செல்டோஸில் புதிய எக்ஸ்-லைன் வேரியண்ட்!! அறிமுகப்படுத்த தயாராகும் கியா நிறுவனம்!

2021 கியா செல்டோஸ் எக்ஸ் லைன் காரின் டீசர் படம் ஒன்று அதன் இந்திய அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. இதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

செல்டோஸில் புதிய எக்ஸ்-லைன் வேரியண்ட்!! அறிமுகப்படுத்த தயாராகும் கியா நிறுவனம்!

2019ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் நுழைந்த தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் கார் பிராண்டாக உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து முதலாவதாக அறிமுகப்படுத்தப்பட்ட செல்டோஸுற்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதே இதற்கு முக்கிய காரணமாகும்.

செல்டோஸில் புதிய எக்ஸ்-லைன் வேரியண்ட்!! அறிமுகப்படுத்த தயாராகும் கியா நிறுவனம்!

அதன்பின் பிரீமியம் ரக எம்பிவி காராக கார்னிவலையும், பலத்த போட்டி மிகுந்த காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் சொனெட்டையும் கியா அறிமுகப்படுத்தியது. முதன்முதலாக அறிமுகமானதில் இருந்து தற்போது வரையில் கிட்டத்தட்ட 3 லட்ச கார்களை இந்த தென்கொரிய நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

செல்டோஸில் புதிய எக்ஸ்-லைன் வேரியண்ட்!! அறிமுகப்படுத்த தயாராகும் கியா நிறுவனம்!

இந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி கார் 2019 ஆகஸ்ட் 22ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகையில் பார்த்தோமேயானால், இன்னும் சில நாட்களில் இந்திய சந்தையில் இரண்டாம் வருடத்தை செல்டோஸ் நிறைவு செய்யவுள்ளது.

செல்டோஸில் புதிய எக்ஸ்-லைன் வேரியண்ட்!! அறிமுகப்படுத்த தயாராகும் கியா நிறுவனம்!

இந்த நிலையில் தான் தற்போது கியா இந்தியா நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கங்களில் புதிய செல்டோஸ் வேரியண்ட் தொடர்பான டீசர் படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் 'விரைவில் ஒன்று கட்டவிழ்த்து விடப்பட உள்ளது. ப்ராஜெக்ட் எக்ஸ் வெளியீடு விரைவில்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

செல்டோஸில் புதிய எக்ஸ்-லைன் வேரியண்ட்!! அறிமுகப்படுத்த தயாராகும் கியா நிறுவனம்!

செல்டோஸ் டேக் உடன் இந்த பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளதாலும், திட்டம் எக்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ளதினாலும், செல்டோஸ் எக்ஸ்-லைன் காரை பற்றி தான் கியா கூறுகிறது என்பது தெளிவாகிறது. செல்டோஸ் எக்ஸ்-லைன் கான்செப்ட் மாடலை கடந்த ஆண்டு துவக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் கியா நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

செல்டோஸில் புதிய எக்ஸ்-லைன் வேரியண்ட்!! அறிமுகப்படுத்த தயாராகும் கியா நிறுவனம்!

கடந்த ஆண்டில் இந்தியாவில் செல்டோஸின் முதல் ஆண்டு நிறைவை கொண்டாடும் விதத்தில், செல்டோஸில் ஆண்டு நிறைவு எடிசனை கியா அறிமுகப்படுத்தி இருந்தது. தற்போது இரண்டாம் ஆண்டு நிறைவு பெறவுள்ளதால், 2021 செல்டோஸ் எக்ஸ் லைன் அல்லது ப்ராஜெக்ட் எக்ஸ் எடிசனை கியா அறிமுகப்படுத்தலாம்.

செல்டோஸில் புதிய எக்ஸ்-லைன் வேரியண்ட்!! அறிமுகப்படுத்த தயாராகும் கியா நிறுவனம்!

தோற்றத்தில் கியா செல்டோஸ் ப்ராஜெக்ட் எக்ஸ் எடிசன் கிட்டத்தட்ட ஆட்டோ எக்ஸ்போவில் நிறுத்தப்பட்ட செல்டோஸ் எக்ஸ்-லைன் காரையே ஒத்து காணப்படும். மற்றப்படி இந்த புதிய செல்டோஸ் காரை குறித்த வேறெந்த தகவலும் தற்போதைக்கு இல்லை. நடப்பு 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் கியா தனது பெயரை கியா மோட்டார்ஸில் இருந்து வெறும் 'கியா'-வாக மாற்றி கொண்டது மட்டுமில்லாமல் பிராண்டின் புதிய லோகோவையும் அறிமுகப்படுத்தியது.

செல்டோஸில் புதிய எக்ஸ்-லைன் வேரியண்ட்!! அறிமுகப்படுத்த தயாராகும் கியா நிறுவனம்!

புதிய செல்டோஸ் கார் தான் கியாவின் புதிய லோகோவை இந்தியாவில் முதலாவதாக பெற்றது. அதனை தொடர்ந்து சொனெட்டில் புதிய கியா பிராண்ட் லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது. கார்னிவல் எம்பிவி காரில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை, விரைவில் கொண்டுவரப்பட உள்ளது.

செல்டோஸில் புதிய எக்ஸ்-லைன் வேரியண்ட்!! அறிமுகப்படுத்த தயாராகும் கியா நிறுவனம்!

தோற்றத்தில் மட்டுமே சற்று வித்தியாசத்தை கொண்டிருக்குமே தவிர்த்து புதிய ப்ராஜெக்ட் எக்ஸ் செல்டோஸ் காரின் என்ஜின் தேர்வில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. இதனால் வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளையே இந்த புதிய வேரியண்ட்டிலும் கியா நிறுவனம் வழங்கும்.

செல்டோஸில் புதிய எக்ஸ்-லைன் வேரியண்ட்!! அறிமுகப்படுத்த தயாராகும் கியா நிறுவனம்!

கியா செல்டோஸில் தற்சமயம் மூன்று விதமான என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 114 எச்பி பவரையும் 1.4 லிட்டர் ஜிடிஐ டர்போ பெட்ரோல் என்ஜின் 138 எச்பி பவரையும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 114 எச்பி-ஐயும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

செல்டோஸில் புதிய எக்ஸ்-லைன் வேரியண்ட்!! அறிமுகப்படுத்த தயாராகும் கியா நிறுவனம்!

இவற்றுடன் என்ஜின்களை பொறுத்து 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர், சிவிடி அல்லது 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. தொழிற்நுட்ப சிறப்பம்சங்களாக ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதியை கண்காணிக்கும் அமைப்பு மற்றும் 8 இன்ச் ஹெட்ஸ் அப் திரை உள்ளிட்டவற்றை செல்டோஸ் பெறுகிறது.

செல்டோஸில் புதிய எக்ஸ்-லைன் வேரியண்ட்!! அறிமுகப்படுத்த தயாராகும் கியா நிறுவனம்!

இவற்றுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே & போஸ் சவுண்ட் சிஸ்டத்துடன் 10.25 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மடக்கும் வசதி கொண்ட முன்பக்க இருக்கைகள், 10 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் 360 கோண கேமிரா உள்ளிட்டவையும் இந்த எஸ்யூவி காரில் கியா வழங்குகிறது.

Most Read Articles
மேலும்... #கியா #kia
English summary
Kia Project X Teaser Unveiled, Ahead Of India Launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X