XUV500 உற்பத்தி திடீர் நிறுத்தம்! சந்தையை விட்டு மொத்தமா தூக்கிட்டாங்க! Mahindra அதிரடியால் கலக்கம்!

மஹிந்திரா நிறுவனம் அதன் எக்ஸ்யூவி500 காரின் உற்பத்தியை நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன. பிரபலமான இந்த கார் மாடலின் உற்பத்தியை நிறுவனம் நிறுத்தியதற்கான காரணம் பற்றிய முக்கிய விபரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

XUV500 உற்பத்தி திடீர் நிறுத்தம்! சந்தையை விட்டு மொத்தமா தூக்கிட்டாங்களாம்! Mahindra அதிரடியால் வாடிக்கையாளர்கள் கலக்கம்!

மஹிந்திரா நிறுவனம் மிக சமீபத்தில் எக்ஸ்யூவி700 எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. முன்-பதிவு பணிகள் தொடங்கிய முதல் இரண்டே நாட்களில் 50 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங் இக்கார் மாடலுக்குக் கிடைத்தது.

XUV500 உற்பத்தி திடீர் நிறுத்தம்! சந்தையை விட்டு மொத்தமா தூக்கிட்டாங்களாம்! Mahindra அதிரடியால் வாடிக்கையாளர்கள் கலக்கம்!

இந்தளவிற்கு மிக அமோகமான வரவேற்பை எக்ஸ்யூவி700 பெற்று வருகின்றது. இந்த காரை மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி500 மாடலை தழுவியே உருவாக்கியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், இரண்டிற்கும் இடையில் பல்வேறு மாற்றங்கள் தென்படுகின்றன. தொழில்நுட்பம் அம்சங்கள் மற்றும் அணிகலன்கள் ஆகியவற்றால் இக்கார்கள் இரண்டும் மாறுபட்டு காட்சியளிக்கின்றன.

XUV500 உற்பத்தி திடீர் நிறுத்தம்! சந்தையை விட்டு மொத்தமா தூக்கிட்டாங்களாம்! Mahindra அதிரடியால் வாடிக்கையாளர்கள் கலக்கம்!

ஸ்மார்ட் டூர் ஹேண்டில்கள், அடாஸ் அம்சம், அதிக தொழில்நுட்ப வசதிக் கொண்ட முகப்பு பகுதி மின் விளக்கு ஆகியவற்றால் எக்ஸ்யூவி 700 அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் எக்ஸ்யூவி700 கார் உருவாக முன்மாதிரி மாடலாக இருந்த எக்ஸ்யூவி500 மாடலின் உற்பத்தியை நிறுவனம் தற்போது நிறுத்தியிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளி வர தொடங்கியுள்ளன.

XUV500 உற்பத்தி திடீர் நிறுத்தம்! சந்தையை விட்டு மொத்தமா தூக்கிட்டாங்களாம்! Mahindra அதிரடியால் வாடிக்கையாளர்கள் கலக்கம்!

எக்ஸ்யூவி700 விற்பனைக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இக்காரின் விற்பனை வெளியேற்றத்தை நிறுவனம் செய்திருக்கின்றது. அதே நேரத்தில் இது தற்காலிக வெளியேற்றம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக விரைவில் புதிய தோற்றம் மற்றும் சிறப்பு அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகின்றது.

XUV500 உற்பத்தி திடீர் நிறுத்தம்! சந்தையை விட்டு மொத்தமா தூக்கிட்டாங்களாம்! Mahindra அதிரடியால் வாடிக்கையாளர்கள் கலக்கம்!

தனது போட்டியாளர்களான ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஹெக்டர் மற்றும் டாடா ஹாரியர் ஆகியவற்றிற்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் புதுமையான அம்சங்களுடன் எக்ஸ்யூவி500 புத்துயிர் பெற்று மீண்டும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மஹிந்திரா நிறுவனம் அண்மையில் 9 புதிய வாகன மாடல்களை இந்தியாவில் களமிறக்க இருப்பதாக அறிவித்திருந்தது.

XUV500 உற்பத்தி திடீர் நிறுத்தம்! சந்தையை விட்டு மொத்தமா தூக்கிட்டாங்களாம்! Mahindra அதிரடியால் வாடிக்கையாளர்கள் கலக்கம்!

2026ம் ஆண்டிற்குள் அனைத்தும் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதில் ஒன்றாக எக்ஸ்யூவி500 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வெளியேற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலை-தள பக்கத்தில் எக்ஸ்யூவி500 பற்றிய விபரங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், விற்பனையாளர்கள் இக்காருக்கான புக்கிங்கை தற்போது நிறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

XUV500 உற்பத்தி திடீர் நிறுத்தம்! சந்தையை விட்டு மொத்தமா தூக்கிட்டாங்களாம்! Mahindra அதிரடியால் வாடிக்கையாளர்கள் கலக்கம்!

மிக விரைவில் இக்கார் விற்பனைக்கு வரும் என்று ஆதரவளிக்கக் கூடிய தகவல்கள் வெளி வந்தாலும், தற்போதைய வெளியேற்றம் எக்ஸ்யூவி500 பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது. மிகவும் பிரமாண்டமான தோற்றத்தை விரும்பும் கார் பிரியர்களுக்கு உகந்த வாகனமாக எக்ஸ்யூவி500 இருந்து வருகின்றது. ஆகையால், இதன் வெளியேற்றம் பலருக்கு கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேலையில், மிக விரைவில் புதுமையான அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் என்ற தகவல் சற்றே மகிழ்ச்சியில் ஆழ்த்தக் கூடியதாக இருக்கின்றது.

XUV500 உற்பத்தி திடீர் நிறுத்தம்! சந்தையை விட்டு மொத்தமா தூக்கிட்டாங்களாம்! Mahindra அதிரடியால் வாடிக்கையாளர்கள் கலக்கம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் பிஎஸ்6 தர 2.2 லிட்டர் எம்-ஹாவ்க் டீசல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 153 பிஎச்பி மற்றும் 360 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டார் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் தேர்வில் கிடைத்து வந்தது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra ends production of xuv500 here is full details
Story first published: Friday, November 12, 2021, 19:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X