Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 9 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவின் எஸ்யூவி கிங் யார்? மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி கியா 2வது இடம்... அப்போ முதல் இடம் யாருக்கு?
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு அதிக எஸ்யூவி கார்களை விற்பனை செய்த முதல் மூன்று நிறுவனங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு 1.35 லட்சம் எஸ்யூவிக்களை கியா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கடந்த ஆண்டு அதிக எஸ்யூவிக்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் கியா மோட்டார்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்திய சந்தையில் கால் பதித்த இரண்டாவது ஆண்டிலேயே இந்த சாதனையை கியா மோட்டார்ஸ் நிகழ்த்தியுள்ளது.

2019ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட செல்டோஸ் எஸ்யூவிக்கும், 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சொனெட் எஸ்யூவிக்கும்தான் இதற்கு கியா மோட்டார்ஸ் நன்றி சொல்ல வேண்டும். இந்த 2 எஸ்யூவிக்களின் சிறப்பான விற்பனை காரணமாக, இந்தியாவில் அதிக எஸ்யூவிக்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி கியா 2வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு அதிக எஸ்யூவிக்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் ஹூண்டாய் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 1.80 லட்சம் எஸ்யூவிக்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. இதற்கு அடுத்த இரண்டாவது இடத்தை கியா மோட்டார்ஸ் கைப்பற்றியுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மற்றும் வெனியூ எஸ்யூவிக்கள் ஒவ்வொரு மாதமும் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் புதிய தலைமுறை மாடலின் வருகைக்கு பின்னர் கிரெட்டா எஸ்யூவியின் விற்பனை அமோகமாக உள்ளது.

இதற்கிடையே இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு அதிக எஸ்யூவிக்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் மஹிந்திரா நிறுவனம் 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் 1.30 லட்சம் எஸ்யூவிக்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. இந்தியாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்டான மஹிந்திரா, கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எழுச்சியால் சற்றே பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு ஹூண்டாய் மற்றும் கியா மோட்டார்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட எஸ்யூவிக்களை விற்பனை செய்து அசத்தியுள்ளன. இது மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கை என்பதில் துளி கூட சந்தேகமே இல்லை.

அதிலும் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்த உடனேயே கியா மோட்டார்ஸ் நிறுவனம் செய்துள்ள இந்த சாதனை பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை மிக சரியாக புரிந்து கொண்டு கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதே இதற்கு காரணமாக உள்ளது.

செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய எஸ்யூவிக்கள் தவிர கார்னிவல் எம்பிவியையும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. ஆனால் கார்னிவல் பிரீமியம் மாடல் என்பதால், அதன் விற்பனை எண்ணிக்கை பிரம்மாண்டமானதாக உள்ளது. இருந்தாலும் விலை உயர்ந்த கார் என்னும் நிலையிலும், அதற்கு ஏற்ற விற்பனை எண்ணிக்கையை கார்னிவல் பதிவு செய்து வருகிறது.