விற்பனையில் கெத்து காட்டும் Kia Seltos... அடேங்கப்பா... ஒரே மாசத்துல இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

இந்திய சந்தையில் கடந்த அக்டோபர் மாதம் எத்தனை கியா செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனையில் கெத்து காட்டும் Kia Seltos... அடேங்கப்பா... ஒரே மாசத்துல இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக செல்டோஸ் (Kia Seltos) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான மிட்-சைஸ் எஸ்யூவி காராக கியா செல்டோஸ் மாறி விட்டது.

விற்பனையில் கெத்து காட்டும் Kia Seltos... அடேங்கப்பா... ஒரே மாசத்துல இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான எஸ்யூவி கார் என்ற பெருமையை கியா செல்டோஸ் பெற்றுள்ளது. கியா நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 10,488 செல்டோஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் கடந்த அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான கியா நிறுவனத்தின் கார் என்ற பெருமையையும் செல்டோஸ் பெற்றுள்ளது.

விற்பனையில் கெத்து காட்டும் Kia Seltos... அடேங்கப்பா... ஒரே மாசத்துல இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

தற்போதைய நிலையில் கியா நிறுவனம் மொத்தம் 3 இன்ஜின் தேர்வுகளுடன் செல்டோஸ் காரை விற்பனை செய்து வருகிறது. 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.4 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என மொத்தம் 3 இன்ஜின் தேர்வுகளுடன் கியா செல்டோஸ் விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனையில் கெத்து காட்டும் Kia Seltos... அடேங்கப்பா... ஒரே மாசத்துல இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. மறுபக்கம் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

விற்பனையில் கெத்து காட்டும் Kia Seltos... அடேங்கப்பா... ஒரே மாசத்துல இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

இதில், அனைத்து இன்ஜின்களுடனும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் ஐவிடி தேர்வுளுடனும் கிடைக்கிறது. மறுபக்கம் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் தேர்வுடனும், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 7 ஸ்பீடு டிசிடி தேர்வுடனும் கிடைக்கும்.

விற்பனையில் கெத்து காட்டும் Kia Seltos... அடேங்கப்பா... ஒரே மாசத்துல இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

வசதிகளை பொறுத்தவரை கியா செல்டோஸ் காரில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்டெண்ட் சிஸ்டம், யுவோ கனெக்டட் கார் தொழில்நுட்பம், மல்டி கலர் ஆம்பியண்ட் லைட்டிங், போஸ் பிரீமியம் 8 ஸ்பீக்கர் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 7 இன்ச் கலர் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை வழங்கப்படுகின்றன.

விற்பனையில் கெத்து காட்டும் Kia Seltos... அடேங்கப்பா... ஒரே மாசத்துல இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

மேலும் முன் பகுதியில் வெண்டிலேட்டட் இருக்கை, க்ரூஸ் கண்ட்ரோல், குரல் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் சன்ரூஃப், மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, பேடில் ஷிஃப்டர்கள், ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் ஆகிய வசதிகளும் கியா செல்டோஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன.

விற்பனையில் கெத்து காட்டும் Kia Seltos... அடேங்கப்பா... ஒரே மாசத்துல இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் எம்ஜி அஸ்டர் உள்ளிட்ட கார்களுடன் கியா செல்டோஸ் போட்டியிட்டு வருகிறது. இதில், ஹூண்டாய் கிரெட்டா காரை தவிர மற்ற அனைத்து கார்களும் சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவை ஆகும்.

விற்பனையில் கெத்து காட்டும் Kia Seltos... அடேங்கப்பா... ஒரே மாசத்துல இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

கியா நிறுவனம் செல்டோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

விற்பனையில் கெத்து காட்டும் Kia Seltos... அடேங்கப்பா... ஒரே மாசத்துல இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

கியா நிறுவனம் இந்திய சந்தையில் செல்டோஸ் தவிர, சொனெட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் கார்னிவல் சொகுசு எம்பிவி ஆகிய கார்களையும் விற்பனை செய்து வருகிறது. இதில், செல்டோஸ் காரை போலவே சொனெட் காரும் விற்பனையில் சாதித்து வருகிறது. மறுபக்கம் கியா கார்னிவல் சற்று விலை உயர்ந்த கார் ஆகும்.

விற்பனையில் கெத்து காட்டும் Kia Seltos... அடேங்கப்பா... ஒரே மாசத்துல இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

அதற்கு ஏற்ப கியா கார்னிவல் காரின் விற்பனை எண்ணிக்கையும் ஓரளவிற்கு சிறப்பாக இருந்து வருகிறது. இந்திய சந்தையில் கியா கார்னிவல் சொகுசு எம்பிவி காருக்கு நேரடி போட்டி என எந்த மாடலும் இல்லை. எனினும் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காரை இதற்கு போட்டியாக ஒப்பிடலாம்.

Most Read Articles
English summary
Kia seltos mid size suv sales report october 2021
Story first published: Monday, November 15, 2021, 18:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X