குறைவான எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும்... மிக மிக அதிக விலையுடைய லெக்சஸ் எல்சி 500எச் கார் அறிமுகம்!

மிக மிக அதிக விலைக் கொண்ட லெக்சஸ் எல்சி 500எச் சொகுசு கார் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை மற்றும் கார் பற்றிய கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

குறைவான எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும்... மிக மிக அதிக விலையுடைய லெக்சஸ் எல்சி 500எச் கார் அறிமுகம்!

டொயோட்டா நிறுவனத்தின் மற்றுமொரு அங்கமாக லெக்சஸ் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இது லக்சூரி மற்றும் சூப்பர் கார்களை தயாரித்து வருகின்றது. அந்தவகையில், லெக்சஸ் பிராண்டில் உருவாக்கப்பட்ட புதுமுக கார் ஒன்றையே நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

குறைவான எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும்... மிக மிக அதிக விலையுடைய லெக்சஸ் எல்சி 500எச் கார் அறிமுகம்!

எல்சி 500எச் எனும் புதிய சொகுசு காரையே நிறுவனம் நாட்டில் களமிறக்கியிருக்கின்றது. இது ஓர் ஸ்போர்ட்ஸ் கூபே ரக காராகும். இதனை குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இது ஓர் சிறப்பு பதிப்பு ஆகும். எனவேதான் இக்காரை மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இந்தியாவில் விற்பனைச் செய்ய இருப்பதாக லெக்சஸ் தெரிவித்திருக்கின்றது.

குறைவான எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும்... மிக மிக அதிக விலையுடைய லெக்சஸ் எல்சி 500எச் கார் அறிமுகம்!

இக்காருக்கு ரூ. 2.15 கோடி ரூபாய் என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் மதிப்பு சற்று கூடுதலாக இருக்கும். இந்த கார் சிறப்பு எடிசன் வாகனம் என்பதால் வழக்கமான லெக்சஸ் கார்களைக் காட்டிலும் சற்று கூடுதல் சிறப்பம்சங்கள், மற்றும் லக்சூரி வசதிகளைக் கொண்டிருக்கின்றது.

குறைவான எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும்... மிக மிக அதிக விலையுடைய லெக்சஸ் எல்சி 500எச் கார் அறிமுகம்!

பறவை மற்றும் விமானங்களின் அடிப்படை உருவத்தை மையப்படுத்தி இந்த வாகனத்தை நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. ஆகையால், இதன் ஏரோடைனமிக்ஸ் அட்டகாசமானதாக காட்சியளிக்கின்றது. இந்த சிறப்பு வாய்ந்த தோற்றத்திற்காக விமான பந்தய போட்டியாளர் யோஷிஹைட் முரோயா மற்றும் லெக்சஸ் நிறுவனத்தின் கைதேர்ந்த பொறியியளாளர்கள் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர்.

குறைவான எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும்... மிக மிக அதிக விலையுடைய லெக்சஸ் எல்சி 500எச் கார் அறிமுகம்!

இவர்களின் ஒருங்கிணைப்பிலேயே இக்காருக்கு மிகவும் கவர்ச்சியான மற்றும் மனம் மயக்கம் தோற்றம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. முழுக்க முழுக்க கருப்பு நிறத்திலேயே இக்கார் காட்சியளிக்கின்றது. இதன் வீல், க்ரில் என அனைத்தும் கருப்பு நிறத்திலேயே காட்சியளிக்கின்றன. இந்த நிறம் மட்டுமின்றி வெள்ளை நோவா கிளாஸ் ஃப்ளேக் மற்றும் சோனிக் சில்வர் ஆகிய நிறங்களிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

குறைவான எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும்... மிக மிக அதிக விலையுடைய லெக்சஸ் எல்சி 500எச் கார் அறிமுகம்!

ஆகவே, ஸ்பெஷல் எடிசன் எல்சி 500எச் சூப்பர் கார் ஒட்டுமொத்தமாக 3 விதமான நிற தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். அதிக வேகத்தில் கார் பயணிக்கும்போது சிறந்த ஸ்டியரிங் வீலுக்கு அதிக கட்டுப்பாட்டை வழங்குவதற்காக காரின் பின்புறத்தில் இறக்கைப் அமைப்புடைய கூறு ஒன்று கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது கார்பன்-ஃபைபரிலான பிளாஸ்டிக் ஆகும்.

குறைவான எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும்... மிக மிக அதிக விலையுடைய லெக்சஸ் எல்சி 500எச் கார் அறிமுகம்!

வெளிப்புறத்தை போலவே காரின் உட்புறமும் மனம் மயக்கும் அம்சங்களைக் கொண்டிருக்கின்றது. கருப்பு நிறத்திலான அல்கான்ட்ரா டிரிம்ட் இருக்கை மற்றும் சீட் பெல்டுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, ஸ்டியரிங் வீல், ஷிஃப்ட் லெவலர் மற்றும் கதவுகளிலும் கருப்பு நிறத்திலான அல்கான்ட்ரா ட்ரிம்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

குறைவான எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும்... மிக மிக அதிக விலையுடைய லெக்சஸ் எல்சி 500எச் கார் அறிமுகம்!

எஞ்ஜினைப் பொருத்தவரை இக்காரில் 3.5 லிட்டர், 6 சிலிண்டர் ஹைபிரிட் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 354 பிஎச்பியை 6,600 ஆர்பிஎம்மிலும், 500 என்எம் டார்க்கை 3,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதுபோன்ற பல்வேறு சொகுசு வசதிகளை இக்கார் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் 2,15,60,000 ரூபாய் என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்திருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #லெக்சஸ் #lexus
English summary
Lexus Launches LC 500h Limited Edition Super Car In India. Read In Tamil.
Story first published: Thursday, March 4, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X