கிராவிட்டி எடிசன் மட்டுமில்லங்க... கியா செல்டோஸில் அறிமுகமாகும் ஐஎம்டி கியர்பாக்ஸ்!!

இந்த ஏப்ரல் மாதம் முடிவதற்குள்ளாக கியா செல்டோஸில் ஐஎம்டி எச்டிகே+ மற்றும் டர்போ ஜிடிஎக்ஸ் (O) மேனுவல் ட்ரிம்கள் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை இனி தொடர்ந்து பார்ப்போம்.

கிராவிட்டி எடிசன் மட்டுமில்லங்க... கியா செல்டோஸில் அறிமுகமாகும் ஐஎம்டி கியர்பாக்ஸ்!!

இந்தியாவில் கியா நிறுவனம் செல்டோஸின் கிராவிட்டி எடிசனை விற்பனைக்கு கொண்டுவர தயாராகி வருகிறது. வருகிற ஏப்ரல் 27ல் செல்டோஸ் கிராவிட்டி எடிசன் அறிமுகமாகவுள்ளது.

கிராவிட்டி எடிசன் மட்டுமில்லங்க... கியா செல்டோஸில் அறிமுகமாகும் ஐஎம்டி கியர்பாக்ஸ்!!

இந்த ஸ்பெஷல் எடிசன் மட்டுமின்றி இரு புதிய ட்ரிம் நிலைகளும் இந்த கியா காரில் கொண்டுவரப்பட உள்ளதாக தற்போது செய்திகள் வெளிவர துவங்கியுள்ளன. இந்த இரு ட்ரிம் நிலைகளில் ஒன்றின் மூலம் ஐஎம்டி (இண்டெலிஜண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்) செல்டோஸில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இந்த செய்திகள் கூறுகின்றன.

கிராவிட்டி எடிசன் மட்டுமில்லங்க... கியா செல்டோஸில் அறிமுகமாகும் ஐஎம்டி கியர்பாக்ஸ்!!

இவற்றின்படி பார்த்தால், இந்த க்ளட்ச் இல்லா மேனுவல் கியர்பாக்ஸ் எச்டிகே+ வேரியண்ட்டில் வழங்கப்பட உள்ளது. இந்த வேரியண்ட்டில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

கிராவிட்டி எடிசன் மட்டுமில்லங்க... கியா செல்டோஸில் அறிமுகமாகும் ஐஎம்டி கியர்பாக்ஸ்!!

புதிய 6-ஸ்பீடு ஐஎம்டி கியர்பாக்ஸ் உடன் வழக்கமான 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடனும் எச்டிகே+ வேரியண்ட் தொடர்ந்து விற்பனைக்கு கிடைக்கும். இந்த ட்ரான்ஸ்மிஷனின் அறிமுகத்துடன் கியா செல்டோஸின் டர்போ என்ஜின் தேர்வில் டாப் வேரியண்ட் ஒன்றும் கொண்டுவரப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கிராவிட்டி எடிசன் மட்டுமில்லங்க... கியா செல்டோஸில் அறிமுகமாகும் ஐஎம்டி கியர்பாக்ஸ்!!

இந்த புதிய வேரியண்ட் ஜிடிஎக்ஸ் (O) என அழைக்கப்படலாம். தற்போது இருக்கும் டாப் வேரியண்ட்டான ஜிடிஎக்ஸ்+ -இல் வழங்கப்படும் அதே டர்போ & மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் தான் இந்த புதிய டாப் வேரியண்ட்டிலும் வழங்கப்படுமாம்.

கிராவிட்டி எடிசன் மட்டுமில்லங்க... கியா செல்டோஸில் அறிமுகமாகும் ஐஎம்டி கியர்பாக்ஸ்!!

செல்டோஸ் ஜிடிஎக்ஸ்+ -இன் விலை ரூ.16.5 லட்சத்தில் உள்ளது. இதனால் புதிய ஜிடிஎக்ஸ் (O) வேரியண்ட்டின் விலை ரூ,17 லட்சத்திற்கும் அதிகமாகவே நிர்ணயிக்கப்படும். இவற்றுடன் கியா செல்டோஸ் சில புதிய வசதிகளையும் பெறலாம் என்று எதிர்பார்க்கிறோம்.

கிராவிட்டி எடிசன் மட்டுமில்லங்க... கியா செல்டோஸில் அறிமுகமாகும் ஐஎம்டி கியர்பாக்ஸ்!!

இந்த அதிரடியான மாற்றங்களுக்கு காரணம், கியா நிறுவனத்தின் புதிய லோகோ செல்டோஸ் கார்களில் கொண்டுவரப்பட உள்ளது. தற்சமயம் கியா செல்டோஸில் மூன்று என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

கிராவிட்டி எடிசன் மட்டுமில்லங்க... கியா செல்டோஸில் அறிமுகமாகும் ஐஎம்டி கியர்பாக்ஸ்!!

இவை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின். மூன்று என்ஜின் உடனும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வை பெறலாம். அதேநேரம் ஒவ்வொரு என்ஜின்களுக்கும் ஒவ்வொரு விதமாக சிவிடி, 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட்டுள்ளன.

கிராவிட்டி எடிசன் மட்டுமில்லங்க... கியா செல்டோஸில் அறிமுகமாகும் ஐஎம்டி கியர்பாக்ஸ்!!

செல்டோஸின் தற்போதைய ஜிடிஎக்ஸ்+ ட்ரிம்-இல் 10.25 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், யுவிஒ இணைப்பு கார் தொழிற்நுட்பம், ஓட்டுனருக்கு தகவல்களை வழங்க 7 இன்ச்சில் திரை மற்றும் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.

Most Read Articles
மேலும்... #கியா #kia
English summary
Kia planning to introduce iMT gearbox option in Seltos. Read In Tamil.
Story first published: Thursday, April 15, 2021, 1:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X