வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

அண்மையில் லம்போர்கினி நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த எஸ்யூவி ரக காரான உருஸ் மாடலில் அரன்சியோ லியோனிஸ் பியர்ல் கேப்சூல் எடிசன் எனும் புதிய மாடலை காட்சிப்படுத்தியது. இதனை பார்வையிடும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க்கிற்கு கிடைத்தது. முதல் பார்வையிலேயே இந்த கார் எங்களின் பார்வையை மட்டுமல்ல மனதையும் மயக்கிவிட்டது. இந்த கார்குறித்து சுவாரஷ்யமான மற்றும் பிற முக்கிய தகவல்களையே இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

லம்போர்கினி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் உருஸ் எஸ்யூவி ரக காரும் ஒன்று. இந்த கார் மாடலையே சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் புதிய அரன்சியோ லியோனிஸ் பியர்ல் கேப்சூல் எடிசன் எனும் பெயரில் அண்மையில் வெளியீடு செய்தது.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

பியர்ல் கேப்சூல் எடிசனா!! அப்படினா என்ன?, லம்போர்கினி நிறுவனம், இத்தாலியில் சென்ட்ரோ ஸ்டைல் டிசைன் எனும் பிரிவை தனியாக செயல்படுத்தி வருகின்றது. இந்த துறையின் வாயிலாக பிரத்யேகமாக தனிப் பயனாக்கம் செய்யப்பட்ட மாடலே இந்த பியர்ல் கேப்சூல் எடிசன் ஆகும்.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

வாடிக்கையாளர்களின் விருப்பத்தை மனதில் வைத்து இதனை நிறுவனமாகவே கஸ்டமைஸ் செய்திருக்கின்றது. இந்த சிறப்பு பதிப்பு காரையே மிக சமீபத்தில் லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் காட்சிப்படுத்தியது. மும்பையில் உள்ள பிரபாதேவி ஷோரூமில் இக்கார் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

அப்போது, உருஸ் பியர்ல் கேப்சூல் எடிசன் கார்குறித்து பல்வேறு சிறப்பு தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. இதனையே பிரத்யேக இப்பதிவில் நாங்கள் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். காரை காட்சிப்படுத்திய அந்த நேரத்தில், நாங்கள் ஓர் சிறிய அலசலையும் செய்தோம். இதுகுறித்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம். முன்னதாக உருஸ் அரன்சியோ லியோனிஸ் பியர்ல் கேப்சூல் எடிசன் கார் பற்றிய சிறப்பு தகவல்களைப் பார்க்கலாம், வாங்க.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

வெளிப்புறம் மற்றும் டிசைன்:

உருஸ் அரன்சியோ லியோனிஸ் பியர்ல் கேப்சூல் எடிசன் காரை உயர்-ரக பளப்பான வண்ண பூச்சால் லம்போர்கினி அலங்கரித்திருக்கின்றது. அந்தவகையில், அதிக பளப்பான கியல்லோ இன்டி (மஞ்சள்), அரன்சியோ போரியலிஸ் (ஆரஞ்சு) மற்றும் வெர்டே மண்டிஸ் (பச்சை) ஆகிய நிறங்களிலேயே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

இதுதவிர, குறிப்பிட்ட சில பாகங்களை கருப்பு நிறத்தால் லம்போர்கினி அலங்கரித்திருக்கின்றது. இதற்காக, மினு மினுக்கும் கருப்பு நிறத்தையே நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. ரூஃப், டிஃப்யூஸ்ர் மற்றும் ஸ்பாய்லர் லிப் ஆகியவை பள பளப்பான கருப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

காரின் முகப்பு பகுதி; மேலே கூறப்பட்ட பாகங்கள் மட்டுமின்றி மேலும் சில பாகங்களும் கருப்பு நிறத்தை வழங்கியிருக்கின்றது லம்போர்கினி. இதன்படி காரின் முன் பகுதியில் இருக்கும் க்ரில் கருப்பு நிறத்திலேயே காட்சிக் கொடுக்கின்றது. புதிய லம்போர்கினி உருஸ் பியர்ல் கேப்சூல் எடிசனுக்கு அதிக கவர்ச்சியை சேர்க்கும் வகையிலேயே இந்த கருப்பு நிற பூச்சு குறிப்பிட்ட சில பாகங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

இவ்வாறு சிறு சிறு உடற்கூறுகளிலும் காரின் வடிவமைப்பாளர்கள் அதிக கவனத்தைச் செலுத்தியிருக்கின்றனர். இதற்கு முக்கிய சான்றாக இந்த சிறப்பு பதிப்பு உருஸ் காரின் ஹெட்லேம்ப் அமைந்திருக்கின்றது. லம்போர்கினி எனும் எழுத்துக்கள் அடங்கிய ஹெட்லேம்பே முன்புறத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

இதைத்தொடர்ந்து, முன்புற க்ரில்லில் சென்சார் ஒன்றை பொருத்தியிருக்கின்றது லம்போர்கினி. இதனை மேலோட்டமாக பார்ப்பவர்கள் கேமிரா என நினைத்து கொள்ளும் வகையில் காட்சியளிக்கின்றது. ஆனால், பார்க்கிங் மற்றும் பிற பாதுகாப்பு வசதிக்காக சென்சாரை கேமிரா வடிவத்தில் நிறுவனம் வழங்கியிருக்கின்றது. காரின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு காற்றோட்டம் சீராக கிடைப்பதற்கு ஏதுவாக பெரிய டக்டுகள் பம்பருக்கு கீழே வழங்கப்பட்டிருக்கின்றன. இது காருக்கு சற்று முரட்டுதனமான தோற்றத்தை வழங்க ஏதுவாக அமைந்திருக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

காரின் பக்கவாட்டு பகுதி; முகப்பு பகுதியில் தென்பட்டதைப் போலவே பக்கவாட்டு பகுதியிலும் கவர்ச்சிக்கான வேலைப்பாடுகள் கணிசமாக காட்சியளிக்கின்றன. 23 இன்சில் பளப்பளப்பான கருப்பு நிறத்தைப் பூசிக் கொண்டு இருக்கும் அலாய் வீலே புதிய உருஸ் காருக்கு அதிக கவர்ச்சியை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த வீலினை 22 இன்ச் மற்றும் 20 இன்ச் என வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப லம்போர்கினி வழங்க இருக்கின்றது. ஆகையால், பெரிய வீல் பொருத்தமாக இல்லை நினைப்பவர்கள் மேற்கண்ட குறைந்த அளவு வீல்களுக்கு மாறிக் கொள்ளலாம்.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

இதுபோன்ற பிரத்யேக வசதிகளை லம்போர்கினி நிறுவனம் காலம் தொட்டு வழங்கி வருகின்றது. புதிய உருஸ் பியர்ல் கேப்சூல் எடிசன் காரை சுற்றிலும் கருப்பு நிறத்திலான கிளாடிங்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இது உருஸ் காருக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குவதுடன், ஸ்போர்ட்ஸ் கார்களின் பிம்பத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

இந்த கிளாடிங்குகளுக்கு மேட் ஃபினிஷ் கருப்பு நிறத்தை லம்போர்கினி பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதையடுத்து, உலகிலேயே எந்தவொரு காரும் பெறாத ஓர் பிரத்யேக வசதியையும் உருஸ் கார்கள் பெற்று வருகின்றன. அதாவது, பெரிய கார்பன்-செராமிக் பிரேக் ரோட்டர்கள் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த கருவியை வெறு எந்த கார்களில் காண முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

காரின் அதி வேக பயணத்தின்போது மிக சிறந்த பிரேக்கிங்கை வழங்க இது மிக உதவியாக இருக்கும். மணிக்கு 305 கிமீ எனும் வேகத்தில் உருஸ் கார் செல்லும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த உச்சபட்ச வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவே 440 மிமீ அளவிலான கார்பன்-செராமிக் பிரேக் ரோட்டார்கள் பன்படுத்தப்பட்டிருக்கின்றன.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

காரின் பின் பகுதி, இப்பகுதிக்கு வந்தால் ஓர் லிப் ஸ்பாய்லரை காண முடிகின்றது. பூட் பகுதியைச் சுற்றிலும் இந்த ஸ்பாய்லர் பொருத்தப்பட்டிருக்கின்றது. வழக்கமான உருஸ் காரில் இது காரின் உடல் நிறத்திற்கு ஏற்ற வண்ணத்தில் காட்சியளிக்கும். ஆனால், உருஸ் பியர்ல் கேப்சூல் எடிசனில் இது உயர்-ரக பள பளப்பான கருப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

இத்துடன், லம்போர்கினி எனும் பேட்ஜ் அதில் இடம் பெற்றிருக்கின்றது. இதன் பூட் 615 லிட்டர் கொள்ளளவுக் கொண்டது. இதன் கதவுகளை எலெக்ட்ரானிக் பொத்தான் மூலம் கன்ட்ரோல் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டிருக்கும் பூட் ஸ்பேஸ் குறைவு என நினைத்தால், பின்னிருக்கைகள் மடித்து வைப்பதன் மூலம் அதனை மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும்.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

காரின் உட்புறம்:

இப்போதுதான் நாம் முக்கியமான தகவலுக்குள் நுழைகின்றோம். இதில், நாம் முதலில் கவனிக்க வேண்டிய இடத்தில், காரின் உட்புற நிற தேர்வு பற்றிய தகவல் இருக்கின்றது. அதாவது, வெளிப்புறத்திற்கு எப்படி மூன்று விதமான நிறத் தேர்வுகள் வழங்கப்படுகின்றனவோ, அதேமாதிரி, உட்பகுதியிலும் இரு விதமான நிற தேர்வை லம்போர்கினி வழங்குகின்றது.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

அதில், ஒன்று கருப்பு நிறம். மற்றொரு நிறம் பற்றிய தகவலை நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், நமக்கு கிடைத்த தகவலின்படி, காரின் வெளிப்புற நிறத்திற்கு ஏற்ற உட்புற நிறத்தை லம்போர்கினி வழங்கும் என்பது தெரியவந்திருக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

இதேபோன்று, லம்போர்கினி நிறுவனம் உருஸ் பியர்ல் கேப்சூல் எடிசனை வெளிப்புறத்தை மட்டுமே காட்சிப்படுத்தியதால், எங்களால் காருக்குள் நுழைந்து என்னென்ன அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. எனவே என்ன மாதிரியான சிறப்பு அம்சங்கள் எல்லாம் உட்பகுதியில் இடம்பெற்றிருக்கின்றன என்பது பற்றிய துள்ளியமான தகவலை வெளியிட முடியவில்லை.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

உள்ளே நுழைந்து பார்க்க முடியவில்லை என்றாலும் எங்களின் பார்வைக்கு எட்டியவரை, ஹெக்ஸகன் வடிவத்திலான இருக்கைளே இக்காரில் இடம்பெற இருக்கின்றன என்பது தெரிய வந்திருக்கின்றது. இதில் சிறப்பு லோகோக்களும் இடம் பெற்றிருந்தன. இந்த லோகோக்கள் எம்ப்ராய்டரி செய்யப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பாகும்.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

இத்துடன், இதன் இருக்கைகளை எலக்ட்ரானிக் பொத்தான் மூலமாகவே அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதியையும் வழங்க இருப்பதாக லம்போர்கினி தெரிவித்திருக்கின்றது. இதனைக் கூடுதல் தேர்வாக மட்டுமே வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த வசதியின்மூலம் இருக்கையை நகர்த்துவது, உயரத்தை அட்ஜெஸ்ட் செய்வது என அனைத்தையுமே பொத்தான்களின் வாயிலாகவே கன்ட்ரோல் செய்து கொள்ளலாம்.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட பார்க்கிங் அசிஸ்டன்ஸ் பேக்கேஜையும் கூடுதல் தேர்வாக வழங்க இருக்கின்றது லம்போர்கினி. இந்த தொழில்நுட்பம் காரை தானாகவே பார்க்கிங் ஏரியாவில் பார்க்க செய்து கொள்ள உதவியாக இருக்கும். பிரேக், ஸ்டியரிங் வீல் என அனைத்தையுமே அதுவே கட்டுப்படுத்திக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வசதிக்கான பட்டனை மட்டும் அழுத்தினால்போதும் அனைத்தையும் அதுவே பார்த்துக் கொள்ளும்.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

மேலும், கூடுதல் விருப்ப தேர்வுகளாக பிரீமியம் சென்சோனம் சவுண்ட் சிஸ்டம், 730 வாட் ஆம்பிளஃபையர் மற்றும் 17 ஸ்பீக்கர்களை வழங்கவும் லம்போர்கினி திட்டமிட்டுள்ளது.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

எஞ்ஜின்; உருவம், சிறப்பம்சம் என அனைத்திலும் வழக்கமான உருஸ் காருடன் மாறுபட்டுக் காணப்படும் இந்த உருஸ் பியர்ல் கேப்சூல் எடிசன், எஞ்ஜின் விஷயத்தில் மட்டுமே ஒத்துபோகின்றது. இரண்டிலும் ஒரே மாதிரியான திறன் கொண்ட எஞ்ஜினேப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. பை-டர்போ வி8 எஞ்ஜினே இக்காரில் இடம் பெற்றிருக்கின்றது.

இது அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 641 பிஎச்பியையும், 2250 மற்றும் 4500 ஆர்பிஎம்மில் 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த எஞ்ஜின் 8 ஸ்பீடு கியர்பாக்ஸ் இயங்கும். இதன் அட்வான்ஸ்ட் தொழில்நுட்ப வசதியே காரின் அனைத்து வீல்களுக்கும் இயங்கு திறனை வழங்குகின்றது. மேலும், ஆறு விதமான டிரைவிங் மோடுடன் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். ஆஃப்-ரோடு, மணல் பாதை என அனைத்து விதமான சாலைகளையும் கடக்க இது உதவியாக இருக்கும்.

வாங்கினா இப்படி ஒரு சொகுசு காரைதான் வாங்கணும்! முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

விலை

வழக்கமான லம்போர்கினி உருஸ் எஸ்யூவி கார் ரூ. 3.10 கோடிக்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இதன் விலையைக் காட்டிலும் சுமார் 20 சதவீத விலையிலேயே உருஸ் பியர்ல் கேப்சூல் எடிசன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல்வேறு பிரீமியம் அம்சங்களைப் பெற்று இந்த கார் விற்பனைக்கு வர இருப்பதால் இத்தகைய விலையுயர்வுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Lamborghini Urus Arancio Leonis Pearl Capsule Design Edition First Look Review. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X