சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் மஹிந்திரா நிறுவன கார்களின் விற்பனை எண்ணிக்கை குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

மஹிந்திரா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16,050 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 15,276 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 5 சதவீத வளர்ச்சியை மஹிந்திரா பதிவு செய்துள்ளது. அத்துடன் இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார் என்ற பெருமையை பொலிரோ பெற்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மஹிந்திரா நிறுவனம் 5,053 பொலிரோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 5,661 ஆக இருந்தது. எனவே பொலிரோ விற்பனை 11 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

இருந்தாலும் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து விட்டது. இந்த பட்டியலில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரான எக்ஸ்யூவி300 இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் மஹிந்திரா நிறுவனம் வெறும் 2,132 எக்ஸ்யூவி300 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

ஆனால் 2020ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 3,974 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 86 சதவீத வளர்ச்சியை எக்ஸ்யூவி300 பதிவு செய்துள்ளது. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார், 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் பட்டியலில் ஸ்கார்பியோ 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் 3,656 ஆக இருந்த ஸ்கார்பியோ காரின் விற்பனை எண்ணிக்கை, 2020ம் ஆண்டு டிசம்பரில் 3,417 ஆக குறைந்துள்ளது. இது 7 சதவீத வீழ்ச்சியாகும்.

சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

புதிய தலைமுறை ஸ்கார்பியோ காரை மஹிந்திரா நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதன்பின் ஸ்கார்பியோ எஸ்யூவி கார்களின் விற்பனை நன்றாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த பட்டியலில் தார் எஸ்யூவி 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் வெறும் 2 யூனிட்களாக இருந்த தார் எஸ்யூவியின் விற்பனை எண்ணிக்கை 2020ம் ஆண்டு டிசம்பரில் 2,670 ஆக உயர்ந்துள்ளது.

சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

புதிய தலைமுறை மாடல் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பின், தார் எஸ்யூவியின் விற்பனை உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் 5வது இடத்தை எக்ஸ்யூவி500 எஸ்யூவி பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் 1,399 ஆக இருந்த எக்ஸ்யூவி500 காரின் விற்பனை எண்ணிக்கை, 2020ம் ஆண்டு டிசம்பரில் வெறும் 750 ஆக குறைந்துள்ளது. இது 46 சதவீத வீழ்ச்சியாகும்.

சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

ஸ்கார்பியோவை போல், எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடலும் விரைவில் அறிமுகமாகவுள்ளது. அனேகமாக வரும் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படலாம். அதன்பின் எக்ஸ்யூவி500 காரின் விற்பனையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் 6வது இடத்தை மராஸ்ஸோ எம்பிவி பிடித்துள்ளது.

சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் 1,292 ஆக இருந்த மராஸ்ஸோ கார்களின் விற்பனை எண்ணிக்கை, 2020ம் ஆண்டு டிசம்பரில் வெறும் 161 ஆக குறைந்துள்ளது. இது 88 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் 7வது இடத்தை கேயூவி100 பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் 35 ஆக இருந்த கேயூவி100 காரின் விற்பனை எண்ணிக்கை, 2020ம் ஆண்டு டிசம்பரில் 16 ஆக குறைந்துள்ளது. இது 54 சதவீத வீழ்ச்சியாகும்.

சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

இந்த பட்டியலில் 8வது மற்றும் கடைசி இடத்தை அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் 123 ஆக இருந்த அல்டுராஸ் ஜி4 காரின் விற்பனை எண்ணிக்கை, 2020ம் ஆண்டு டிசம்பரில் வெறும் 9 யூனிட்களாக குறைந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 93 சதவீத வீழ்ச்சியை அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி சந்தித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra December 2020 Model Wise Sales - Bolero Leads Chart. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X