விற்பனையில் மஹிந்திராவை தூக்கி பிடிக்கும் 2020 தார்!! அதாள பாதாளத்தில் மராஸ்ஸோவின் விற்பனை!

இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான மஹிந்திரா கடந்த மாதத்தில் விற்பனை செய்த கார்களையும் அவை விற்பனை செய்யப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கையை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனையில் மஹிந்திராவை தூக்கி பிடிக்கும் 2020 தார்!! அதாள பாதாளத்தில் மராஸ்ஸோவின் விற்பனை!

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 15,380 யூனிட் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 10,756 மஹிந்திரா கார்கள் விற்கப்பட்ட 2020 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் சுமார் 43 சதவீதம் அதிகமாகும்.

விற்பனையில் மஹிந்திராவை தூக்கி பிடிக்கும் 2020 தார்!! அதாள பாதாளத்தில் மராஸ்ஸோவின் விற்பனை!

வழக்கம்போல் கடந்த மாதத்தில் அதிகளவில் விற்பனையான மஹிந்திரா காராக பொலிரோ உள்ளது. 2020 பிப்ரவரியில் 4,067 யூனிட்களும், கடந்த 2021 பிப்ரவரியில் அதனை காட்டிலும் 19 சதவீதம் கூடுதலாக 4,843 யூனிட் பொலிரோ கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விற்பனையில் மஹிந்திராவை தூக்கி பிடிக்கும் 2020 தார்!! அதாள பாதாளத்தில் மராஸ்ஸோவின் விற்பனை!

இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் மற்றொரு பிரபலமான மஹிந்திரா வாகனமான ஸ்கார்பியோ 3,532 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. இரண்டாம் தலைமுறை ஸ்கார்பியோ இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த எஸ்யூவி கார் மாடலின் விற்பனை 2020 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் சுமார் 135 சதவீதம் உயர்ந்துள்ளது.

விற்பனையில் மஹிந்திராவை தூக்கி பிடிக்கும் 2020 தார்!! அதாள பாதாளத்தில் மராஸ்ஸோவின் விற்பனை!

ஏனெனில் அந்த மாதத்தில் 1,505 ஸ்கார்பியோ கார்களையே மஹிந்திரா நிறுவனம் விற்றிருந்தது. மூன்றாவது இடத்தில் உள்ள மஹிந்திராவின் காம்பெக்ட் எஸ்யூவி மாடலான எக்ஸ்யூவி300-இன் விற்பனையும் 2020 பிப்ரவரியை காட்டிலும் 31 சதவீதம் அதிகரித்துள்ளது.

Rank Model Feb'21 Feb'20 Growth (%)
1 Mahindra Bolero 4,843 4,067 19
2 Mahindra Scorpio 3,532 1,505 135
3 Mahindra XUV300 3,174 2,431 31
4 Mahindra Thar 2,842 0 -
5 Mahindra XUV500 829 344 141
6 Mahindra Marazzo 20 1,236 -90
7 Mahindra Alturas G4 36 38 -5
8 Mahindra KUV100 4 108 -96
9 Mahindra Verito 0 81 -100
10 Mahindra Xylo 0 2 -
11 Mahindra TUV300 0 944 -
விற்பனையில் மஹிந்திராவை தூக்கி பிடிக்கும் 2020 தார்!! அதாள பாதாளத்தில் மராஸ்ஸோவின் விற்பனை!

இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் கடந்த பிப்ரவரியில் 3,174 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை தார் வாகனம் கடந்த மாதத்தில் 2,842 மாதிரிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

விற்பனையில் மஹிந்திராவை தூக்கி பிடிக்கும் 2020 தார்!! அதாள பாதாளத்தில் மராஸ்ஸோவின் விற்பனை!

இது கடந்த மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்ட தார் வாகனங்களின் எண்ணிக்கையே. ஏனெனில் புதிய தலைமுறை தாருக்கு முன்பதிவுகள் அறிமுகத்தில் இருந்து தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன. சரியான நேரத்தில் டெலிவிரி செய்ய முடியாமல் மஹிந்திரா தத்தளித்து வருகிறது.

விற்பனையில் மஹிந்திராவை தூக்கி பிடிக்கும் 2020 தார்!! அதாள பாதாளத்தில் மராஸ்ஸோவின் விற்பனை!

இதன் காரணமாக தாரை முன்பதிவு செய்து டெலிவிரிக்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய காலம் சுமார் 10 மாதங்கள் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 2020 தாரின் சில குறிப்பிட்ட வேரியண்ட்களை இன்று முன்பதிவு செய்தால் அடுத்த ஆண்டில் தான் டெலிவிரி எடுக்க முடியும் என்ற நிலை உள்ளது.

விற்பனையில் மஹிந்திராவை தூக்கி பிடிக்கும் 2020 தார்!! அதாள பாதாளத்தில் மராஸ்ஸோவின் விற்பனை!

இந்த லிஸ்ட்டில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் எக்ஸ்யூவி500 மற்றும் மராஸ்ஸோ கார்கள் முறையே 829 மற்றும் 120 என்ற விற்பனை எண்ணிக்கைகளுடன் உள்ளன. இதில் எக்ஸ்யூவி 500-இன் விற்பனை 2020 பிப்ரவரியை காட்டிலும் 141 சதவீதம் அதிகரித்துள்ளது என்றாலும், மராஸ்ஸோவின் விற்பனை அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளது.

இவற்றுடன், 36 அல்டுராஸ் ஜி4 சொகுசு வாகனத்தையும், 4 கேயூவி100 காரையும் மஹிந்திரா நிறுவனம் கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Model Wise Sales February 2021. Read In Tamil.
Story first published: Friday, March 5, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X