கியா பிராண்டில் புதிய எம்பிவி காரா?! 2022ல் அறிமுகமாகுகிறது, இதுதான் பெயரா?

2022ல் புதிய நடுத்தர-அளவு எம்பிவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதை கியா நிறுவனம் இப்போதே உறுதிப்படுத்தியுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கியா பிராண்டில் புதிய எம்பிவி காரா?! 2022ல் அறிமுகமாகுகிறது, இதுதான் பெயரா?

கடந்த 2019ஆம் ஆண்டில் செல்டோஸ் எஸ்யூவியின் மூலம் தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நுழைந்தது. அதன்பின் இந்த நிறுவனத்தில் இருந்து இந்திய சந்தைக்கான முதல் எம்பிவி காராக கார்னிவல் அறிமுகமானது.

கியா பிராண்டில் புதிய எம்பிவி காரா?! 2022ல் அறிமுகமாகுகிறது, இதுதான் பெயரா?

இவற்றை தொடர்ந்து போட்டி மிகுந்த காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் சொனெட் மாடலின் மூலம் விரைவாகவே நுழைய திட்டமிட்ட கியா நிறுவனத்திற்கு கொரோனா வைரஸினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் பெரும் தடையாக அமைந்தன.

கியா பிராண்டில் புதிய எம்பிவி காரா?! 2022ல் அறிமுகமாகுகிறது, இதுதான் பெயரா?

இதனால் திட்டமிட்டதில் இருந்து சிறிது தாமதமாகி கடந்த 2020 இறுதியில்தான் இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது. இருப்பினும் எதிர்பார்த்தப்படி இந்த கியா காருக்கு நல்லப்படியான வரவேற்பு இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்து வருகிறது.

கியா பிராண்டில் புதிய எம்பிவி காரா?! 2022ல் அறிமுகமாகுகிறது, இதுதான் பெயரா?

சொனெட்டிற்கு அடுத்து எந்த கார் வெளிவரும் என கியா கார் பிரியர்கள் காத்திருந்த நிலையில் தற்போது கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் மறைப்புடன் புதிய நடுத்தர-அளவு எம்பிவி காரின் படம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கியா பிராண்டில் புதிய எம்பிவி காரா?! 2022ல் அறிமுகமாகுகிறது, இதுதான் பெயரா?

எலக்ட்ரிக் வைக்கல் வெப் என்ற இணையத்தள பக்கத்தின் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான படத்தில் இந்த புதிய எம்பிவி காரின் வருகை அடுத்த 2022 ஜனவரியில் இருக்கும் என குறிப்பிட்டுள்ள கியா நிறுவனம், இந்த புதிய காருக்கு தற்போதைக்கு கேஒய் என்ற குறியீட்டு பெயரை சூட்டியுள்ளது.

கியா பிராண்டில் புதிய எம்பிவி காரா?! 2022ல் அறிமுகமாகுகிறது, இதுதான் பெயரா?

தற்போது வெளியாகியுள்ள இந்த ஆவண படங்களின் மூலம் பார்க்கும்போது புதிய கேஒய் எம்பிவி காரை வருடத்திற்கு 50 ஆயிரம் யூனிட்கள் தயாரிக்க கியா திட்டமிட்டுள்ளதை அறிய முடிகிறது. அதேநேரம் கேஒய் காரை வருடத்திற்கு 26,000 யூனிட்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இந்த தென் கொரிய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கியா பிராண்டில் புதிய எம்பிவி காரா?! 2022ல் அறிமுகமாகுகிறது, இதுதான் பெயரா?

கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஆந்திராவில் தொழிற்சாலை உள்ளது. அங்கிருந்துதான் இந்த நிறுவனம் செல்டோஸ், சொனெட் கார்களை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்தும் அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் வருகிறது.

கியா பிராண்டில் புதிய எம்பிவி காரா?! 2022ல் அறிமுகமாகுகிறது, இதுதான் பெயரா?

இதில் சொனெட் வருடத்திற்கு 1 லட்ச யூனிட்களும், சொனெட் 70 ஆயிரம் யூனிட்களும் இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருவதாக இந்த ஆவண படங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா கார்களின் அதே எஸ்பி2 ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில்தான் கியா கேஒய் எம்பிவி காரும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா பிராண்டில் புதிய எம்பிவி காரா?! 2022ல் அறிமுகமாகுகிறது, இதுதான் பெயரா?

இதனால் செல்டோஸில் வழங்கப்படுகின்ற பிரபலமான 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகள் இந்த காரிலும் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் கியாவின் கேஒய் எம்பிவி காருக்கு மாருதி சுஸுகி எர்டிகா, மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் டொயோட்டா இன்னோவா போன்றவை போட்டியினை தர தயாராகவுள்ளன.

Most Read Articles
English summary
Kia's mid-size MPV for India codenamed KY
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X