Just In
- 1 hr ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 4 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 5 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 6 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- News
கொரோனா அதிகரிப்பு.. சிஐஎஸ்சிஇ 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Movies
விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் எப்போ ரிலீஸ் தெரியுமா?
- Sports
ஒரு தமிழக வீரர்.. தனியாளாக சிஎஸ்கேவை திணறடித்த ஷாருக்கான்.. ப்பா தரமான ஆட்டம்.. புதிய ஹீரோ!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Lifestyle
கொரோனா தடுப்பூசி குறிப்பாக பெண்களுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கியா சொனெட் காரின் 7 சீட்டர் மாடல் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!
கியா சொனெட் காரின் 7 சீட்டர் மாடல் முதலாவதாக இந்தோனேஷியாவிவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரின் முக்கிய அம்சங்கள் மற்றும் படங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா மோட்டார் நிறுவனத்தின் சொனெட் காருக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த கார் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் சற்றே கூடுதல் நீளம் கொண்ட மாடலாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்தோனேஷியாவில் விற்பனை செய்யப்படும் மாடலும் ஆந்திர மாநிலம் அனந்த்பூரில்தான் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கியா சொனெட் காரின் 7 சீட்டர் மாடல் இந்தோனேஷியாவில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மாடலைவிட சற்று நீளம் கொண்டதாக இருப்பதால், மூன்றாவது வரிசை இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டு 7 சீட்டர் மாடலாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கியா சொனெட் 7 சீட்டர் மாடலானது 3,995 மிமீ நீளம் கொண்டதாக இருக்கும் நிலையில், இந்தோனேஷியாவில் விற்பனை செய்யப்படும் மாடல் 4,120 மிமீ நீளம் கொண்டதாக இருக்கிறது. மேலும், 1,790 மிமீ அகலமும், 1,642 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் 2,500 மிமீ வீல்பேஸ் நீளத்தை பெற்றுள்ளது.

கியா சொனெட் 7 சீட்டர் மாடலுக்கும், 5 சீட்டர் மாடலுக்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை. பூட்ரூம் பகுதியில் சிறியவர்கள் அமர்வதற்கு ஏதுவான மூன்றாவது இருக்கை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய கியா சொனெட் 7 சீட்டர் மாடலில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, வயர்லெஸ் சார்ஜர், உட்புற கூரையில் இடம்பெற்றிருக்கும் ஏசி ப்ளோயர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

இந்த காரில் யுவோ கனெக்ட்டிவிட்டி வசதியும் உள்ளது. இதன்மூலமாக, நேவிகேஷன், கார் குறித்த தரவுகளை பெறும் வசதி, தூரத்தில் இருந்தவாறே காரின் எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் வசதி, கதவுகளை மூடி திறக்கும் வசதிகளை பெற முடியும்.

இந்தோனேஷியாவில் வெளியிடப்பட்டு இருக்கும் கியா சொனெட் காரில் 113 பிஎச்பி பவரையும் 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஐவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த புதிய கியா சொனெட் 7 சீட்டர் மாடல் வருவது குறித்த எந்த தகவலும் இல்லை. அதேநேரத்தில், 7 சீட்டர் மாடல்களுக்கு இந்தியாவிலும் வரவேற்பு கூடி வருவதால், இந்த மாடலை கொண்டு வருவது குறித்து எதிர்காலத்தில் கியா மோட்டார் பரிசீலிக்கும் என்று நம்பலாம்.