ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

2022 என்எக்ஸ் காரை பற்றிய விபரங்களை லெக்ஸஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

லெக்ஸஸ் என்.எக்ஸ் எஸ்யூவி காரில் புதிய தலைமுறை அப்கிரேட்கள் ப்ளாட்ஃபாரம், என்ஜின், வெளிப்புற தோற்றம் என அனைத்திலும் கொண்டுவரப்பட்டுள்ளன. வெளிப்புற தோற்றத்தில் முக்கியமான அப்கிரேட் என்று பார்த்தால் காரின் முன்பக்க முனையில் பொருத்தப்பட்டுள்ள நீளமான வுட்-ஐ சொல்லலாம்.

ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்த புதிய மர பலகைக்கு மேற்புறத்தில் உள்ள க்ரில் சிறிது செங்குத்தாக பெரியதாக்கப்பட்டுள்ளது. இது மேலும் குளிரூட்டப்பட்ட மற்றும் திறமையான காற்று ஓட்டத்தை பெறவும் உதவும் என லெக்ஸஸ் தெரிவித்துள்ளது. முன்பு வழங்கப்பட்டு வந்த எல்இடி டிஆர்எல்-கள் நீக்கப்பட்டுள்ளன.

ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

அதேபோல் முன்பக்க க்ரில் பகுதியில் வழங்கப்பட்ட க்ரோம் பூச்சுகளும் காரின் முன்பக்கத்தை எளிமையானதாக காட்டும் பொருட்டு 2022 என்எக்ஸ் மாடலில் தவிர்க்கப்பட்டுள்ளன. இதனால் எல்இடி டிஆர்எல்கள் & முக்கிய ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர் உடன் காரின் முன்பக்கம் மிகவும் தெளிவானதாக மாறியுள்ளது.

ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இருப்பினும் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், முன்பக்கத்தை காட்டிலும் காரின் பின்பக்கம் தான் அதிக மாற்றங்களை பெற்றுள்ளது. இந்த வகையில் L வடிவிலான ஹெட்லேம்ப் அமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டெயில்கேட்டின் அகலத்திற்கு எல்இடி லைட் பார் ஒன்று செல்வதையும் பார்க்கலாம்.

ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இவ்வாறு மூன்று துண்டுகளாக வழங்கப்பட்டுள்ள சிவப்பு நிற எல்இடி விளக்குகளினால் லெக்ஸஸ் என்.எக்ஸ் மாடல் முன்பை காட்டிலும் தனித்துவமான தோற்றத்தை பெற்றுள்ளது. இவற்றுடன் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ள ‘LEXUS' எழுத்துகளை கடந்த மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட எல்.எஃப்-இசட் மின்மயமாக்கப்பட்ட கான்செப்ட் மாடலில் பார்த்திருக்கலாம்.

ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இயக்க ஆற்றலை பொறுத்தவரையில், புதிய என்.எக்ஸ், லெக்ஸஸின் முதல் ப்ளக்-இன் ஹைப்ரீட்-எலக்ட்ரிக் வாகனமாக வெளிவந்துள்ளது. மேலும் இந்த காரை அதிக திறன்மிக்க பேட்டரி கொண்ட ஹைப்ரீட் வாகனமாகவும், புதியதாக வடிவமைக்கப்பட்ட 2.4 லிட்டர் இன்லைன் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் மற்றும் 2.5 லிட்டர் இன்லைன் 4-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜினை கொண்ட காராகவும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம் என்கிறது லெக்ஸஸ் நிறுவனம்.

ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இதில் ப்ளக்-இன் ஹைப்ரீட் மற்றும் 2.4 லி டர்போசார்ஜ்டு ட்ரிம்களில் அனைத்து-சக்கர-ட்ரைவ் தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. அதேநேரம் மைல்ட் ஹைப்ரீட் அல்லது 2.5 நேச்சுரலி அஸ்பிரேட்டட் என்ஜினை கொண்ட ட்ரிம்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து-சக்கர மற்றும் முன் சக்கர ட்ரைவ் தேர்வு வழங்கப்பட உள்ளன.

ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

புதிய ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் 2022 லெக்ஸஸ் என்எக்ஸ் முற்றிலும் புதிய மாடலாகும். டொயோட்டா ஹெரியர், ஆர்.ஏ.வி4 மற்றும் லெக்ஸஸ் இ.எஸ் கார்களை உருவாக்க பயன்படுத்தப்பட்ட டிஎன்ஜிஏ கட்டமைப்பின் ஜிஏ-கே வெர்சனை பயன்படுத்தி 2022 என்.எக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்த புதிய ப்ளாட்ஃபாரம் பெரிய உருவத்திற்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக புதிய இரண்டாம் தலைமுறை என்.எக்ஸ் காரில் நிச்சயம் விசாலமான உட்புறத்தை எதிர்பார்க்கலாம். 2022 என்.எக்ஸ் காரை இந்தியாவிற்கு லெக்ஸஸ் நிறுவனம் கொண்டுவருமா என்பது உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை வந்தாலும் நிச்சயம் இதன் விலை அதிகமாகவே நிர்ணயிக்கப்படும்.

Most Read Articles
மேலும்... #லெக்ஸஸ் #lexus
English summary
Lexus has unveiled the second generation of their entry-level SUV, the NX. For Lexus, the NX is one of their most successful products after having sold more units than any other models with the Lexus badge in Europe.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X