வாடிக்கையாளர்களை கவர டைகன் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... போர்ஷே அதிரடியால் போட்டியாளர்கள் கலக்கம்

போர்ஷே நிறுவனம் அதன் டைகன் மின்சார கார் மாடலில் குறைந்த விலை வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இக்காரின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி இப்பதிவில் காணலாம்.

வாடிக்கையாளர்களை கவர டைகன் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... போர்ஷே அதிரடியால் போட்டியாளர்கள் கலக்கம்!

போர்ஷே நிறுவனம் அதன் டைகன் மின்சார காரை குறைந்த விலையில் விற்பனைக்கு வழங்கும் நோக்கில் ஆரம்ப நிலை வேரியண்ட் ஒன்றை அறிமுகம் செய்திருக்கின்றது. அதாவது, டைகன் மாடலில் ஆர்டபிள்யூடி எனும் புதிய வேரியண்டை நிறுவனம் உலகளவில் வெளியீடு செய்திருக்கின்றது.

வாடிக்கையாளர்களை கவர டைகன் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... போர்ஷே அதிரடியால் போட்டியாளர்கள் கலக்கம்!

இது ஓர் ஆரம்பநிலை வேரியண்ட் என்பதால் தற்போது டைகன் மாடலில் விற்பனைக்குக் கிடைக்கும் தேர்வுகளிலேயே மிக விலைக் குறைந்த தேர்வாக இது இருக்கின்றது. இந்த புதிய வேரியண்டின் அறிமுகத்தால் இனி டைகன் நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

வாடிக்கையாளர்களை கவர டைகன் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... போர்ஷே அதிரடியால் போட்டியாளர்கள் கலக்கம்!

ஆமாங்க, முன்னதாக மூன்று நிலை தேர்வுகளில் மட்டுமே கிடைத்து வந்த டைகன் காரிலேயே தற்போது நான்காவது வேரியண்டாக ஆர்டபிள்யூடி இணைக்கப்பட்டிருக்கின்றது. டைகன் டர்போ எஸ், டைகன் டர்போ மற்றும் டைகன் 4 எஸ் ஆகிய வேரியண்டுகளுடனேயே புதிய ஆர்டபிள்யூடி தேர்வு சேர்க்கப்பட்டிருக்கின்றது.

வாடிக்கையாளர்களை கவர டைகன் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... போர்ஷே அதிரடியால் போட்டியாளர்கள் கலக்கம்!

இக்கார் பின் வீல் இயங்கும் திறன் மற்றும் இரு விதமான அளவுள்ள பேட்டரி பேக்கில் விற்பனைக்குக் கிடைக்கும். இதுதவிர வேறு எந்த மாற்றத்தையும் இக்கார் பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், விலைக் குறைவிற்காக காருக்குள் இருக்கும் சில பிரீமியம் அம்சங்களை நீக்கியிருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாடிக்கையாளர்களை கவர டைகன் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... போர்ஷே அதிரடியால் போட்டியாளர்கள் கலக்கம்!

அதேவேலையில், எல்இடி ஹெட்லைட், பக்கவாட்டு சில்கள், பின் பக்கத்தில் டிஃப்யூசர் மற்றும் 19 இன்சிலான ஸ்போக் அலாய் வீல்கள் ஆகியவற்றை ஸ்டாண்டர்டு வசதியாக இக்கார் பெற்றிருக்கின்றது. தொடர்ந்து, காரின் உட்புறத்தில் இரு விதமான திரைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு விதமான தகவல்கள் மற்றும் பொழுதுபோக்கை வழங்கும் நோக்கில் இவை பொருத்தப்பட்டிருக்கின்றன.

வாடிக்கையாளர்களை கவர டைகன் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... போர்ஷே அதிரடியால் போட்டியாளர்கள் கலக்கம்!

தொடர்ந்து, 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளக் கூடிய வசதியுடன் லெதர் இருக்கை, இரு லக்கேஜ் கம்பார்ட்மெண்ட், 22 கிலேவாட் திறனுடைய சார்ஜர், 3 சேம்பர் தொழில்நுட்பத்திலான அடேப்டிவ் ஏர் சஸ்பென்ஷன், உயர் திறனை வெளிப்படுத்தக்கூடிய போர்ஷே பிரேக்குகள் உள்ளிட்டவையும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

வாடிக்கையாளர்களை கவர டைகன் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... போர்ஷே அதிரடியால் போட்டியாளர்கள் கலக்கம்!

ஆகையால், டைகன் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிற வேரியண்டுகளில் சலைத்ததில்லாமல் ஆர்டபிள்யூடி வேரியண்ட் காட்சியளிக்கின்றது. விலைக் குறைந்த வேரியண்டாக இது அறிமுகமாகியிருந்தாலும் இதில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் அதன் ரசிகர்களை வியக்க வைக்கின்ற வகையில் அமைந்திருக்கின்றது.

வாடிக்கையாளர்களை கவர டைகன் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... போர்ஷே அதிரடியால் போட்டியாளர்கள் கலக்கம்!

அதேசமயம், இது வெளிப்படுத்தும் திறனும் வாகன ஆர்வலர்களை வியக்க வைக்கும் அமைந்துள்ளது. டைகன் மின்சார கார் இருவிதமான பேட்டரி பேக்கில் விற்பனைக்குக் கிடைக்கும். ஒன்று 79.2 kWh என்ற திறனிலும், 93.4 kWh திறனிலும் கிடைக்கும். இவ்விரு பேட்டரி பேக்கினைக் கொண்ட டைகன் மின்சார கார்கள் ஒரே மாதிரியான பெர்ஃபார்மென்ஸை வெளிப்படுத்தும் வகையில் இருக்கின்றன.

வாடிக்கையாளர்களை கவர டைகன் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... போர்ஷே அதிரடியால் போட்டியாளர்கள் கலக்கம்!

அதாவது, போர்ஷே டைகன் 5.4 செகண்டுகளில் மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தை எட்டும் திறனைக் கொண்டிருக்கின்றது. அதேசமயம், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 230 கிமீ ஆகும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் திறனிலேயே இக்கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதில், குறைந்த திறன் கொண்ட பேட்டரி பேக்கில் கிடைக்கும் டைகன் மின்சார காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 431 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

வாடிக்கையாளர்களை கவர டைகன் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... போர்ஷே அதிரடியால் போட்டியாளர்கள் கலக்கம்!

இதேபோன்று, உயர்நிலை பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும் டைகன் ஓர் முழுமையான சார்ஜில் 484 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இதன் பேட்டரிகளை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 22.5 நிமிடங்கள் போதும். போர்ஷே நிறுவனம் இந்த மின்சார காரை கடந்த 2019ம் ஆண்டிலேயே முதல் முறையாக உலகளவில் வெளியீடு செய்தது.

வாடிக்கையாளர்களை கவர டைகன் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... போர்ஷே அதிரடியால் போட்டியாளர்கள் கலக்கம்!

2020ம் ஆண்டின் இறுதியில் ஒட்டுமொத்தமாக 20 யூனிட்டுகள் வரை இக்கார் விற்பனையாகியிருந்தது. இந்த புதிய மைல்கல் விற்பனை வளர்ச்சி ஒட்டுமொத்த மின்வாகன சந்தைக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புதிய டைகன் ஆர்டபிள்யூடி வேரியண்ட் இந்திய மதிப்பில் ரூ. 70 லட்சத்திற்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து, இக்காரின் இந்திய வருகை 2021ம் ஆண்டில் அரங்கேறலாம் என யூகிக்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #போர்ஷே #porsche
English summary
Luxury Car Maker Porsche Revealed Taycan Entry Level RWD Variant. Read In Tamil.
Story first published: Monday, January 25, 2021, 17:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X