20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க

20 இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் கார் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை சொனெட் காரை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க

செல்டோஸ் எஸ்யூவி கார் மூலம் இந்திய சந்தையில் நுழைந்த தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் மூன்றாவது மாடலாக சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரை சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க

செல்டோஸிற்கு பிறகு கியாவின் வெற்றிக்கரமான மாடலாக நம் நாட்டு சந்தையில் விளங்கிவரும் சொனெட்டிற்கு அதன் கூர்மையான தோற்றம் மற்றும் அதிகளவிலான தொழிற்நுட்ப வசதிகளினால் முன்பதிவுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க

மற்ற கார்களை போன்று சொனெட்டிற்கும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் சந்தைக்கு பிறகான ஆக்ஸஸரீகளை வழங்கியுள்ளது. அத்தகைய ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட சொனெட் காரின் படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க

இந்த வகையில் 20 இன்ச்சில் சந்தைக்கு பிறகான அலாய் சக்கரங்கள் சொனெட் கார் ஒன்றில் பொருத்தப்பட்டுள்ளது. இண்டர் ஐ ரைடர் என்ற யூடியுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவில் அலாய் சக்கரங்கள் இந்த எஸ்யூவி காரின் தோற்றம் முழுவதையும் மாற்றியுள்ளதை பார்க்க முடிகிறது.

மேலும் இதுதான் 20 இன்ச்சில் அலாய் சக்கரங்களை பெற்ற முதல் கியா சொனெட் கார் ஆகும். ஏனெனில் கியா நிறுவனம் சொனெட்டில் 16 இன்ச் அலாய் சக்கரங்களை தொழிற்சாலையில் பொருத்துகிறது. சந்தைக்கு பிறகான அலாய் சக்கரங்களை தவிர்த்து காரில் வேறெந்த மாற்றத்தையும் உரிமையாளர் கொண்டுவரவில்லை.

20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க

20 இன்ச் சில்வர் அலாய் சக்கரங்கள் 5-ஸ்போக்கில் உள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், சிவப்பு ஹைலைட்களுடன் கருப்பு நிறக்த்தில் உள்ள இந்த சொனெட் காருக்கு இந்த அலாய் சக்கரங்கள் மிகவும் எடுப்பாக உள்ளன. இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது, சொனெட்டின் டாப் ஜிடி லைன் ட்ரிம் ஆகும்.

20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க

இந்த வேரியண்ட்டில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ற இரு என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இதில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க

அதுவே 1.5 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 98 பிஎச்பி மற்றும் 240 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது. இது மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இந்த டீசல் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளாகும்.

20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க

6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் இந்த என்ஜின் 113 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்குகிறது. பெட்ரோல் என்ஜின் 7-ஸ்பீடு டிசிடி மற்றும் ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்படுகிறது.

20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க

qபுதிய அலாய் சக்கரங்களில் குறைவான அளவுகளை கொண்ட டயர்களை ஓட்டுனர் பொருத்தியுள்ளார். சொனெட்டின் ஜிடி லைனின் விலைகள் ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.13.19 லட்சம் வரையில் உள்ளன. இந்த மாடிஃபை பணிகளுக்கு ஆன செலவு குறித்த விபரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

Most Read Articles

மேலும்... #கியா #kia motors
English summary
India’s first modified Kia Sonet with 20 inch alloy wheels looks RAD
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X