திருப்தி இல்லைனா பணம் வாபஸ்... கார்னிவல் காருக்கு அதிரடி திட்டத்தை அறிவித்தது கியா!

கார்னிவல் எம்பிவி காருக்கு ஒரு புதுமையான திட்டத்தை கியா இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, காரில் திருப்தி இல்லாவிட்டால், பணத்தை வாபஸ் பெறும் திட்டத்தை அந்நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

திருப்தி இல்லாட்டி பணம் வாபஸ்... கார்னிவல் காருக்கு அதிரடி திட்டத்தை அறிவித்தது கியா!

இந்தியாவின் சிறந்த எம்பிவி ரக கார்களில் ஒன்றாக கியா கார்னிவல் மாறி இருக்கிறது. அதிக இருக்கைகள் கொண்ட சொகுசான எம்பிவி கார் மாடலாக பெயர் எடுத்துள்ளது. ஆனால், எக்குத்தப்பாக, ஃபுல் சைஸ் எஸ்யூவி கார்களால் விலை அடிப்படையிலும், நடைமுறை பயன்பாட்டு அடிப்படையிலும் கார்னிவல் காருக்கு அதிக சந்தைப் போட்டி இருந்து வருகிறது.

திருப்தி இல்லாட்டி பணம் வாபஸ்... கார்னிவல் காருக்கு அதிரடி திட்டத்தை அறிவித்தது கியா!

இதனை மனதில் வைத்து, கார்னிவல் காருக்கு அதிக மதிப்பை வழங்கும் வகையில் ஒரு புதுமையான திட்டத்தை கியா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், சில எளிய நிபந்தனைகளும் உண்டு.

திருப்தி இல்லாட்டி பணம் வாபஸ்... கார்னிவல் காருக்கு அதிரடி திட்டத்தை அறிவித்தது கியா!

இதன்படி, புதிய கார்னிவல் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, காரில் திருப்தி ஏற்படாவிட்டால் 30 நாட்களில் 95 சதவீத தொகையை திரும்ப அளிப்பதாக உறுதி தெரிவித்துள்ளது. எக்ஸ்ஷோரூம் விலை, பதிவுக் கட்டணம் உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்கள் திரும்ப பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்தி இல்லாட்டி பணம் வாபஸ்... கார்னிவல் காருக்கு அதிரடி திட்டத்தை அறிவித்தது கியா!

இந்த திட்டம் 'Satisfaction Gurantee Scheme' என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கார் 1,500 கிமீ தூரத்திற்கு மிகாமல் ஓடி இருக்க வேண்டும். கடனில் கார் வாங்கப்பட்டிருக்கும் பட்சத்தில், கடன் நிறுவனத்திடம் இருந்து NOC வாங்கித் தர வேண்டும் ஆகிய நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

திருப்தி இல்லாட்டி பணம் வாபஸ்... கார்னிவல் காருக்கு அதிரடி திட்டத்தை அறிவித்தது கியா!

கியா கார்னிவல் காருக்கான இந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் சிறந்த மதிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கியா கார்னிவல் கார் பிரிமீயம், பிரஸ்டீஜ் மற்றும் லிமோசின் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

திருப்தி இல்லாட்டி பணம் வாபஸ்... கார்னிவல் காருக்கு அதிரடி திட்டத்தை அறிவித்தது கியா!

கியா கார்னிவல் கார் ரூ.24.95 லட்சம் முதல் ரூ.33.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த கார் சிறப்பான இடவசதியுடன் அதிக சொகுசான அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

திருப்தி இல்லாட்டி பணம் வாபஸ்... கார்னிவல் காருக்கு அதிரடி திட்டத்தை அறிவித்தது கியா!

புதிய கியா கார்னிவல் காரில் 200 எச்பி பவரை வழங்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. 440 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles

English summary
Kia is offering a special scheme for Carnival with 30 day return price.
Story first published: Wednesday, May 26, 2021, 19:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X