50 வருடங்களை நிறைவு செய்யும் லம்போர்கினி கவுண்டாச் எல்பி500!! தற்போதைய ஸ்போர்ட்ஸ் கார்களின் முன்னோடி!

லம்போர்கினி கார் பிரியர்களின் நினைவில் இப்போதும் இருக்கும் கவுண்டாச் கார்களின் அடிப்படை கான்செப்ட் மாடலான கவுண்டாச் எல்பி500 முதன்முதலாக காட்சிப்படுத்தப்பட்டு சுமார் 50 வருடங்கள் உருண்டோடிவிட்டன. லம்போர்கினி நிறுவனத்தில் இந்த கான்செப்ட் மாடலின் தாக்கம் எந்த அளவிற்கு இருந்தது என்பது உள்ளிட்ட விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

50 வருடங்களை நிறைவு செய்யும் லம்போர்கினி கவுண்டாச் எல்பி500!! தற்போதைய ஸ்போர்ட்ஸ் கார்களின் முன்னோடி!

கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்னர் லம்போர்கினி நிறுவனத்தில் இருந்து முதன்முறையாக கவுண்டாச் எல்பி 500 கான்செப்ட் கார், அந்த சமயத்தில், மிகவும் அட்வான்ஸான தோற்றத்தில் 1971 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

50 வருடங்களை நிறைவு செய்யும் லம்போர்கினி கவுண்டாச் எல்பி500!! தற்போதைய ஸ்போர்ட்ஸ் கார்களின் முன்னோடி!

எந்த அளவிற்கு என்றால், இப்போது உள்ள பல ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு கவுண்டாச் எல்பி 500-இன் தோற்றம் அப்போதே சரியான போட்டி அளிக்கக்கூடியதாக இருந்தது. இதன் காரணமாக சில வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் இப்போதும் லம்போர்கினி கவுண்டாச் கார்களை வைத்துள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா.

50 வருடங்களை நிறைவு செய்யும் லம்போர்கினி கவுண்டாச் எல்பி500!! தற்போதைய ஸ்போர்ட்ஸ் கார்களின் முன்னோடி!

1971 ஜெனிவா மோட்டார் கண்காட்சியின் ஹீரோவாக விளங்கிய கவுண்டாச் எல்பி500 கான்செப்ட் காரின் பெயரில் உள்ள எல்பி (LP) என்பது லாங்கிடினல் பொசிஷன் (நீளமான நிலை) என்பதை குறிக்கிறது. இந்த லம்போர்கினி கான்செப்ட் மாடலை இத்தாலியை சேர்ந்த கரோஸ்ஸேரியா பெர்டோன் என்பவர் வடிவமைத்துள்ளார்.

50 வருடங்களை நிறைவு செய்யும் லம்போர்கினி கவுண்டாச் எல்பி500!! தற்போதைய ஸ்போர்ட்ஸ் கார்களின் முன்னோடி!

அவரது ஐடியாவில் உருவான இறக்கை கதவுகள் தற்போதைய காலக்கட்டத்திலும் பல சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில் இருந்து எவ்வளவு முற்போக்கான சிந்தனை உடன் கவுண்டாச் எல்பி500-ஐ அவர் வடிவமைத்துள்ளார் என்று நினைக்கும்போது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

50 வருடங்களை நிறைவு செய்யும் லம்போர்கினி கவுண்டாச் எல்பி500!! தற்போதைய ஸ்போர்ட்ஸ் கார்களின் முன்னோடி!

ஏற்கனவே கூறியதுபோல் கவுண்டாச் எல்பி500 லம்போர்கினியின் கான்செப்ட் மாடலாகும். அதாவது இதன் அடிப்படையில் தான் லம்போர்கினி கவுண்டாச் கார்கள் அதன்பின் உருவாக்கப்பட்டன. எல்பி500-ல் 12-சிலிண்டர் 4971சிசி என்ஜின் பொருத்தப்பட்டது.

50 வருடங்களை நிறைவு செய்யும் லம்போர்கினி கவுண்டாச் எல்பி500!! தற்போதைய ஸ்போர்ட்ஸ் கார்களின் முன்னோடி!

அதிநவீன எலக்ட்ரானிக் இன்ஸ்ட்ரூமெண்டேஷனை கொண்டிருந்த இந்த என்ஜின் அமைப்பிற்கு வெளிப்புற காற்று செல்ல சுறாவின் செதில் வடிவிலான காற்று ஏற்பான்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த என்ஜின் அமைப்புடன் கவுண்டாச் எல்பி500 காரை அதன்பின் தீவிரமாக லம்போர்கினி நிறுவனம் சோதனை செய்தது.

கிட்டத்தட்ட 3 வருடங்களாக இந்த கான்செப்ட் மாடலில் பணியாற்றிய லம்போர்கினி வடிவமைப்பு குழுவினர் முதல் கவுண்டாச் காரை 1974ன் துவக்கத்தில் அறிமுகப்படுத்தினர். அப்போதே லம்போர்கினி கவுண்டாச் எல்பி500-இன் தேவையும் முடிவுக்கு வந்தது.

50 வருடங்களை நிறைவு செய்யும் லம்போர்கினி கவுண்டாச் எல்பி500!! தற்போதைய ஸ்போர்ட்ஸ் கார்களின் முன்னோடி!

1974ல் இருந்து லம்போர்கினி கவுண்டாச் கார்கள் 1999 வரையில் ஐந்து வெவ்வேறான சீரிஸ்களில் விற்பனை செய்யப்பட்டன. வடிவமைப்பு பணிகளில் இருந்த சமயத்தில் பல முறை ஆங்கில பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் காட்சிதந்த கவுண்டாச் எல்பி500, லம்போர்கினி இன்று அடைந்திருக்கும் உயரத்திற்கு முக்கிய பங்கு வகித்தது என்றால் அதில் மாற்று கருத்து இல்லை.

Most Read Articles
English summary
Lamborghini Countach LP 500 turns 50 years old. Still looks 50 years young.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X