கார்கோ பயன்பாட்டிற்கான பிரத்யேக மூன்று சக்கர மின்சார வாகனம் அறிமுகம்... இது மஹிந்திரா தயாரிப்பு!

மஹிந்திரா நிறுவனத்தின் டிடெல் மூன்று சக்கர மின்சார வாகனம் அறிமுகம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

கார்கோ பயன்பாட்டிற்கான பிரத்யேக மூன்று சக்கர மின்சார வாகனம் அறிமுகம்... இது மஹிந்திரா தயாரிப்பு!

மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் பிரிவின் வாயிலாக வர்த்தகத்துறைக்கு உதவக்கூடிய மின்சார வாகனம் ஒன்றை மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பிரத்யேகமாக டெலிவரி மற்றும் பார்சல் சர்வீஸ் சேவையில் மட்டுமே ஈடுபடுத்தும் இதனை மஹிந்திரா வடிவமைத்திருக்கின்றது.

கார்கோ பயன்பாட்டிற்கான பிரத்யேக மூன்று சக்கர மின்சார வாகனம் அறிமுகம்... இது மஹிந்திரா தயாரிப்பு!

எனவேதான் இந்த வாகனத்திற்கு சிறிய கார்கோ போன்ற தோற்றத்தைக் கொடுத்திருக்கின்றது. மேலும், கார்கோ பன்பாட்டிற்கு உதவுகின்ற வகையிலான பின்பக்க கட்டுமானம் மற்றும் சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

கார்கோ பயன்பாட்டிற்கான பிரத்யேக மூன்று சக்கர மின்சார வாகனம் அறிமுகம்... இது மஹிந்திரா தயாரிப்பு!

மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு உலக நாடுகள் அனைத்தும் மின் வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கியிருக்கின்றன. இதனடிப்படையில் சில தனியார் நிறுவனங்களும் தங்களின் சேவையில் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன.

கார்கோ பயன்பாட்டிற்கான பிரத்யேக மூன்று சக்கர மின்சார வாகனம் அறிமுகம்... இது மஹிந்திரா தயாரிப்பு!

அத்தகையோருக்கு உதவுகின்ற வகையிலேயே மஹிந்திரா இந்த மூன்று சக்கர மின்சார வாகனத்தை தயார் செய்து, தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இடெல் (EDel) எனும் பெயரில் இந்த மின்சார மூன்று சக்கர கார்கோ வாகனத்தை களமிறக்கியிருக்கின்றது.

கார்கோ பயன்பாட்டிற்கான பிரத்யேக மூன்று சக்கர மின்சார வாகனம் அறிமுகம்... இது மஹிந்திரா தயாரிப்பு!

சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு கூட்டணியின் வாயிலாக இந்த மின்சார வாகனத்தை வழங்க மஹிந்திரா திட்டமிட்டிருக்கின்றது. முதற்கட்டமாகக பெங்களூரு, புதுதில்லி, மும்பை, புனே, ஹைதரபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் மட்டுமே புதிய மின்சார கார்கோ வாகனம் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றது.

கார்கோ பயன்பாட்டிற்கான பிரத்யேக மூன்று சக்கர மின்சார வாகனம் அறிமுகம்... இது மஹிந்திரா தயாரிப்பு!

இதனைத் தொடர்ந்தே பிற முக்கிய நகரங்களுக்கு இது பயன்பாட்டிற்கு வரும் என தெரிகின்றது. ஆனால், சென்னைக்கு இந்த வாகனம் பயன்பாட்டிற்கு வருமா என்கிற அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை. இருப்பினும், அதிகரித்து வரும் மின் டிமாண்டின் காரணமாக இது விரைவில் சென்னை சாலையில் பறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த வருடத்திற்குள் இது எதிர்பார்க்கப்படுகின்றது.

கார்கோ பயன்பாட்டிற்கான பிரத்யேக மூன்று சக்கர மின்சார வாகனம் அறிமுகம்... இது மஹிந்திரா தயாரிப்பு!

புதிய வாகனத்தை அறிமுகப்படுத்திய கையோடு மின்சார வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்ட இருப்பதாக மஹிந்திரா கூறியிருக்கின்றது. இதன்மூலம் வாடிக்கையாளர்களைக் கூடுதலாக கவர முடியும் என நிறுவனம் நம்புகின்றது.

கார்கோ பயன்பாட்டிற்கான பிரத்யேக மூன்று சக்கர மின்சார வாகனம் அறிமுகம்... இது மஹிந்திரா தயாரிப்பு!

சார்ஜிங் மையம், பேட்டரி வழங்கும் நிலையம் என பல்வேறு சேவைகளை இது விரைவில் தொடங்க இருக்கின்றது. இதே நடவடிக்கையில்தான் சில தனியார் நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றது. இதனுடன் மானியம் போன்ற சிறப்பு திட்டத்தையும் அரசு வழங்கி வருகின்றது.

முதல் மூன்று படங்களை பிற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Logistics launches ‘EDel’ - Electric Last-Mile Delivery Service. Read In Tamil.
Story first published: Thursday, January 7, 2021, 19:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X