7 இருக்கை கியா சொனெட் கார் எப்படி இருக்கு?! விவரிக்கும் வீடியோ இதோ...

கியா சொனெட் 7-இருக்கை காரை விவரிக்கும் வீடியோ முதன்முறையாக வெளிவந்துள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

7 இருக்கை கியா சொனெட் கார் எப்படி இருக்கு?! விவரிக்கும் வீடியோ இதோ...

மிக சமீபத்தில் கியா நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட 7-இருக்கை சொனெட் 2+3+2 என்கிற விகிதத்தில் உட்புறத்தில் இருக்கை அமைப்பை பெற்றுள்ளது. இதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசையில் மேசை இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.

7 இருக்கை கியா சொனெட் கார் எப்படி இருக்கு?! விவரிக்கும் வீடியோ இதோ...

இருப்பினும் காரின் நீளம் அதிகரிக்கப்படவில்லை என்பதால், மூன்றாவது இருக்கை வரிசை செல்ல வேண்டுமென்றால், இரண்டாவது வரிசை இருக்கைகளை மடக்கி தான் செல்ல வேண்டியதாக இருக்கிறது. இருப்பினும் இதற்காக பெரிய அளவில் சிரமம் பட தேவையில்லை.

7 இருக்கை கியா சொனெட் கார் எப்படி இருக்கு?! விவரிக்கும் வீடியோ இதோ...

ஒரு தொடுதல் மூலமாகவே இரண்டாவது வரிசையில் உள்ள இருக்கைகளை மடக்கிவிட முடியும். பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், 5-இருக்கை சொனெட்டின் 4120மிமீ நீளத்தில் தான் இந்த 7-இருக்கை மாடலும் உள்ளது.

7 இருக்கை கியா சொனெட் கார் எப்படி இருக்கு?! விவரிக்கும் வீடியோ இதோ...

இருப்பினும் இதன் நீளம் இந்தியாவில் விற்பனையில் உள்ள சப்-4 மீட்டர் சொனெட்டை காட்டிலும் சற்று அதிகமாகும். 7-இருக்கை சொனெட்டின் அகலம் 1790மிமீ, உயரம் 1615மிமீ மற்றும் வீல்பேஸ் 2500மிமீ ஆகும். சர்வதேச சந்தைகளில் உள்ள 5-இருக்கை சொனெட்டும் இதே அளவுகளில் தான் உள்ளது.

7 இருக்கை கியா சொனெட் கார் எப்படி இருக்கு?! விவரிக்கும் வீடியோ இதோ...

இவ்வாறு பரிமாண அளவுகளில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்றாலும், இந்த சொனெட் காரின் எந்தவொரு இருக்கை வரிசையிலும் அமருவது அவ்வளவு சவுகரிய குறைவாக இல்லை என்பது என்ற ஆட்டோநெட்மக்ஸ் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள கீழுள்ள வீடியோவின் மூலம் அறிய முடிகிறது.

Image Courtesy: AutonetMagz

இருப்பினும் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளில் உயரமான நபர்கள் அமருவது சற்று சிரமம் தான். மூன்றாவது வரிசையினால் பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதி முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

7 இருக்கை கியா சொனெட் கார் எப்படி இருக்கு?! விவரிக்கும் வீடியோ இதோ...

இருப்பினும் பயணிகளுக்கு தேவை என்றால் மூன்றாவது இருக்கை வரிசையை முழுமையாக மடக்கி கொண்டு அந்த இடத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்று கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 5-இருக்கை சொனெட்டில் பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 45 லிட்டர்கள் ஆகும்.

7 இருக்கை கியா சொனெட் கார் எப்படி இருக்கு?! விவரிக்கும் வீடியோ இதோ...

ஆனால் 7-இருக்கை சொனெட்டில் இது 10 லிட்டர் குறைவாக 35 லிட்டர்களில் வழங்கப்பட்டுள்ளது. கேபினில் கொண்டுவரப்பட்ட கூடுதல் இட வசதியே இந்த குறைப்பிற்கு காரணமாக இருக்க வேண்டும். தொழிற்நுட்ப அம்சங்களில் 5-இருக்கை வெர்சனுக்கும் இந்த 7-இருக்கை வெர்சனுக்கும் இடையே பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை.

7 இருக்கை கியா சொனெட் கார் எப்படி இருக்கு?! விவரிக்கும் வீடியோ இதோ...

உட்புற கேபினின் தொழிற்நுட்ப அம்சங்கள் மட்டுமின்றி வெளிப்புற தோற்றத்திலும் எந்த வித்தியாசத்தையும் காண முடியவில்லை. அதேபோல் 5-இருக்கை சொனெட்டில் வழங்கப்படும் அதே 1.5 லிட்டர் ஸ்மார்ட்ஸ்ட்ரீம், டிஒஎச்சி, இரட்டை சிவிவிடி யூனிட் தான் 7-இருக்கை வெர்சனிலும் தொடரப்பட்டுள்ளது.

7 இருக்கை கியா சொனெட் கார் எப்படி இருக்கு?! விவரிக்கும் வீடியோ இதோ...

கியா நிறுவனம் 7-இருக்கை சொனெட்டை ஸ்டாண்டர்ட் 7 (எம்டி), ஸ்மார்ட் 7, டைனாமிக் 7 (ஐவிடி) மற்றும் ப்ரீமியர் 7 (ஐவிடி) என்ற வேரியண்ட்களில் இந்தோனிஷியா நாட்டில் தான் தற்போதைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலைகள் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.10.18 லட்சத்தில் இருந்து ரூ.15.11 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #கியா #kia
English summary
Kia Sonet 7 Seater First Look Walkaround Video, 3rd Row Seating, Legroom.
Story first published: Saturday, April 10, 2021, 12:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X