இந்தியாவில் காட்சி தந்த புதுமுக வாகனம்... ஆஹா செம்ம கவர்ச்சியா இருக்கே! எந்த நிறுவனத்தின் காரா இருக்கும் இது?

லண்டன் டாக்சி (London Taxi) என்றழைக்கப்படும் எல்இவிசி (London Electric Vehicle Company) நிறுவனத்தின் டிஎக்ஸ் கார் இந்தியாவில் முதல் முறையாக அதன் தரிசனத்தை வழங்கியிருக்கின்றது. இந்த காரின் தரிசனம் குறித்த முக்கிய விபரத்தை இந்த பதிவில் காணலாம், வாங்க.

இந்தியாவில் காட்சி தந்த புதுமுக வாகனம்... ஆஹா செம்ம கவர்ச்சியா இருக்கே! எந்த நிறுவனத்தின் காரா இருக்கும் இது?

லண்டனில் பலரின் மிகவும் பிடித்தமான கால் டாக்சி காராக இருக்கும் ஓர் மின்சார வாகனம் மிக விரைவில் இந்திய சாலைகளில் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த விநோத தோற்றம் கொண்ட கார் இந்திய சாலையில் முதன் முதலாக அதன் தரிசனத்தை வழங்கி இருக்கின்றது.

இந்தியாவில் காட்சி தந்த புதுமுக வாகனம்... ஆஹா செம்ம கவர்ச்சியா இருக்கே! எந்த நிறுவனத்தின் காரா இருக்கும் இது?

எல்இவிசி என்றழைக்கப்படும் லண்டன் எலெக்ட்ரிக் வாகன கம்பெனி (London Electric Vehicle Company)இன் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்றாக எல்இவிசி டிஎக்ஸ் (LEVC TX) இருக்கின்றது. இதுவே தற்போது இந்திய சாலையில் தனது தரிசனத்தை முதல் முறையாக வழங்கியிருக்கின்றது. லண்டன் டாக்ஸி என்ற செல்ல பெயரில் இக்கார் இங்கிலாந்தில் அழைக்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் காட்சி தந்த புதுமுக வாகனம்... ஆஹா செம்ம கவர்ச்சியா இருக்கே! எந்த நிறுவனத்தின் காரா இருக்கும் இது?

இக்காரை எல்இவிசி நிறுவனம் பிரத்யேகமாக எக்ஸ்குளூசிவ் மோட்டார்ஸ் (Exclusive Motors) தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்திய சந்தையில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்நிறுவனம், ஏற்கனவே பல முன்னணி மற்றும் விலையுயர்ந்த லக்சூரி கார்களை தயாரித்து வரும் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையில் தற்போது புதிதாக எல்இவிசி நிறுவனத்துடனும் இது இணைந்திருக்கின்றது.

இந்தியாவில் காட்சி தந்த புதுமுக வாகனம்... ஆஹா செம்ம கவர்ச்சியா இருக்கே! எந்த நிறுவனத்தின் காரா இருக்கும் இது?

எல்இவிசி ஓர் பிரபல சீன வாகன உற்பத்தி நிறுவமான கீலி (Geely)-க்கு சொந்தமானது ஆகும். இருப்பினும், எல்இவிசி இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. ஆகையால், இங்கிலாந்தை தலைமையமாகக் கொண்டு இயங்கும் சீன நிறுவனமாக எல்இவிசி காட்சியளிக்கின்றது.

இந்தியாவில் காட்சி தந்த புதுமுக வாகனம்... ஆஹா செம்ம கவர்ச்சியா இருக்கே! எந்த நிறுவனத்தின் காரா இருக்கும் இது?

லேட்டஸ்ட் வெர்ஷன் டிஎக்ஸ் கார் 2017ம் ஆண்டில் முதல் முறையாக வெளியீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை முழுக்க முழுக்க அலுமினியத்தால் உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், மிகவும் உறுதித் தன்மைக் கொண்ட வாகனமாக டிஎக்ஸ் காட்சியளிக்கின்றது. இத்துடன், வடிவமைப்பும் மிகவும் கவர்ச்சிகரமானதாக காட்சியளிக்கின்றது. அதே நேரத்தில் எடைக் குறைவான வாகனமாகவும் இது காட்சியளிக்கின்றது.

இந்தியாவில் காட்சி தந்த புதுமுக வாகனம்... ஆஹா செம்ம கவர்ச்சியா இருக்கே! எந்த நிறுவனத்தின் காரா இருக்கும் இது?

பேட்டரி மற்றும் மின்மோட்டாரின் சீரான திறன் வெளியேற்றத்திற்கு இதன் இலகுவான எடை அதிக உதவியாக இருக்கின்றது. நிச்சயம் இந்த கார் சாலையில் பயன்பாட்டிற்கு வருமானால் பலரின் கவனத்தை ஈர்க்கும் ஓர் வாகனமாக இது அமையும். பார்ப்பதற்கு மிகவும் பழங்காலத்து வாகனம் போல் காட்சியளிக்கும் டிஎக்ஸ் நவீன கால அம்சங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் காட்சி தந்த புதுமுக வாகனம்... ஆஹா செம்ம கவர்ச்சியா இருக்கே! எந்த நிறுவனத்தின் காரா இருக்கும் இது?

உதாரணமாக டிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மின் விளக்குகள் அனைத்தும் எல்இடி தரத்திலானவை ஆகும். இதுமாதிரியான இன்னும் பல அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமாதிரியான மாடர்ன் அம்சங்களால் கிளாசி தோற்றம் கொண்ட நவீன கால காராக டிஎக்ஸ் காட்சியளிக்கின்றது.

இந்தியாவில் காட்சி தந்த புதுமுக வாகனம்... ஆஹா செம்ம கவர்ச்சியா இருக்கே! எந்த நிறுவனத்தின் காரா இருக்கும் இது?

கடந்த காலங்களில் டிஎக்ஸ் டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே உருவாக்கப்பட்டு வந்தன. ஆனால், இப்போது ஹைபிரிட் வசதி உடன் உருவாக்கப்பட்டு வருகின்றது. புதிய தலைமுறை மாடலின்கீழே இந்த வசதியை நிறுவனம் அறிமுகம் செய்தது. மேலும், கடந்த தலைமுறையைக் காட்டிலும் பெரிய உருவம் மற்றும் அதிக நவீன வசதிகளைக் கொண்டதாகவும் புதிய தலைமுறை டிஎக்ஸ் காட்சியளிக்கின்றது.

இந்தியாவில் காட்சி தந்த புதுமுக வாகனம்... ஆஹா செம்ம கவர்ச்சியா இருக்கே! எந்த நிறுவனத்தின் காரா இருக்கும் இது?

புதிய தலைமுறை எல்இவசி டிஎக்ஸ் முழு மின்சார இயக்கத்தைக் கொண்ட வாகனமாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், இதில் 1.5 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது ஓர் வால்வோ நிறுவனத்தின் எஞ்ஜின் ஆகும். இதில் இருந்து கிடைக்கும் ஆற்றல் பேட்டரி சார்ஜ் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. ஆகையால், பெட்ரோல் எஞ்ஜின் இதில் இருந்தாலும் மின்சார மோட்டாரால் மட்டுமே இயங்கும் நிலை இதில் உள்ளது.

இந்தியாவில் காட்சி தந்த புதுமுக வாகனம்... ஆஹா செம்ம கவர்ச்சியா இருக்கே! எந்த நிறுவனத்தின் காரா இருக்கும் இது?

சார்ஜ் செய்யும் வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதைக் கொண்டு காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 101 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதுவே முழுமையாக பெட்ரோலை டேங்கை நிரப்பிவிட்டு பயணித்தால் 510 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம். இத்தகைய சிறப்பு வசதிக் கொண்ட காரையே தற்போது நிறுவனம் எக்ஸ்குளூசிவ் மோட்டார்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

எல்இவிசி நிறுவனத்துடனான கூட்டணிகுறித்து எக்ஸ்குளூசிவ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சத்ய பக்ளா கூறியதாவது, "எல்இவிசி போன்ற ஒரு சிறிய பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியா மின்சார வாகனங்களுக்கான வளர்ந்து வரும் சந்தையாக மாறியுள்ளது. எல்இவிசி நாட்டிற்குள் நுழைவதற்கு இதைவிட சிறந்த நேரம் இருக்க முடியாது. வாகனத்தின் தொழில்நுட்பம், அழகியல் மற்றும் நடைமுறைத் திறன் ஆகியவை வரும் நாட்களில் இந்திய வாடிக்கையாளர்களை வெல்வது உறுதி" என தெரிவித்தார்.

Most Read Articles
English summary
Levc planning to launch iconic london taxi in india
Story first published: Wednesday, October 27, 2021, 18:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X