சொகுசு கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ்- பிஎம்டபிள்யூ இடையே தொடரும் பலத்த போட்டி!! கடந்த மாதத்தில் எது முதலிடம்?

கடந்த 2021 நவம்பர் மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட சொகுசு கார்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சொகுசு கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ்- பிஎம்டபிள்யூ இடையே தொடரும் பலத்த போட்டி!! கடந்த மாதத்தில் எது முதலிடம்?

கடந்த மாதத்தில் மொத்தம் 2,173 லக்சரி கார்கள் நம் நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 2,328 யூனிட்களாக இருந்தது. இந்த வகையில் சொகுசு கார்களின் விற்பனை இந்தியாவில் 6.66% குறைந்துள்ளது. அதாவது 155 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சொகுசு கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ்- பிஎம்டபிள்யூ இடையே தொடரும் பலத்த போட்டி!! கடந்த மாதத்தில் எது முதலிடம்?

இதற்கு முந்தைய 2021 அக்டோபரிலும் கடந்த மாத விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் 7.22 சதவீதம் (169 யூனிட்கள்) அதிகமாக 2,342 யூனிட் சொகுசு கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. சொகுசு கார்களின் இந்த விற்பனை எண்ணிக்கைகள் அனைத்தும் ஃபடா (FADA) எனப்படும் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் வாயிலாக நமக்கு தெரியவந்துள்ளன.

சொகுசு கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ்- பிஎம்டபிள்யூ இடையே தொடரும் பலத்த போட்டி!! கடந்த மாதத்தில் எது முதலிடம்?

இதில் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்ட சொகுசு கார்களின் எண்ணிக்கை அடங்குவதில்லை. ஏனெனில் இந்த மாநிலங்கள் தேசிய இணைய வாகன பதிவு தளமான வாஹனில் இன்னும் இணையவில்லை. இந்தியாவில் உள்ள 1,589 ஆர்டிஓ அலுவலங்களில் 1,378 ஆர்டிஓ அலுவலங்களில் இருந்து விபரங்கள் பெறப்பட்டுள்ளன.

சொகுசு கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ்- பிஎம்டபிள்யூ இடையே தொடரும் பலத்த போட்டி!! கடந்த மாதத்தில் எது முதலிடம்?

இந்தியாவில் அதிகம் சொகுசு கார்களை விற்பனை செய்த நிறுவனமாக வழக்கம்போல் கடந்த நவம்பரிலும் மெர்சிடிஸ் நிறுவனமே தொடர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 885 கார்களை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. 2020 நவம்பரிலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான மெர்சிடிஸ் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தாலும், 2021 அக்டோபரில் மெர்சிடிஸ் கார்களின் விற்பனை எண்ணிக்கை வெற்றிக்கரமாக ஆயிரத்தை கடந்திருந்தது.

சொகுசு கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ்- பிஎம்டபிள்யூ இடையே தொடரும் பலத்த போட்டி!! கடந்த மாதத்தில் எது முதலிடம்?

இந்த வகையில் மாதம்-மாதம் ஒப்பிடுகையில், மெர்சிடிஸின் விற்பனை 11.59% சரிந்துள்ளது. இருப்பினும் இத்தகைய லக்சரி கார்கள் சேல்ஸ் லிஸ்ட்டில் மெர்சிடிஸ் தான் முதலிடத்தை தொடர்கிறது. இரண்டாவது இடத்தில் இந்த நிறுவனத்தை நெருக்கமாக பின்தொடர்ந்தவாறு பிஎம்டபிள்யூ 727 யூனிட் கார்களின் விற்பனை உடன் உள்ளது. இந்த எண்ணிக்கை 2020 நவம்பரை காட்டிலும் வெறும் 6.07 சதவீதமும், 2021 அக்டோபரை காட்டிலும் 4.97 சதவீதமும் மட்டுமே குறைவாகும்.

சொகுசு கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ்- பிஎம்டபிள்யூ இடையே தொடரும் பலத்த போட்டி!! கடந்த மாதத்தில் எது முதலிடம்?

ஏனெனில் இந்த இரு மாதங்களில் பிஎம்டபிள்யூ கார்களின் விற்பனை 750 யூனிட்கள் என்ற அளவிலேயே இருந்தது. மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ இவை இரண்டும் தான் தற்போதைக்கு லக்சரி கார்கள் விற்பனையில் பலரது பிரதான தேர்வாக உள்ளன. ஏனெனில் இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை 200-ஐ கூட கடக்கவில்லை.

சொகுசு கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ்- பிஎம்டபிள்யூ இடையே தொடரும் பலத்த போட்டி!! கடந்த மாதத்தில் எது முதலிடம்?

2020 நவம்பர் மொத்தம் 220 யூனிட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருந்த JLR நிறுவனத்தின் கார்கள், கடந்த அக்டோபரில் 174 யூனிட்களே விற்கப்பட்டு இருந்தன. கடந்த நவம்பரில் 2021 அக்டோபரை காட்டிலும் 13.79% அதிகமாக 198 கார்களை ஜாகுவார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதற்கடுத்து ஃபோக்ஸ்வேகன் ஆடி நிறுவனம் 191 கார்களை கடந்த நவம்பர் மாதத்தில் விற்பனை செய்துள்ளது.

சொகுசு கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ்- பிஎம்டபிள்யூ இடையே தொடரும் பலத்த போட்டி!! கடந்த மாதத்தில் எது முதலிடம்?

வழக்கமாக இந்த லிஸ்ட்டில் ஆடி நிறுவனம் தான் 3வது இடத்தை பிடிக்கும். ஆனால் இம்முறை வழக்கத்தை காட்டிலும் 24% அளவில் ஆடி கார்கள் விற்பனை குறைந்துள்ளதால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வால்வோ பிராண்டில் இருந்து 134 கார்கள் கடந்த மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 11.67% அதிகமாகும். ஆனால் மறுப்பக்கம், 2020 நவம்பரை காட்டிலும் 27.57% குறைவாகும்.

சொகுசு கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ்- பிஎம்டபிள்யூ இடையே தொடரும் பலத்த போட்டி!! கடந்த மாதத்தில் எது முதலிடம்?

ஏனெனில் கடந்த அக்டோபரில் 120 வால்வோ கார்களும், கடந்த ஆண்டு நவம்பரில் 185 வால்வோ கார்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த லிஸ்ட்டில் பிரபல ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷே 6வது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் 32 போர்ஷே கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 நவம்பரிலும் சரி, 2021 அக்டோபரிலும் சரி போர்ஷே கார்களின் விற்பனை எண்ணிக்கை 30 யூனிட்களை தாண்டவில்லை.

சொகுசு கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ்- பிஎம்டபிள்யூ இடையே தொடரும் பலத்த போட்டி!! கடந்த மாதத்தில் எது முதலிடம்?

இவ்வாறு வருடம்-வருடம் ஒப்பிடுகையிலும், மாதம்-மாதம் ஒப்பிடுகையிலும் நேர்மறையான விற்பனை எண்ணிக்கையை இந்த சொகுசு கார்கள் விற்பனை லிஸ்ட்டில் பதிவு செய்த ஒரே நிறுவனம் போர்ஷே ஆகும். இவற்றிற்கு அடுத்துள்ள நிறுவனங்கள் அனைத்தும் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான கார்களையே கடந்த மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளன.

சொகுசு கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ்- பிஎம்டபிள்யூ இடையே தொடரும் பலத்த போட்டி!! கடந்த மாதத்தில் எது முதலிடம்?

அதிகப்பட்சமாக பெண்ட்லீ 5 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் 2020 நவம்பரில் ஒரு பெண்ட்லீ கார் கூட விற்பனை செய்யப்படவில்லை. 2021 அக்டோபரில் 2 பெண்ட்லீ கார்கள் விற்கப்பட்டு இருந்தன. ரோல்ஸ் ராய்ஸ் கடந்த மாதத்தில் 1 காரை விற்பனை செய்துள்ளது. லம்போர்கினி பிராண்டில் இருந்து ஒரு கார் கூட விற்பனை செய்யப்படவில்லை.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Luxury car retail sales Nov 2021, decline at 6.66%
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X