வாங்க ஆள் இல்லை... இந்திய சந்தையில் 'டல்' அடிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விற்பனை...

இந்தியாவில் மஹிந்திரா மராஸ்ஸோ காரின் விற்பனை மிக கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாங்க ஆள் இல்லை... இந்திய சந்தையில் 'டல்' அடிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விற்பனை...

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான மராஸ்ஸோ எம்பிவி காரை மஹிந்திரா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. சில மாதங்கள் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டிருந்த மராஸ்ஸோ எம்பிவி இதன் மூலம் 'கம் பேக்' கொடுத்தது. தற்போது 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் மராஸ்ஸோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வாங்க ஆள் இல்லை... இந்திய சந்தையில் 'டல்' அடிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விற்பனை...

எம்2, எம்4 ப்ளஸ் மற்றும் எம்6 ப்ளஸ் வேரியண்ட்களில் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கிடைக்கும். மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 11.64 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 13.79 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

வாங்க ஆள் இல்லை... இந்திய சந்தையில் 'டல்' அடிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விற்பனை...

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 16,050 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் மஹிந்திரா நிறுவனம் 15,276 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் இந்தியாவில் மஹிந்திரா கார்களின் விற்பனை 5 சதவீதம் உயர்ந்துள்ளது.

வாங்க ஆள் இல்லை... இந்திய சந்தையில் 'டல்' அடிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விற்பனை...

ஆனால் 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிட்டால், 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் மஹிந்திரா நிறுவன கார்களின் விற்பனை 11 சதவீதம் குறைந்துள்ளது. எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் புதிய தலைமுறை தார் எஸ்யூவி ஆகியவை தவிர, எஞ்சிய அனைத்து மஹிந்திரா கார்களின் விற்பனையும், 2019ம் ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடுகையில், 2020ம் ஆண்டு டிசம்பரில் வீழ்ச்சியடைந்துள்ளது.

வாங்க ஆள் இல்லை... இந்திய சந்தையில் 'டல்' அடிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விற்பனை...

மாருதி சுஸுகி எர்டிகாவின் டாப் வேரியண்ட்கள் மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் ஆரம்ப நிலை வேரியண்ட்களுடன் போட்டியிட்டு வரும் மராஸ்ஸோ எம்பிவி காரும் கடந்த டிசம்பர் மாதம் விற்பனையில் மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தால் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 161 மராஸ்ஸோ கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்துள்ளது.

வாங்க ஆள் இல்லை... இந்திய சந்தையில் 'டல்' அடிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விற்பனை...

ஆனால் 2019ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 1,292 ஆக இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 88 சதவீத வீழ்ச்சியை மஹிந்திரா மராஸ்ஸோ பதிவு செய்துள்ளது. அதே சமயம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிட்டால், அதன்பின் வந்த டிசம்பரில் மராஸ்ஸோ எம்பிவி காரின் விற்பனை 29 சதவீதம் குறைந்துள்ளது.

வாங்க ஆள் இல்லை... இந்திய சந்தையில் 'டல்' அடிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விற்பனை...

ஏனெனில் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் மஹிந்திரா நிறுவனம் 226 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்திருந்தது. மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரில், 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் டி15 டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 3,500 ஆர்பிஎம்மில் 121 பிஎச்பி பவரையும், 1,750-2,500 ஆர்பிஎம்மில் 300 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

வாங்க ஆள் இல்லை... இந்திய சந்தையில் 'டல்' அடிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விற்பனை...

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கிடையே 2021ம் ஆண்டு மஹிந்திரா நிறுவனம் பல்வேறு புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 மற்றும் புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவிக்கள் மிகவும் முக்கியமானவை.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Marazzo MPV Sales Down Drastically - Here Are All The Details. Read in Tamil
Story first published: Saturday, January 23, 2021, 2:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X