நிறைய கார்களை வித்துட்டாங்களாம்! மகிழ்ச்சியில் சொகுசு கார் தயாரிப்பாளர்.. எத்தன யூனிட் தெரிஞ்சா அசந்துருவீங்க!

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி தனது உருஸ் எஸ்யூவி காரின் சமீபத்தியி டெலிவரி நிகழ்வைக் கொண்டாடி வருகின்றது. இதற்கான காரணத்தை இப்பதிவில் காணலாம்.

நிறைய கார் விற்பனை செஞ்சிட்டாங்களாம்! மகிழ்ச்சியில் சொகுசு கார் தயாரிப்பாளர்... எத்தன யூனிட் தெரிஞ்சா அசந்துருவீங்க!!

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் லம்போர்கினி. இந்நிறுவனத்தின் உலக புகழ் பெற்ற லக்சூரி காராக உருஸ் கார் இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த காரையே இந்தியாவில் தாங்கள் அதிகம் விற்பனைச் செய்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் நிறுவனம் கொண்டாடி வருகின்றது.

நிறைய கார் விற்பனை செஞ்சிட்டாங்களாம்! மகிழ்ச்சியில் சொகுசு கார் தயாரிப்பாளர்... எத்தன யூனிட் தெரிஞ்சா அசந்துருவீங்க!!

ஒட்டுமொத்தமாக இதுவரை 100 யூனிட்டுகளை விற்பனைச் செய்ததற்கே இந்த மட்டற்ற மகிழ்ச்சியில் லம்போர்கினி நிறுவனம் மூழ்கியிருக்கின்றது. நிறுவனம் அதன் முதல் உருஸ் எஸ்யூவி காரை கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே நாட்டில் டெலிவரிக் கொடுத்திருந்தது.

நிறைய கார் விற்பனை செஞ்சிட்டாங்களாம்! மகிழ்ச்சியில் சொகுசு கார் தயாரிப்பாளர்... எத்தன யூனிட் தெரிஞ்சா அசந்துருவீங்க!!

இந்த நிலையில், 2021 மார்ச் மாதத்திலேயே இந்நிறுவனம் அதன் 100வது யூனிட்டை நாட்டில் டெலிவரி கொடுக்கின்றது. இதன ஓர் வரலாற்று சாதனையாக பாவித்து தற்போது மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றது லம்போர்கினி. மிக சமீபத்திலேயே இந்நிறுவனம் தனது 10,000மாவது யூனிட் உருஸ் உற்பத்தி நிகழ்வைக் கொண்டாடியது.

நிறைய கார் விற்பனை செஞ்சிட்டாங்களாம்! மகிழ்ச்சியில் சொகுசு கார் தயாரிப்பாளர்... எத்தன யூனிட் தெரிஞ்சா அசந்துருவீங்க!!

கடந்த ஜூலை மாதமே இந்நிகழ்வு அரங்கேறியது. இந்நிலையிலேயே இந்தியாவில் 100வது யூனிட் டெலிவரியைக் கொண்டாடி வருகின்றது. விரைவில் இந்த எண்ணிக்கையை பல மடங்கு உயர்த்தவும் நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது.

நிறைய கார் விற்பனை செஞ்சிட்டாங்களாம்! மகிழ்ச்சியில் சொகுசு கார் தயாரிப்பாளர்... எத்தன யூனிட் தெரிஞ்சா அசந்துருவீங்க!!

லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 650 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. இந்த எஞ்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் இயங்குகின்றது.

நிறைய கார் விற்பனை செஞ்சிட்டாங்களாம்! மகிழ்ச்சியில் சொகுசு கார் தயாரிப்பாளர்... எத்தன யூனிட் தெரிஞ்சா அசந்துருவீங்க!!

இக்காரின் திறன் அனைவரையும் வியக்க வகையில் இருக்கின்றது. லம்போர்கினி உருஸ் கார் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ எனும் வெகத்தை வெறும் 3.6 செகண்டுகளே போதும். மேலும், இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 305 கிமீ ஆகும். இந்த சூப்பர் ஃபாஸ்ட் திறன், கவர்ச்சியான தோற்றம் மற்றும் அட்டகாசமான சொகுசு வசதிகள் ஆகியவற்றின் காரணமாகவே இந்திய பணக்காரர்கள் மத்தியில் இக்கார் பிரபலமடைந்து வருகின்றது.

நிறைய கார் விற்பனை செஞ்சிட்டாங்களாம்! மகிழ்ச்சியில் சொகுசு கார் தயாரிப்பாளர்... எத்தன யூனிட் தெரிஞ்சா அசந்துருவீங்க!!

இதன் விளைவாக இன்று லம்போர்கினி நிறுவனம் உருஸ் 100வது யூனிட்டை இந்தியாவில் டெலிவரி கொடுத்திருக்கின்றது. எந்த மாநிலம், யாருக்கு தனது 100வது உருஸ் காரை டெலிவரி கொடுத்திருக்கின்றது என்பது பற்றிய தகவலை லம்போர்கினி வெளியிடவில்லை.

நிறைய கார் விற்பனை செஞ்சிட்டாங்களாம்! மகிழ்ச்சியில் சொகுசு கார் தயாரிப்பாளர்... எத்தன யூனிட் தெரிஞ்சா அசந்துருவீங்க!!

இருப்பினும், 100 என்ற எண்ணுடன் லம்போர்கினி உருஸ் காரின் புகைப்படத்துடன் 'உருஸ் இன் இந்தியா' என்ற வாசகம் அடங்கிய புகைப்படத்தை நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. 100வது யூனிட் டெலிவரியை முன்னிட்டே இப்புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
Lamborghini Delivered 100th Unit Of The Urus SUV In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X