ள எஸ்யூவி வாகனமாக இந்த கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. மூன்று வரிசை இருக்கை அமைப்பு இந்த காருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இது, குடும்ப பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு கியா இவி9 கார் உருவாக்கப்பட்டிருப்பதை தெரியப்படுத்துகின்றது.

சூசைட் ரக கதவு, 482 கிமீ ரேஞ்ஜ்... அசத்தலான அம்சங்களுடன் முதல் முறையாக தரிசனத்தை வழங்கிய Kia EV9!

அதே நேரத்தில் இது ஓர் எஸ்யூவி ரக வாகனமாகும். இந்த வாகனத்தில் எக்கசக்க புதுமையான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. லோவ்-பாலி உடல், பின்பக்கத்தில் சூசைட் ரக கதவுகள், பரந்த அளவு உட்பக்கம் ஆகியவற்றை இந்த வாகனம் கொண்டிருக்கின்றது.

சூசைட் ரக கதவு, 482 கிமீ ரேஞ்ஜ்... அசத்தலான அம்சங்களுடன் முதல் முறையாக தரிசனத்தை வழங்கிய Kia EV9!

தற்போது விற்பனையில் இருக்கும் நிறுவனத்தின் டெல்லுரைட் எஸ்யூவி காரின் உருவ அளவில் கியா இவி9 உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை உருவாக்க இ-ஜிஎம்பி (E-GMP) எனும் கட்டமைப்பு தளத்தையே நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இதிலேயே தனது எதிர்கால தயாரிப்புகளை நிறுவனம் கட்டமைக்க இருக்கின்றது.

சூசைட் ரக கதவு, 482 கிமீ ரேஞ்ஜ்... அசத்தலான அம்சங்களுடன் முதல் முறையாக தரிசனத்தை வழங்கிய Kia EV9!

கியா இவி9 மின்சார காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 482 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது உற்பத்தி மாடலாக உருவாக்கப்படும் இதைவிட கூடுதல் ரேஞ்ஜ் திறனில் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், அதிக சக்தி வாய்ந்த டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கின்றது.

சூசைட் ரக கதவு, 482 கிமீ ரேஞ்ஜ்... அசத்தலான அம்சங்களுடன் முதல் முறையாக தரிசனத்தை வழங்கிய Kia EV9!

இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கியா இவி9 எலெக்ட்ரிக் காரை வெறும் 20 முதல் 30 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இத்தகைய அதி வேக சார்ஜிங் திறன் கொண்ட மின்சார காராகவே இவி9 உருவாக்கப்பட்டிருக்கின்றது.

சூசைட் ரக கதவு, 482 கிமீ ரேஞ்ஜ்... அசத்தலான அம்சங்களுடன் முதல் முறையாக தரிசனத்தை வழங்கிய Kia EV9!

ஹூண்டாய் நிறுவனம் அண்மையில் ஐயோனிக் 7 கான்செப்ட் மாடலை வெளியீடு செய்தது. இந்த காரில் இடம் பெற்றிருப்பதைப் போலவே சில பிரத்யேக அம்சங்கள் இவி9 கான்செப்ட் மாடலிலும் இடம் பெற்றிருக்கின்றது. முன் பக்கத்தில் 27 இன்சிலான பெரிய திரை இடம் பெற இருக்கின்றது. காரில் இடம் பெற்றிருக்கும் சில கருவிகளைக் கட்டுப்படுத்த மற்றும் பல்வேறு முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள இந்த பெரிய திரை உதவும்.

சூசைட் ரக கதவு, 482 கிமீ ரேஞ்ஜ்... அசத்தலான அம்சங்களுடன் முதல் முறையாக தரிசனத்தை வழங்கிய Kia EV9!

காரின் முதல் மற்றும் மூன்றாவது வரிசையில் உள்ள இருக்கைகளை 180 டிகிரி சுழற்ற முடியும். இத்துடன், இரண்டாவது வரிசை இருக்கை முழுமையாக மடித்து வைத்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் வாயிலாக தேவைக்கேற்ப காரின் காலி இடத்தை விரிவாக்கம் செய்து கொள்ள முடியும்.

சூசைட் ரக கதவு, 482 கிமீ ரேஞ்ஜ்... அசத்தலான அம்சங்களுடன் முதல் முறையாக தரிசனத்தை வழங்கிய Kia EV9!

இந்த காரில் இடம் பெற்றிருக்கும் சூசைட் கதவை அமர்ந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பன்முக சிறப்பு வசதிகளுடனேயே கியா இவி9 கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு நிலையான மூல பொருட்களால் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

சூசைட் ரக கதவு, 482 கிமீ ரேஞ்ஜ்... அசத்தலான அம்சங்களுடன் முதல் முறையாக தரிசனத்தை வழங்கிய Kia EV9!

தொடர்ந்து, காரின் உட்பக்க தரை போன்ற சில பகுதிகளை போர்த்துவதற்கு மறு சுழற்சி செய்யப்பட்ட மீன் வலைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும், இது மிகவும் அழகிய தோற்றத்தை வழங்குகின்றது. இதேபோல், இதன் தையல்களுக்கு பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்னும் பல சிறப்புகளை தாங்கிய வாகனமாக கியா இவி9 காட்சியளிக்கின்றது. 2021 எல்ஏ ஆட்டோ ஷோவிலேயே இக்காரை நிறுவனம் காட்சிப்படுத்தியிருக்கின்றது. இந்த ஷோவில் ஹூண்டாய் நிறுவனம் அதன் செவன் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.

சூசைட் ரக கதவு, 482 கிமீ ரேஞ்ஜ்... அசத்தலான அம்சங்களுடன் முதல் முறையாக தரிசனத்தை வழங்கிய Kia EV9!

இவ்விரு கார்களின் அறிமுகமும் ஒட்டுமொத்த மின் வாகன பிரியர்களையும் கவர்ந்து இழுக்கும் வகையில் அமைந்துள்ளது. உலகளவில் மின் வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் கியா இவி9 மாதிரியான முற்றிலும் மாறுபட்ட வசதிகள் கொண்ட வாகனங்களின் வருகை இன்னும் பல மடங்கு மின் வாகனங்களுக்கான வரவேற்பை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Kia ev9 concept breaks cover first time here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X