புது கார் வாங்க போறீங்களா? கியா கார்களுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம் அறிவிப்பு... நல்ல வாய்ப்ப நழுவ விடாதீங்க

கியா நிறுவனம் அதன் தயாரிப்புகளின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக புதிதாக இரு வங்கிகளுடன் இணைந்து சிறப்பு கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

புது கார் வாங்க போறீங்களா? கியா கார்களுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம் அறிவிப்பு... இதுக்காக ரெண்டு வங்கி கூட்டணி வச்சிருக்காங்க!

புது கார் வாங்குறதுக்கான திட்டம் போட்டிருக்கீங்களா?, இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் கியா நிறுவன் புதிய நிதியுதவி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக நிறுவனம் இரு தனியார் வங்கிகளுடன் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது.

புது கார் வாங்க போறீங்களா? கியா கார்களுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம் அறிவிப்பு... இதுக்காக ரெண்டு வங்கி கூட்டணி வச்சிருக்காங்க!

ஐசிஐசிஐ மற்றும் யெஸ் வங்கி ஆகியவற்றுடனேயே கியா கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. கியா நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் சொனெட், செல்டோஸ் மற்றும் கார்னிவல் எம்பிவி ஆகிய மூன்று மாடல் கார்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

புது கார் வாங்க போறீங்களா? கியா கார்களுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம் அறிவிப்பு... இதுக்காக ரெண்டு வங்கி கூட்டணி வச்சிருக்காங்க!

இந்த மூன்று கார்களின் பக்கமே மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக நிறுவனம் புதிதாக இரு வங்கிகளுடன் இணைந்து, புதிய நிதியுதவி திட்டத்தை அறிவித்துள்ளது. பன்முக மறு கட்டண தேர்வு, சிறப்பு சலுகைகள் ஆகிவற்றை இதன் வாயிலாக நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

புது கார் வாங்க போறீங்களா? கியா கார்களுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம் அறிவிப்பு... இதுக்காக ரெண்டு வங்கி கூட்டணி வச்சிருக்காங்க!

ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து வழங்கப்படும் திட்டங்கள்:

கியா-ஐசிஐசிஐ கூட்டணியின் வாயிலாக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் முதல் சலுகை, செல்டோஸ் மற்றும் சொனட் கார் வாடிக்கையாளர்கள் தங்களின் முதல் ஆறு மாத கால தவனையாக ஒரு லட்ச ரூபாவுக்கு 767 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது கார் வாங்க போறீங்களா? கியா கார்களுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம் அறிவிப்பு... இதுக்காக ரெண்டு வங்கி கூட்டணி வச்சிருக்காங்க!

இதன் பின்னர் தேர்வு செய்யப்பட்ட மாதத் தவனையை 7வது மாதத்தில் இருந்து அடுத்தடுத்து வரும் மாதங்களுக்கு செலுத்தினால் போதும் என கூறப்பட்டுள்ளது. இரண்டாவது சலுகை திட்டம், சொகுசு எம்பிவி ரக காராக இருக்கும் கார்னிவல் வாடிக்கையாளர்கள் முதல் ஆறு மாதங்களுக்கு ரூ. 13,999ஐ மட்டும் செலுத்த வேண்டும் என்றும், ஏழாவது மாதத்திற்கு பின்னர் இஎம்ஐ திட்டத்தின்படி தவனை செலுத்தினால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புது கார் வாங்க போறீங்களா? கியா கார்களுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம் அறிவிப்பு... இதுக்காக ரெண்டு வங்கி கூட்டணி வச்சிருக்காங்க!

இரு சிறப்பு சலுகைகளும் அனைத்து எக்ஸ்-ஷோரூம் விலைகளுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஐந்தாண்டுகள் இஎம்ஐ திட்டம், நூறு சதவீத நிதியுதிவி என கூடுதல் தேர்வுகளையும் ஐசிஐசிஐ வங்கி சொனெட், செல்டோஸ் மற்றும் கார்னிவல் காருக்கு அறிவித்துள்ளது.

புது கார் வாங்க போறீங்களா? கியா கார்களுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம் அறிவிப்பு... இதுக்காக ரெண்டு வங்கி கூட்டணி வச்சிருக்காங்க!

யெஸ் வங்கியின் கீழ் வழங்கப்படும் சிறப்பு திட்டங்கள்:

யெஸ் வங்கியின்கீழ் கார்னிவல் காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு 'பூஜ்ஜியம் கவலை' எனும் திட்டத்தை வழங்க இருக்கின்றது. இது எந்தவொரு முன் தொகையும் இன்றி கியா கார்னிவல் காரை வாங்க உதவும். அதாவது, 100 சதவீதம் நிதியுதவி கார்னிவலுக்கு வழங்கப்பட இருக்கின்றது.

புது கார் வாங்க போறீங்களா? கியா கார்களுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம் அறிவிப்பு... இதுக்காக ரெண்டு வங்கி கூட்டணி வச்சிருக்காங்க!

இத்துடன், கியா நிறுவனம் 'அமைதியான மனம்' எனும் சிறப்பு திட்டத்தை அதன் பங்காக கார்னிவல் எம்பிவி கார் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கின்றது. இது தொந்தரவற்ற வாகன பயன்பாட்டை உறுதிப்படுத்த உதவும். இத்துடன் இன்னும் சில சிறப்பு திட்டங்களையும் கியா கார்களுக்கு யெஸ் வங்கி அறிவித்துள்ளது.

புது கார் வாங்க போறீங்களா? கியா கார்களுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம் அறிவிப்பு... இதுக்காக ரெண்டு வங்கி கூட்டணி வச்சிருக்காங்க!

மேலே கூறியதைப் போல் கியா நிறுவனம் செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் ஆகிய கார்களை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது. இதில், சொனெட் எஸ்யூவி ரூ. 6.79 லட்சம் முதல் ரூ. 13.25 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

புது கார் வாங்க போறீங்களா? கியா கார்களுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம் அறிவிப்பு... இதுக்காக ரெண்டு வங்கி கூட்டணி வச்சிருக்காங்க!

இதேபோன்று, நிறுவனத்தின் மற்றுமொரு புகழ்மிக்க மாடலான செல்டோஸ் எஸ்யூவி ரூ. 9.95 லட்சம் தொடங்கி ரூ. 17.65 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இதில், கார்னிவல் எம்பிவிதான் மிக விலையுயர்ந்த கியா தயாரிப்பாக இந்தியாவில் விற்கப்படுகின்றது.

புது கார் வாங்க போறீங்களா? கியா கார்களுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம் அறிவிப்பு... இதுக்காக ரெண்டு வங்கி கூட்டணி வச்சிருக்காங்க!

இந்த மாடலின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 24.95 லட்சம் ஆகும். இதன் உச்ச மாடலின் விலை ரூ. 33.95 லட்சம் ஆகும். மேலே கூறப்பட்ட அனைத்து விலையும் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த விலையிலேயே கியா கார்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

Most Read Articles

English summary
Kia Joins With ICICI & Yes Bank for New Car Finance Offers. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X