Just In
- 3 hrs ago
20 வருடங்களுக்கு பிறகும் விற்பனையில் கெத்து காட்டும் மஹிந்திரா பொலிரோ... சேல்ஸ் எங்கயோ போயிருச்சு...
- 4 hrs ago
மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...
- 7 hrs ago
தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?
- 7 hrs ago
கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!
Don't Miss!
- News
ஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை!
- Sports
வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்
- Movies
நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்!
- Finance
அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..!
- Lifestyle
திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நாட்டின் சிறந்த பிரீமியம் கார் எது தெரியுமா? பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரையே பின்னுக்கு தள்ளிய லேண்ட் ரோவர் கார்!
நடப்பு 2021ஆம் ஆண்டின் சிறந்த பிரீமியம் தர கார் எது என்பது பற்றிய தகவல் வெளியாகி-யுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபென்டர் கார் அதிக பிரீமியம் மற்றும் சொகுசு வசதிகள் நிறைந்த கார் என்ற பெருமையைச் சூடியிருக்கின்றது. அண்மையில் 2021ம் ஆண்டிற்கான சிறந்த பிரீமியம் தர கார் எது என்ற தேடல் தொடங்கியது.

இந்த தேடலில் ஆடி ஏ 8, ஆடி க்யூ 3, ஆடி க்யூ 8, பிஎம்டபிள்யூ 2 சீரிஸ், பிஎம்டபிள்யூ 8 சீரிஸ், லெக்சஸ் எல்சி 500 ஹெச், மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4-கதவு, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ், போர்ஷே கெய்ன் கூபே ஆகிய கார் மாடல்கள் இடம் பெற்றிருந்தன.

இவற்றில் தானே அதிகம் சிறப்பு வசதிகள் மற்றும் பிரீமியம் தரத்திலான கார் என்பதனை லேண்ட் ரோவர் டிஃபென்ட் நிரூபித்திருக்கின்றது. அதாவது, மேலே குறிப்பிட்ட அனைத்து கார்களையும் பின்னுக்கு தள்ளி லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார் நாட்டின் சிறந்த பிரீமியம் தர கார் என்ற பட்டத்தைச் சூடியிருக்கின்றது.

108 புள்ளிகளைப் பெற்று இக்கார் இந்த நற்சான்றைப் பெற்றிருக்கின்றது. இக்காருக்கு அடுத்தபடியாக 77 புள்ளிகளைப் பெற்று பென்ஸ் ஜிஎல்இ கார் 2ஆம் இடத்திலும், பிஎம்டபிள்யூ 2 செரீஸ் 61 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கின்றன.

விலை, எரிபொருள் (மைலேஜ்) திறன், ஸ்டைலிங், கம்ஃபோர்ட், பாதுகாப்பு, செயல்திறன், நடைமுறை, தொழில்நுட்பங்கள், இந்திய ஓட்டுநர் நிலைமைகளுக்கு ஏற்றது மற்றும் செலவிடும் பணத்திற்கான மதிப்பு ஆகிய அளவுகோல்களின் அடிப்படையிலேயே நடுவர் குழு இப்போட்டியை நடத்தியிருக்கின்றது.

இவையனைத்திலும் மிக சிறந்த பிரீமியம் கார் என்பதன லேண்ட் ரோவர் டிஃபென்டர் நிரூபித்ததன் காரணத்தினாலயே இக்கார் தற்போது நாட்டின் சிறந்த பிரீமியம் கார் என்ற முகடத்தைச் சூட காரணமாக அமைந்திருக்கின்றது.

லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார் இந்தியாவில் ரூ. 73.98 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இது டிஃபென்டர் 90 எனும் வேரியன்டின் விலையாகும். டிஃபென்டர் 110 எனும் வேரியண்ட் ரூ. 79.94 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

லேண்ட் ரோவர் டிஃபென்டர், 2.0 லிட்டர் டர்போசார்ஜட் 4 சிலிண்ட் பெட்ரோல் எஞ்ஜினில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது 300 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. அதிகபட்சமாக மணிக்கு 191 கிமீ எனும் வேகத்தில் சீறி பாய்ந்து செல்லும் திறன் கொண்டதும் கூட. இதுபோன்ற பல்வேறு சிறப்பு வசதிகளின் காரணத்தினாலேயே இக்கார் சிறந்த பிரீமியம் தர கார் என்ற பட்டத்தைப் பெற்றிருக்கின்றது.