64லட்ச ரூபா காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய லேண்ட்ரோவர்! இதுல என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?

லேண்ட் ரோவர் நிறுவனம் அதன் 64 லட்ச ரூபா ரேஞ்ஜ் ரோவர் எவோக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கார்குறித்த கூடுதல் தகவல்களைக் கீழே பார்க்கலாம், வாங்க.

64 லட்ச ரூபா காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய லேண்ட் ரோவர்... இதுல என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர், அதன் தயாரிப்புகளை புதுப்பித்து அறிமுகம் செய்யும் பணியில் களமிறங்கியுள்ளது. அந்தவகையில், கடந்த மாதம் புதுப்பிக்கப்பட்ட ரேஞ்ஜ் ரோவர் வெலர் காரையும், ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் மாடலையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

64 லட்ச ரூபா காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய லேண்ட் ரோவர்... இதுல என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?

இதனைத் தொடர்ந்து, தற்போது இன்று மற்றுமொரு புதுப்பிக்கப்பட்ட மாடலை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. நிறுவனம், 2021 ரேஞ்ஜ் ரோவர் எவோக் எஸ்யூவி காரையே இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கியிருக்கின்றது.

64 லட்ச ரூபா காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய லேண்ட் ரோவர்... இதுல என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?

இந்த புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனுக்கு நிறுவனம் ரூ. 64.12 லட்சம் என்ற விலையை நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. விற்பனைக்கு அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து, இன்றே காரின் டெலிவரி பணிகளும் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது.

64 லட்ச ரூபா காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய லேண்ட் ரோவர்... இதுல என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?

ரேஞ்ஜ் ரோவர் எவோக் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எரிபொருள் எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைகக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 247 பிஎச்பி மற்றும் 365 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது.

64 லட்ச ரூபா காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய லேண்ட் ரோவர்... இதுல என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?

இதேபோன்று, இதன் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜிந் 201 பிஎச்பி மற்றும் 430 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இத்தகைய எஞ்ஜின் தேர்வுகளைக் கொண்ட அதிக சொகுசு காரின் விற்பனையையே லேண்ட் ரோவர் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது.

64 லட்ச ரூபா காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய லேண்ட் ரோவர்... இதுல என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?

காருக்கு முன் பதிவு பணிகளல் ஆன்லைன் மற்றும் விற்பனையாளர்கள் வாயிலாக நடைபெற்று வருகின்றது. ரேஞ்ஜ் ரோவர் எவோக் காரை நிறுவனம் குழந்தை ரேஞ்ஜ் ரோவர் என்று அழைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ்3, பென்ஸ் ஜிஎல்சி, வால்வோ எக்ஸ்சி60 மற்றும் லெக்சஸ் என்எக்ஸ் ஆகியவற்றிற்கு போட்டியாக களமிறங்கியிருக்கின்றது.

64 லட்ச ரூபா காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய லேண்ட் ரோவர்... இதுல என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?

பிவி ப்ரோ வசதிக் கொண்ட 10 இன்சிலான தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அதிக இட வசதி, 3டி தொழில்நுட்பம் கொண்ட 360 டிகிரி கேமிரா, பிஎம்2.5 ஃபில்டர் வசதிக் கொண்ட காற்று வடிகட்டி மற்றும் ஒயர்லெஸ் சார்ஜர் போன்ற எக்கசக்க பிரீமியம் வதிகள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

64 லட்ச ரூபா காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய லேண்ட் ரோவர்... இதுல என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?

ரேஞ்ஜ் ரோவர் எவோக் காரின் அறிமுகம்குறித்து ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைவரும், நிர்வாக இயக்குநருமான ரோஹித் சூரி கூறுகையில், "ரேஞ்ச் ரோவர் எவோக் எப்போதும் அதன் தனித்துவமான, நவீன மற்றும் ஸ்மார்ட் வடிவமைப்பால் தலைகீழாக மாறிவிட்டது.

64 லட்ச ரூபா காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய லேண்ட் ரோவர்... இதுல என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?

புதிய உட்புற வண்ணம் மற்றும் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைக் கொண்டு எவோக் அலங்கரிக்கப்பட்டுள்ளது. புதிய எஞ்ஜின் பவர் ட்ரெயின்கள் இதன் பயன்பாட்டை மேலும் சுவாரஷ்யமானதாகவும், அதிகம் சக்திவாய்ந்ததாகவும் மாற்றியிருக்கின்றன" என்றார்.

Most Read Articles

English summary
Land Rover Launched 2021 Range Rover Evoque In India At Rs. 64.12 Lakh. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X