ஆந்திராவில் உள்ள ஆலையில் உற்பத்தி... கியா சொனெட் காரின் 7 சீட்டர் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது...

கியா சொனெட் காரின் 7 சீட்டர் வெர்ஷன் விற்பனைக்கு வரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆந்திராவில் உள்ள ஆலையில் உற்பத்தி... கியா சொனெட் காரின் 7 சீட்டர் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது...

கியா நிறுவனம் இந்திய சந்தையில் சொனெட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கியா நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றாக உள்ள சொனெட், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வருகிறது.

ஆந்திராவில் உள்ள ஆலையில் உற்பத்தி... கியா சொனெட் காரின் 7 சீட்டர் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது...

இதற்கிடையே 5 சீட்டர் எஸ்யூவிகளின் 7 சீட்டர் வெர்ஷன்களை விற்பனைக்கு கொண்டு வரும் போக்கு, இந்திய சந்தையில் தற்போது அதிகரித்து வருகிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், புதிய டாடா சஃபாரி ஆகிய கார்களை இதற்கு உதாரணமாக கூறலாம். ஹூண்டாய் நிறுவனம் கூட கிரெட்டா அடிப்படையில் மூன்று வரிசை கொண்ட அல்கஸார் 7 சீட்டர் காரை உருவாக்கியுள்ளது.

ஆந்திராவில் உள்ள ஆலையில் உற்பத்தி... கியா சொனெட் காரின் 7 சீட்டர் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது...

விரைவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ள இந்த எஸ்யூவி, நடப்பாண்டின் மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதேபோல் கியா நிறுவனமும் இந்திய சந்தையில் 5 சீட்டர் எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷனை எதிர்காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதை போல் தெரிகிறது.

ஆந்திராவில் உள்ள ஆலையில் உற்பத்தி... கியா சொனெட் காரின் 7 சீட்டர் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது...

ஆம், கியா நிறுவனம் சொனெட் அடிப்படையிலான 7 சீட்டர் எஸ்யூவி காரை வரும் ஏப்ரல் 8ம் தேதி வெளியிடவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த 7 சீட்டர் எஸ்யூவி முதலில் இந்தோனேஷிய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் எனவும், அதன்பின்தான் ஆசியாவின் மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

ஆந்திராவில் உள்ள ஆலையில் உற்பத்தி... கியா சொனெட் காரின் 7 சீட்டர் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது...

சொனெட் எஸ்யூவியின் இந்திய மாடலை விட, இந்தோனேஷியா மாடல் நீளமானது. இந்தோனேஷியாவில் விற்பனை செய்யப்படும் சொனெட் எஸ்யூவியின் நீளம் 4,120 மிமீ. ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சொனெட் எஸ்யூவியின் நீளம் 3,995 மிமீ மட்டுமே. வரி சலுகைகளை பெறுவதற்காக இந்தியாவில் சப்-4 மீட்டர் ரகத்தில் கியா சொனெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் உள்ள ஆலையில் உற்பத்தி... கியா சொனெட் காரின் 7 சீட்டர் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது...

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சொனெட் காரை விட இந்தோனேஷியாவில் விற்பனை செய்யப்படும் சொனெட் காரின் நீளம் 125 மிமீ அதிகம். என்றாலும் இந்த 2 மாடல்களின் அகலம் (1,790 மிமீ), உயரம் (1,642 மிமீ) மற்றும் வீல்பேஸ் நீளம் (2,500 மிமீ) ஆகியவை ஒன்றுதான். கியா நிறுவனத்திற்கு இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலம் அனந்த்ப்பூர் பகுதியில் தொழிற்சாலை உள்ளது.

ஆந்திராவில் உள்ள ஆலையில் உற்பத்தி... கியா சொனெட் காரின் 7 சீட்டர் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது...

சொனெட் அடிப்படையிலான மூன்று வரிசைகள் கொண்ட புதிய எஸ்யூவி கார் இங்குதான் உற்பத்தி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 7 சீட்டர் வெர்ஷனின் டிசைன், கிட்டத்தட்ட 5 சீட்டர் வெர்ஷனை போலவேதான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. கூடுதலாக இடம்பெறும் 3வது வரிசையில், மேலும் 2 பயணிகளுக்கு கியா எப்படி இடமளிக்கப்போகிறது? என்பதை காண ஆவலாக உள்ளது.

ஆந்திராவில் உள்ள ஆலையில் உற்பத்தி... கியா சொனெட் காரின் 7 சீட்டர் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது...

அதேசமயம் கூடுதலாக சில வசதிகள் வழங்கப்படுமா? என்பது தெரியவில்லை. கியா சொனெட் ஏற்கனவே வசதிகள் நிரம்பிய கார்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் 7 சீட்டர் கியா சொனெட் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுமா? என்பது குறித்து தற்போதைக்கு உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. இதுகுறித்து மொலாடின் செய்தி வெளியிட்டுள்ளது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

English summary
Kia Sonet Based 7-Seater SUV Global Debut On April 8: Here Are All The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X