ஹைட்ரஜனில் இயங்கும் டிஃபென்டர் எஸ்யூவியை உருவாக்கும் லேண்ட்ரோவர்!

ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் டிஃபென்டர் எஸ்யூவியை உருவாக்கி வருவதாக டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வரும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹைட்ரஜனில் இயங்கும் டிஃபென்டர் எஸ்யூவியை உருவாக்கும் லேண்ட்ரோவர்!

சொகுசு ஆஃப்ரோடு எஸ்யூவி தயாரிப்பில் உலகின் பழமையான நிறுவனமான லேண்ட்ரோவர் தனது வர்த்தகத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், தனது பிரபலமான தயாரிப்புகளில் ஒன்றான டிஃபென்டர் எஸ்யூவியை மாசு உமிழ்வு இல்லாத மாடலாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஹைட்ரஜனில் இயங்கும் டிஃபென்டர் எஸ்யூவியை உருவாக்கும் லேண்ட்ரோவர்!

அதாவது, ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் டிஃபென்டர் எஸ்யூவியை உருவாக்கி வருவதாக ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய டிஃபென்டர் எஸ்யூவியின் சோதனை ஓட்டங்கள் துவங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரஜனில் இயங்கும் டிஃபென்டர் எஸ்யூவியை உருவாக்கும் லேண்ட்ரோவர்!

ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் டிஃபென்டர் எஸ்யூவியை உருவாக்கும் திட்டத்திற்கு ஸீயஸ் என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. வரும் 2036ம் ஆண்டுக்குள் மாசு உமிழ்வு இல்லாத வாகனங்களை தயாரிக்கும் முயற்சிகளின் முதல்கட்டமாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.

ஹைட்ரஜனில் இயங்கும் டிஃபென்டர் எஸ்யூவியை உருவாக்கும் லேண்ட்ரோவர்!

மேலும், வரும் 2025ம் ஆண்டுக்குள் 6 முழுமையான மின்சார ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஏற்கனவே லேண்ட்ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் டிஃபென்டர் எஸ்யூவியையும் அந்நிறுவனம் உருவாக்கி வருவது அதிக கவனத்தை பெற்றுள்ளது.

ஹைட்ரஜனில் இயங்கும் டிஃபென்டர் எஸ்யூவியை உருவாக்கும் லேண்ட்ரோவர்!

ஹைட்ரஜன் எரிபொருளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பேட்டரியில் சேமிக்கப்படும். பின்னர், மின் மோட்டார் மூலமாக வாகனம் இயங்கும். கிட்டத்தட்ட மின்சார வாகனங்கள் போலவேதான் செயல்படும்.

ஹைட்ரஜனில் இயங்கும் டிஃபென்டர் எஸ்யூவியை உருவாக்கும் லேண்ட்ரோவர்!

ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் கார்களில் நீராவி மட்டுமே கழிவாக வெளியேற்றப்படும் என்பதால், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது. மேலும், மின்சார கார்களை போல அல்லாமல் மிக விரைவாக எரிபொருள் நிரப்புவதற்கும், அதிக திறனை வெளிப்படுத்தும் அம்சங்களையும் பெற்றிருக்கும்.

ஹைட்ரஜனில் இயங்கும் டிஃபென்டர் எஸ்யூவியை உருவாக்கும் லேண்ட்ரோவர்!

இதனால், எஸ்யூவி வாகனங்களின் செயல்திறனுக்கு இந்த ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் சிறப்பானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. எனினும், தயாரிப்பு நிலையில் இருக்கும் டிஃபென்டர் எஸ்யூவியின் ஹைட்ரஜன் மாடலின் எரிபொருள் நுக்ரவு திறன், ஆஃப்ரோடு செயல்பாடுகள் குறித்து சோதனைகளை நடத்த உள்ளதாக லேண்ட்ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles

English summary
Jaguar Land Rover is working on a hydrogen fuel cell Defender SUV and it is expecting to trials end of this year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X