எக்ஸ்யூவி300 டபிள்யூ6 டீசல் காரில் இனி இந்த வசதிகள் கிடைக்காது!! அதிரடியாக நீக்கியது மஹிந்திரா!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரில் இருந்து சில வசதிகள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

எக்ஸ்யூவி300 டபிள்யூ6 டீசல் காரில் இனி இந்த வசதிகள் கிடைக்காது!! அதிரடியாக நீக்கியது மஹிந்திரா!

விற்பனையில் உள்ள கார் ஒன்றில் இருந்து சில வசதிகள் நீக்கப்படுவது தற்போதைய காலக்கட்டத்தில் மிகவும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. தொடர்ந்து அதிகரித்துவரும் கார் பாகங்களின் விலைகளினால் இவ்வாறான நடவடிக்கைகளில் தயாரிப்பு நிறுவனங்கள் இறங்குகின்றன.

எக்ஸ்யூவி300 டபிள்யூ6 டீசல் காரில் இனி இந்த வசதிகள் கிடைக்காது!! அதிரடியாக நீக்கியது மஹிந்திரா!

இந்த வகையில் தற்போது இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ள நிறுவனம், மஹிந்திரா. உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா அதன் காம்பெக்ட் எஸ்யூவி மாடலான எக்ஸ்யூவி300-இன் மத்திய டபிள்யூ6 ட்ரிம் நிலையில் இருந்து சில பாகங்களை நீக்கியுள்ளது. டீசல் என்ஜின் உடன் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வை பெறும் இந்த எக்ஸ்யூவி300 ட்ரிம்-மின் வெளிப்புறத்தில் பின்பக்க ஸ்பாய்லர் மற்றும் கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங் உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன.

எக்ஸ்யூவி300 டபிள்யூ6 டீசல் காரில் இனி இந்த வசதிகள் கிடைக்காது!! அதிரடியாக நீக்கியது மஹிந்திரா!

அதேபோல் உட்புற கேபினில் பின் இருக்கை பயணிகளுக்கான ஆர்ம் ரெஸ்ட், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் மற்றும் 60:40 என்கிற விகிதத்தில் மடக்கக்கூடிய பின் இருக்கை வரிசை உள்ளிட்ட அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளதாக டீம் பிஎச்பி செய்திதளம் செய்தியினை வெளியிட்டுள்ளது.

எக்ஸ்யூவி300 டபிள்யூ6 டீசல் காரில் இனி இந்த வசதிகள் கிடைக்காது!! அதிரடியாக நீக்கியது மஹிந்திரா!

மேலும், தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பும் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக எளிமையான இரட்டை டின் (DIN) ஸ்டீரியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளதாம். இவற்றுடன் எக்ஸ்யூவி300 மாடலின் டபிள்யூ6 வேரியண்ட்டில் பின்பக்க பார்சல் அலமாரியும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எக்ஸ்யூவி300 டபிள்யூ6 டீசல் காரில் இனி இந்த வசதிகள் கிடைக்காது!! அதிரடியாக நீக்கியது மஹிந்திரா!

முன்னதாக இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் இதேபோன்று எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் டாப் டபிள்8 (O) ட்ரிம்மில் இருந்து ஹீட்டட் ORVM-கள் மற்றும் இரண்டாவது இருக்கை வரிசையில் மத்திய பயணிக்கான 3-புள்ளி சீட்பெல்ட்டை ரத்து செய்திருந்தது. இவை மட்டுமின்றி டபிள்யூ8(O) வேரியண்ட்டில் ஓட்டுனரின் கால் முட்டிகளை பாதுகாக்கும் வகையில் வழங்கப்பட்டு வந்த 7வது காற்றுப்பையும் (ஏர்பேக்) நீக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்யூவி300 டபிள்யூ6 டீசல் காரில் இனி இந்த வசதிகள் கிடைக்காது!! அதிரடியாக நீக்கியது மஹிந்திரா!

இவ்வாறு கிடைக்கும் இலாபத்தை பொறுத்து தனது தயாரிப்பு வாகனங்களில் வசதிகளை திருத்தியமைப்பதை சமீப காலமாக மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாக கொண்டுள்ளது. அதேநேரம் மறுப்பக்கம் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை உயர்த்துவதையும் மஹிந்திரா மறக்கவில்லை. எக்ஸ்யூவி300 டபிள்யூ6 டீசல் வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலை கடந்த மே மாதத்தில் ரூ.90,000 உயர்த்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்யூவி300 டபிள்யூ6 டீசல் காரில் இனி இந்த வசதிகள் கிடைக்காது!! அதிரடியாக நீக்கியது மஹிந்திரா!

மஹிந்திரா நிறுவனம் முதன்முறையாக எக்ஸ்யூவி300 காரை 2018இல் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. கவர்ச்சிகரமான வசதிகள், செயல்திறன் மற்றும் காற்றோட்டமான கேபின் உள்ளிட்டவற்றை கொண்டிருந்தாலும், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான் & மாருதி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மற்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் அளவிற்கு இந்த மஹிந்திரா காம்பெக்ட் எஸ்யூவி விற்பனையாகுவதில்லை என்பதை மாதந்தோறும் வெளியாகும் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

எக்ஸ்யூவி300 டபிள்யூ6 டீசல் காரில் இனி இந்த வசதிகள் கிடைக்காது!! அதிரடியாக நீக்கியது மஹிந்திரா!

அதுமட்டுமின்றி இந்திய காம்பெக்ட் எஸ்யூவி கார் பிரிவில் புதிய மாடல்களின் வருகையால் எக்ஸ்யூவி300-இன் விற்பனை சமீப மாதங்களாக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனையில் டாடா கார்களுக்கு இணையாக முழு-ஐந்து நட்சத்திரங்களை இந்த மஹிந்திரா கார் பெற்றிருந்தது.

எக்ஸ்யூவி300 டபிள்யூ6 டீசல் காரில் இனி இந்த வசதிகள் கிடைக்காது!! அதிரடியாக நீக்கியது மஹிந்திரா!

எக்ஸ்யூவி300 மாடலில் பாதுகாப்பு அம்சங்களாக 6 காற்றுப்பைகள், இபிடி உடன் ஏபிஎஸ், ஐசோஃபிக்ஸ் குழந்தைகளுக்கான இருக்கை, மோதலை உணர்ந்து பூட்டி கொள்ளும் கதவுகள் மற்றும் டிஸ்க் ப்ரேக்குகள் உள்ளிட்டவற்றை தயாரிப்பு நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் வழங்கப்படும் மற்ற முக்கிய அம்சங்கள் என்று பார்த்தால், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே உடன் இணைக்கக்கூடிய 7-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை சொல்லலாம்.

எக்ஸ்யூவி300 டபிள்யூ6 டீசல் காரில் இனி இந்த வசதிகள் கிடைக்காது!! அதிரடியாக நீக்கியது மஹிந்திரா!

எலக்ட்ரிக் சன்ரூஃப், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் இணைப்பு கார் தொழிற்நுட்பம் உள்ளிட்டவை எக்ஸ்யூவி300-இன் பிற முக்கிய அம்சங்களாகும். டபிள்யூ4, டபிள்யூ6, டபிள்யூ8 மற்றும் டபிள்யூ8 (O) என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.95 லட்சத்தில் இருந்து ரூ.13.46 லட்சம் வரையில் உள்ளன.

எக்ஸ்யூவி300 டபிள்யூ6 டீசல் காரில் இனி இந்த வசதிகள் கிடைக்காது!! அதிரடியாக நீக்கியது மஹிந்திரா!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு எக்ஸ்யூவி300 காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் & 1.5 லிட்டர் டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 109 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் 114 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra deleted some features from mid-spec W6 trim of XUV300.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X