அதி வேக காரில் மிக பெரிய வீலை பொருத்த பிரபல நிறுவனம் திட்டம்! எவ்ளோ பெருசுனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

உலகின் மிகப் பெரிய கார்பன் சக்கரத்தை தனது புகழ்பெற்ற கார் மாடல் ஒன்றில் பயன்படுத்த இருப்பதாக பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

அதி வேக காரில் மிக பெரிய வீலை பொருத்த பிரபல நிறுவனம் திட்டம்! எவ்ளோ பெருசு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களில் பென்ட்லீயும் ஒன்றும். இந்நிறுவனம் பென்டேகா எஸ்யூவி ரக காரை உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனைச் செய்து வருகின்றது. பெரும் செல்வந்தர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் இக்காருக்கு அமோக வரவேற்பு நிலவி வருகின்றது.

அதி வேக காரில் மிக பெரிய வீலை பொருத்த பிரபல நிறுவனம் திட்டம்! எவ்ளோ பெருசு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

இந்த நிலையில், பென்டேகா எஸ்யூவி காரில் உலகின் மிகப் பெரிய கார்பன் ரக வீலை பயன்படுத்த இருப்பதாக பென்ட்லீ நிறுவனம் அறிவித்துள்ளது. 22 இன்சிலான கார்பன் வீலையே நிறுவனம் பயன்படுத்த இருப்பதாக கூறியிருக்கின்றது. இதுவரை எந்தவொரு நிறுவனமும் அதன் தயாரிப்பு கார்களில் இத்தகைய பெரிய உருவம் கொண்ட காரை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதி வேக காரில் மிக பெரிய வீலை பொருத்த பிரபல நிறுவனம் திட்டம்! எவ்ளோ பெருசு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

பென்ட்லீ பென்டேகா ஓர் சூப்பர் ஃபாஸ்ட் எஸ்யூவி ரக காராகும். இத்தகைய சிறப்புமிக்க காரிலேயே பென்ட்லீ நிறுவனம் உலகின் மிகப்பெரிய வீலை பொருத்த இருக்கின்றது. பென்ட்லீ நிறுவனம் பென்டேகா காரில் 4.0 லிட்டர், ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் எஞ்ஜினை பயன்படுத்தியுள்ளது.

அதி வேக காரில் மிக பெரிய வீலை பொருத்த பிரபல நிறுவனம் திட்டம்! எவ்ளோ பெருசு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

இந்த எஞ்ஜின் ஓர் 8 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட எஞ்ஜினாகும். இது அதிகபட்சமாக 542 பிஎச்பி மற்றும் 770 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 290 கிமீ ஆகும். அதேசமயம், இக்கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100கிமீ எனும் வேகத்தை எட்ட வெறும் 4.5 செகண்டுகளே எடுத்துக் கொள்ளும்.

அதி வேக காரில் மிக பெரிய வீலை பொருத்த பிரபல நிறுவனம் திட்டம்! எவ்ளோ பெருசு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

கார்பன் வீலை பயன்படுத்துவதை முன்னிட்டு பென்ட்லீ நிறுவனம் பென்டேகா ராகை பரிசோதனைச் செய்து வருகின்றது. புதிய வீல் பென்டேகாவின் அதிக வேகத்தையும், திறன் வெளிப்பாட்டையும் தாங்குமா என்பது போன்ற பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதி வேக காரில் மிக பெரிய வீலை பொருத்த பிரபல நிறுவனம் திட்டம்! எவ்ளோ பெருசு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

இந்த சோதனை வெற்றியின் தருவாயில் இருப்பதாகவும், மிக விரைவில் 22 இன்சிலான கார்பன் வீல்களுடன் பென்டேகா வெளிவரும் எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சோதனையின் அடிப்படையில் அதிக வேகம், கரடு முரடான சாலை, பள்ளம் மற்றும் மேடுகள் ஆகியவை நிறைந்த சாலைகளில் வைத்து பல பரீட்சையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.

அதி வேக காரில் மிக பெரிய வீலை பொருத்த பிரபல நிறுவனம் திட்டம்! எவ்ளோ பெருசு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

நல்ல இயக்க அனுபவம், ஸ்டியரிங் வீல் இயக்கம் ஆகியவற்றை வழங்கும் நோக்கில் கார்பன் வீலை பயன்படுத்த பென்ட்லீ திட்டமிட்டிருக்கின்றது. ஓர் நல்ல இயக்கத்தை ஓர் வீல் தருமானால் அந்த ரைடிங் அனுபவம் அலாதியானதாக அமையும். இதை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கவே பென்ட்லீ பெரிய அளவிலான வீலை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதி வேக காரில் மிக பெரிய வீலை பொருத்த பிரபல நிறுவனம் திட்டம்! எவ்ளோ பெருசு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

தற்போதைய நிலவரப்படி பென்ட்லீ பென்டேகா எஸ்யூவி சூப்பர் லக்சூரி கார் இந்தியாவில் ரூ. 4.10 கோடி என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ என பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கிறது. இத்துடன், சொகுசு அம்சங்களும் ஏராளமாக இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #பென்ட்லீ #bentley
English summary
Luxury Car Maker Bentley Planning To Add World's Largest Carbon Wheel To Bentayga SUV. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X