1970களில் இருந்த அதே கம்பீரத்துடன், மீண்டும் வந்தது லம்போர்கினி கவுண்டாச்!!

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லம்போர்கினி கவுண்டாச் எல்பிஐ 800-4 கார் அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய லம்போர்கினி சூப்பர்காரை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1970களில் இருந்த அதே கம்பீரத்துடன், மீண்டும் வந்தது லம்போர்கினி கவுண்டாச்!!

மிக அரிதான லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காராக விற்பனை செய்யப்பட உள்ள இந்த கவுண்டாச் மாடல் லம்போர்கினியின் கவுண்டாச் எல்பி 400எஸ் காரை நமக்கு நினைவூட்டுகிறது. வெளிப்பக்கத்தில் நீல நிற முத்தின் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள புதிய கவுண்டாச் எல்பிஐ 800-4 கார் உட்புறத்தில் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

1970களில் இருந்த அதே கம்பீரத்துடன், மீண்டும் வந்தது லம்போர்கினி கவுண்டாச்!!

மிகவும் அரிதாக, குறைவான எண்ணிக்கையில் லிமிடெட் எடிசனாக கவுண்டாச் எல்பிஐ 800-4 கார் விற்பனை செய்யப்பட உள்ளதை ஏற்கனவே கூறிவிட்டேன். லம்போர்கினி கவுண்டாச், சூப்பர்கார் என்பதை தாண்டி, என்ஜினியரீங் கண்டுப்பிடிப்புகளிலும், ஸ்டைலிலும் தொடர்ச்சியாக பரிணாம வளர்ச்சியை கண்டுவரும் மாடலாகவும் பார்க்கப்படுகிறது.

1970களில் இருந்த அதே கம்பீரத்துடன், மீண்டும் வந்தது லம்போர்கினி கவுண்டாச்!!

1971இல் இருந்து 1973ஆம் ஆண்டு வரையில் இத்தாலிய கார் வடிவமைப்பாளர் மார்ச்செல்லோ காந்தினியால் வடிவமைக்கப்பட்ட லம்போர்கினி கவுண்டாச்சின் முதல் மாடல், பிளாஸ்டிக் போன்ற அந்த காலத்தில் புதியவைகளாக இருந்த பாகங்களின் மூலம் தயாரிக்கப்பட்டது.

1970களில் இருந்த அதே கம்பீரத்துடன், மீண்டும் வந்தது லம்போர்கினி கவுண்டாச்!!

காரின் எடையை குறைவாக கொண்டுவர இவ்வாறு சில பேனல்கள் பிளாடிக்கால் தயாரிக்கப்பட்டு பொருத்தப்பட்டன. இதனால் காரின் காற்று இயக்கவியல் பண்பு நன்கு சிறப்பானதாக கிடைத்தது. சரி தற்போதைய மாடர்ன் காலக்கட்ட வாடிக்கையாளர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள கவுண்டாச் எல்பிஐ 800-4 காருக்கு வருவோம்.

1970களில் இருந்த அதே கம்பீரத்துடன், மீண்டும் வந்தது லம்போர்கினி கவுண்டாச்!!

லம்போர்கினியின் தற்கால மாடர்ன் டிசைன் மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த லிமிடெட் எடிசன் சூப்பர் காரில் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி12 என்ஜின், ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் சேர்ந்து இந்த கவுண்டாச் காரில் உண்மையான லக்சரி ஸ்போர்ட்ஸ் காரின் பயணத்தை வழங்கும் என்பது மட்டும் உறுதி.

1970களில் இருந்த அதே கம்பீரத்துடன், மீண்டும் வந்தது லம்போர்கினி கவுண்டாச்!!

எலக்ட்ரிக் மோட்டாருடன் இயங்கக்கூடிய இதன் வி12 என்ஜினின் உதவியுடன் கவுண்டாச் எல்பிஐ 800-4 காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் எட்டிவிடலாம். இந்த காரில் மணிக்கு 200கிமீ வேகத்தை அடைய குறைந்தப்பட்சம் 8.6 வினாடிகளே தேவைப்படுமாம்.

1970களில் இருந்த அதே கம்பீரத்துடன், மீண்டும் வந்தது லம்போர்கினி கவுண்டாச்!!

இந்த லம்போர்கினி சூப்பர் காரின் டாப்-ஸ்பீடு 355kmph என்றால் நம்ப முடிகிறதா? இத்தாலி மொழியில் லம்போர்கினி கவுண்டாச் கார்களை ‘கூன்-டாச்' என அழைப்பர். லம்போர்கினியின் பெரும்பான்மையான கார்களின் பெயர்கள் காளைகளுடன் சம்பந்தப்பட்டவைகளாக இருக்கின்றன.

1970களில் இருந்த அதே கம்பீரத்துடன், மீண்டும் வந்தது லம்போர்கினி கவுண்டாச்!!

மிகவும் சில கார்கள் மட்டுமே அதில் இருந்து வேறுப்பட்ட பெயர்களை கொண்டுள்ளன, இதில் கவுண்டாச் மாடலும் ஒன்று. புதிய கவுண்டாச் எல்பிஐ 800-4 காரின் எதிர்காலத்திற்கான தோற்றம் நிச்சயம் வாடிக்கையாளர்கள் பலரை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1970களில் இருந்த அதே கம்பீரத்துடன், மீண்டும் வந்தது லம்போர்கினி கவுண்டாச்!!

கூர்மையான கோணங்கள் மற்றும் முன்பக்கத்தில் இருந்து பின்பக்கம் வரையில் செல்லும் முக்கியமான ஷோல்டர் லைனினால் கவுண்டாச்சின் பாரம்பரியமான தோற்றம் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே கவுண்டாச் கார்களில் லம்போர்கினி வடிவமைப்பாளர்கள் எந்தவொரு எல்லையையும் நிர்ணயித்து கொள்ளலாமல், தங்களது முடிந்த சிறந்த வடிவமைப்பை வழங்க முயற்சிப்பர்.

1970களில் இருந்த அதே கம்பீரத்துடன், மீண்டும் வந்தது லம்போர்கினி கவுண்டாச்!!

இந்த புதிய கவுண்டாச் மாடலிலும் சுற்றிலும் காற்று ஏற்பான்கள் என வாகனத்தின் காற்று இயக்கவியல் பண்பை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டியுள்ளனர் என்பது இந்த படங்களை பார்க்கும்போது தெரிய வருகிறது. எந்த அளவிற்கு என்றால், காற்று துளைகள் பக்கவாட்டு கதவுகளில் கூட வழங்கப்பட்டுள்ளன.

1970களில் இருந்த அதே கம்பீரத்துடன், மீண்டும் வந்தது லம்போர்கினி கவுண்டாச்!!

1980களில் விற்பனையில் இருந்த கவுண்டாச் கார்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக லம்போர்கினி வடிவமைப்பாளர்கள், கவுண்டாச் எல்பிஐ 800-4 காரில் முன்பக்கத்தில் 20 இன்ச்சிலும், பின்பக்கத்தில் 21 இன்ச்சிலும் என அளவில் பெரிய சக்கரங்களை பொருத்தியுள்ளனர். சக்கரங்களில் கார்பன்-பீங்கான் ப்ரேக்குகளும், பைரெல்லி பி ஜீரோ கோர்ஸா டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

1970களில் இருந்த அதே கம்பீரத்துடன், மீண்டும் வந்தது லம்போர்கினி கவுண்டாச்!!

பின்பக்கத்தில் டெயில்லைட்கள் மூன்று யூனிட்களாக கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் பின்பக்க கார்பன் ஃபைபர் டிஃப்யூஸரில் நான்கு வலிமையான எக்ஸாஸ்ட் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்தாலிய ஸ்போர்ட்ஸ் கார் என்பதால் கத்திரிக்கோல் கதவுகளை எப்படி எதிர்பார்க்காமல் இருக்க முடியும்? கவுண்டாச் எல்பிஐ 800-4 காரிலும் இத்தைகைய கதவுகளே வழங்கப்பட்டுள்ளன.

1970களில் இருந்த அதே கம்பீரத்துடன், மீண்டும் வந்தது லம்போர்கினி கவுண்டாச்!!

வெளிப்பக்கத்தில் சிறிது நமக்கு 1970, 80களில் இருந்த லம்போர்கினி கவுண்டாச் கார்களை நினைவுப்படுத்தும் இந்த புதிய கவுண்டாச் கார் உட்புறத்திலும் நமக்கு அத்தகைய உணர்வை தருகிறது. உட்புற கேபினில் மைய கன்சோலில் 8.4 இன்ச்சில் ஆப்பிள் கார்ப்ளே உள்ளிட்ட இணைப்பு வசதிகளை கொண்ட எச்.டி.எம்.ஐ மைய தொடுத்திரை வழங்கப்பட்டுள்ளது.

1970களில் இருந்த அதே கம்பீரத்துடன், மீண்டும் வந்தது லம்போர்கினி கவுண்டாச்!!

இவ்வாறான தோற்றம் மற்றும் தொழிற்நுட்பங்களுக்கு ஏற்ப ஆற்றல்மிக்க வி12 என்ஜினேயே கவுண்டாச் எல்பிஐ 800-4 கார் பெற்றுள்ளது. இந்த வி12 6.5 லிட்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 769.3 பிஎச்பி-ஐ வெளிப்படுத்தக்கூடியது. இதனுடன் காரில் வழங்கப்பட்டுள்ள 48 வோல்ட் எலக்ட்ரிக் மோட்டாரினால் கூடுதலாக 33.53 பிஎச்பி ஆற்றல் கிடைக்கும்.

Most Read Articles

English summary
Lamborghini unveiled new countach limited edition in usa
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X