லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... கார் வேற லெவல்ல இருக்குங்க!

லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... கார் வேற லெவல்ல இருக்குங்க!

லம்போர்கினி உருஸ் காரின் கிராஃபைட் கேப்சூல் (Lamborghini Urus Graphite Capsule) எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள லம்போர்கினி டீலர்ஷிப்பில், உருஸ் சூப்பர் எஸ்யூவி காரின் கிராஃபைட் கேப்சூல் எடிசனை பார்வையிடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இந்த புதிய எடிசன் பற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... கார் வேற லெவல்ல இருக்குங்க!

முன் பகுதியில் பகல் நேர விளக்குகள் உடன் நேர்த்தியான ஹெட்லேம்ப்கள் இடம்பெற்றுள்ளன. லம்போர்கினி நிறுவனம் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப்களை பயன்படுத்தியுள்ளது. முன் பகுதியின் கீழே வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த சூப்பர் எஸ்யூவி காரின் வண்ணம் மிக அற்புதமாக இருக்கிறது. மேலும் கீழ் பகுதியில் ஆரஞ்ச் வண்ண லிப் வழங்கப்பட்டுள்ளது.

லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... கார் வேற லெவல்ல இருக்குங்க!

இதனை கிராஃபைட் கேப்சூல் எடிசனின் முக்கியமான ஹைலைட்களில் ஒன்றாக குறிப்பிடலாம். மேட் பிளாக் வண்ணத்துடன் லம்போர்கினி லோகோ நன்றாக பொருந்தி போகிறது. 23 இன்ச் மல்டி ஸ்போக் அலாய் வீல்களில், லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசன் இயங்குகிறது. டோர்களுக்கு கீழே ஆரஞ்ச் வண்ண பட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுவும் காரை கவர்ச்சியாக காட்டுகிறது.

லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... கார் வேற லெவல்ல இருக்குங்க!

பின் பகுதியில் எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. மைய பகுதியில் லம்போர்கினி என எழுதப்பட்டுள்ளது. இதற்கு மேலே அதே ஆரஞ்ச் வண்ணத்தில் ஸ்பாய்லர் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் எலெக்ட்ரானிக் டெயில்கேட் வசதியையும் லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசன் பெற்றுள்ளது. இந்த காரின் பூட் ஸ்பேஸ் 616 லிட்டர்கள் ஆகும். பின் பகுதியில் சன்ஷேடும் வழங்கப்பட்டுள்ளது.

லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... கார் வேற லெவல்ல இருக்குங்க!

அதேபோல் இந்த காரின் இன்டீரியரும் கவனம் ஈர்க்கிறது. இந்த கார் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால், எங்களால் காரின் உள்ளே அமர முடியவில்லை. எனினும் இன்டீரியரை பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. வெளிப்புறத்தில் வழங்கப்பட்டுள்ள அதே ஆரஞ்ச் ஹைலைட்களை இன்டீரியரிலும் நம்மால் காண முடிகிறது.

லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... கார் வேற லெவல்ல இருக்குங்க!

இருக்கைகளில் லம்போர்கினி லோகோ வழங்கப்பட்டிருப்பதுடன், உருஸ் என அதே ஆரஞ்ச் வண்ணத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இருக்கைகளின் தையல் வேலைப்பாடுகளும், டிசைனும் அதே ஆரஞ்ச் வண்ணத்தில்தான் இருக்கின்றன. மேலும் லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசனில், இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்கு ஃபுல்-கலர் டிஎஃப்டி ஸ்க்ரீன் வழங்கப்பட்டுள்ளது.

லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... கார் வேற லெவல்ல இருக்குங்க!

இதுதவிர மேலும் இரண்டு திரைகளை லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசன் பெற்றுள்ளது. இதில் ஒரு திரை, மீடியா மற்றும் பொழுதுபோக்கிற்காக வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் கீழே உள்ள மற்றொரு திரை கார் பற்றிய அனைத்து தகவல்களையும் வழங்குகிறது. இரண்டாவது திரைக்கு கீழே ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... கார் வேற லெவல்ல இருக்குங்க!

இதன் பக்கவாட்டில் டிரைவிங் மோடுகள் மற்றும் டெர்ரெய்யின் மோடுகளுக்கான கண்ட்ரோல்கள் உள்ளன. ஓட்டுனர் மற்றும் முன் பகுதி பயணிக்கான இருக்கைகளை மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். பின் பகுதி இருக்கைகளுக்கும் கூட, மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... கார் வேற லெவல்ல இருக்குங்க!

4-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டத்தையும் லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசன் பெற்றுள்ளது. மேலும் பனரோமிக் சன்ரூஃப் வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசனில், 4.0 லிட்டர் ட்வின்-டர்போ வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 641 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... கார் வேற லெவல்ல இருக்குங்க!

இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்ஜின் சக்தியானது, காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 3.6 வினாடிகளில் எட்டி விடும். அதே சமயம் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 305 கிலோ மீட்டர்கள்.

லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... கார் வேற லெவல்ல இருக்குங்க!

லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசனின் டிசைன் சிறப்பாக இருப்பதுடன், அதிநவீன வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சக்தி வாய்ந்த இன்ஜினும் கொடுக்கப்பட்டுள்ளது. லம்போர்கினி உருஸ் காரின் விற்பனை சமீப காலமாக உயர்ந்து கொண்டே வருகிறது. விற்பனையை மேலும் அதிகரிப்பதற்கு, கிராஃபைட் கேப்சூல் எடிசன் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Lamborghini urus graphite capsule edition launched in india here are all the details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X