தடுத்தும் நிற்காமல் சென்ற ஆளில்லா கார்... கண் மூடி திறக்கும் நேரத்தில் அரங்கேறிய கொடுமை! வீடியோ!

ஆளில்லாத புத்தம் புது கார் ஒன்று தடுத்து நிறுத்தியும் நிற்காமல் சென்று விபத்தைச் சந்திக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

தடுத்தும் நிற்காமல் சென்ற ஆளில்லா கார்... கண் மூடி திறக்கும் நேரத்தில் அரங்கேறிய கொடுமை! வீடியோ!

புத்தம் புதிய ஆளில்லா கார் ஒன்று தானாக நகர்ந்து சென்று விபத்துக்குள்ளாவது போன்ற வீடியோக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்று, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று தானாக நகர்ந்து சென்று கீழே விழுவது போன்று சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையவாசிகளை அச்சத்தில் ஆழ்த்தியது.

தடுத்தும் நிற்காமல் சென்ற ஆளில்லா கார்... கண் மூடி திறக்கும் நேரத்தில் அரங்கேறிய கொடுமை! வீடியோ!

இந்த நிலையில் புத்தம் புதிய கார் தானாக நகர்ந்து சென்று விபத்துக்குள்ளாகும் காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. இருசக்கர வாகனம் நகர்ந்து சென்று கீழே விழுந்த நிகழ்வினை இணையவாசிகள் சிலர் அமானுஷ்யம் என்றும், ஒரு சிலர் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் என்றும் கூறி வருகின்றனர். ஆனால், இதுகுறித்த உண்மை நிலவரம் இதுவரை வெளியாகாத நிலையே உள்ளது.

தடுத்தும் நிற்காமல் சென்ற ஆளில்லா கார்... கண் மூடி திறக்கும் நேரத்தில் அரங்கேறிய கொடுமை! வீடியோ!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஷோரூமில் ஓர் மர்ம விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. ஸ்டாக்யார்டு எனப்படும் புதிய கார்களை நிறுத்தி வைக்கப்படும் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட புத்தம் புதிய காரே தானாக நகர்ந்து சென்று விபத்தை சந்தித்திருக்கின்றது.

தடுத்தும் நிற்காமல் சென்ற ஆளில்லா கார்... கண் மூடி திறக்கும் நேரத்தில் அரங்கேறிய கொடுமை! வீடியோ!

இந்த விபத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது பற்றிய முழுமையாக தெரியவில்லை. அதேவேலையில், காரில் ஹேண்ட்பிரேக் போடாத காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஷோரூம் நிர்வாகம் தகவல் தெரிவித்திருக்கின்றது. ஆகையால், இந்த விவகாரத்தில் அமானுஷ்யத்தின் பங்கு இருக்கின்றது என யாராலும் கட்டுக்கதைகள அளந்து விட முடியாது.

தடுத்தும் நிற்காமல் சென்ற ஆளில்லா கார்... கண் மூடி திறக்கும் நேரத்தில் அரங்கேறிய கொடுமை! வீடியோ!

கேரள மாநிலத்தில் உள்ள ஓர் கியா கார் ஷோரூமிலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இந்த ஷோரூம் சாலையை விட சில அடிகள் உயரத்தில் இருப்பதை நம்மால் வீடியோவில் காண முடிகின்றது. மேலும், இது ஓர் சாய்வான அமைப்பைக் கொண்டிருப்பதையும் நம்மால் காண முடிகின்றது.

தடுத்தும் நிற்காமல் சென்ற ஆளில்லா கார்... கண் மூடி திறக்கும் நேரத்தில் அரங்கேறிய கொடுமை! வீடியோ!

இந்த மாதிரியான இடங்களில் வாகனங்களை நிறுத்தும்போது ஹேண்ட் பிரேக் போட்டு நிறுத்துவதே மிக சிறந்தது. இதைச் செய்ய தவறிய காரணத்தினாலேயே இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம்ம என யூகிக்கப்படுகின்றது. திடீர் விபத்தினால் காரின் அடிப்பகுதி மற்றும் பின் பகுதி மிகக் கடுமையாக சேதமடைந்திருக்கின்றது.

தடுத்தும் நிற்காமல் சென்ற ஆளில்லா கார்... கண் மூடி திறக்கும் நேரத்தில் அரங்கேறிய கொடுமை! வீடியோ!

விபத்தைச் சந்தித்தது கியா செல்டோஸ் கார் மாடலாகும். இது உயர் நிலை வேரியண்ட். இதுவே ஆளில்லாத மற்றும் எஞ்ஜின் ஆஃபாகி இருந்த நிலையில் விபத்தைச் சந்தித்திருக்கின்றது. இந்நிகழ்வின் வாயிலாக ஹேண்ட் பிரேக் எந்தளவு முக்கியமானது என்பது தெரிய வந்திருக்கின்றது.

சாய்வான பகுதிகளில் மட்டுமல்ல பார்க்க செய்யும் முன்பு வாகனத்தில் ஹேண்ட் பிரேக்கை போட்டு விட்டு நிறுத்துவது மிகவும் சிறந்தது. இதன் வாயிலாக வீணான விபத்து போன்ற கசப்பான அனுபவங்களை தவிர்க்க முடியும். இல்லையெனில் இதுபோன்ற சாய்வான பகுதிகளில் வாகனங்களை பார்க் செய்வதையாவது தவிர்க்க வேண்டும்.

தடுத்தும் நிற்காமல் சென்ற ஆளில்லா கார்... கண் மூடி திறக்கும் நேரத்தில் அரங்கேறிய கொடுமை! வீடியோ!

இதனைக் கடைப்பிடிக்காத காரணத்தினாலேயே கேரள ஷோரூம் நிர்வாகத்திற்கு தற்போது பெருத்த இழப்பு ஏற்பட்டிருக்கின்றது. கியா நிறுவனம் அண்மையில் அதன் கார்களின் விலையை உயர்த்தியது. செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய கார் மாடல்களின் விலையை நிறுவனம் உயர்த்தியது.

தடுத்தும் நிற்காமல் சென்ற ஆளில்லா கார்... கண் மூடி திறக்கும் நேரத்தில் அரங்கேறிய கொடுமை! வீடியோ!

ரூ. 10 ஆயிரம் தொடங்கி ரூ. 20 ஆயிரம் வரை கார்களின் விலையை நிறுவனம் உயர்த்தியது. இதுபோன்று கியா நிறுவனம் புதிய கார்களின் விலையை உயர்த்துவது இது மூன்றாவது முறையாகும். செப்டம்பர் 4ம் தேதி அன்றே புதிய கார் விலையுயர்வு அறிவிக்கப்பட்டது. சொனெட் மற்றும் செல்டோஸ் ஆகிய இரு கார்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும்.

Most Read Articles

English summary
Kia seltos rolls down and falls from showroom here is full video
Story first published: Friday, October 22, 2021, 18:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X