ஒவ்வொரு நாளும் 187 எக்ஸ்யூவி700 கார்களை டெலிவிரி செய்ய திட்டமிட்டுள்ள மஹிந்திரா!! டெலிவிரி அக்.30ல் ஆரம்பம்!

வெறும் 75 நாட்களில் கிட்டத்தட்ட 14,000 எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார்களை டெலிவிரி செய்ய திட்டமிட்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஒவ்வொரு நாளும் 187 எக்ஸ்யூவி700 கார்களை டெலிவிரி செய்ய திட்டமிட்டுள்ள மஹிந்திரா!! டெலிவிரி அக்.30ல் ஆரம்பம்!

சமீபத்தில் எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரை அறிமுகப்படுத்திய மஹிந்திரா நிறுவனம் இந்த காருக்கான முன்பதிவுகளை கடந்த அக்.7 ஆம் தேதியில் இருந்து ஏற்க துவங்கியது. வெறும் 57 நிமிடங்களில் இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கான முன்பதிவுகள் துவங்கின. அதன்பின் கூடுதலான 25,000 முன்பதிவுகள் அடுத்த 2 மணிநேரத்தில் கிடைத்தன.

ஒவ்வொரு நாளும் 187 எக்ஸ்யூவி700 கார்களை டெலிவிரி செய்ய திட்டமிட்டுள்ள மஹிந்திரா!! டெலிவிரி அக்.30ல் ஆரம்பம்!

மொத்தமாக கடந்த இரு வாரத்தில் 65,000 எக்ஸ்யூவி700 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது அக்.30ஆம் தேதியில் இருந்து எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரின் டெலிவிரிகளை துவங்கவுள்ளதாக தற்போது மீண்டும் மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக துவங்கப்படும் இந்த டெலிவிரியில் பெட்ரோல் வேரியண்ட்களே அதன் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்படும் என தெரிகிறது.

ஒவ்வொரு நாளும் 187 எக்ஸ்யூவி700 கார்களை டெலிவிரி செய்ய திட்டமிட்டுள்ள மஹிந்திரா!! டெலிவிரி அக்.30ல் ஆரம்பம்!

டீசல் வேரியண்ட்களின் டெலிவிரிகள் துவங்குவதற்கு இன்னும் ஒரு மாத காலம் ஆகலாம். 30ஆம் தேதி வருவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் முதற்கட்டமாக டெலிவிரி செய்யப்பட உள்ள எக்ஸ்யூவி700 கார்கள் டீலர்ஷிப் மையங்களை வந்தடைய துவங்கிவிட்டன. 2022 ஜனவரி மாதத்திற்குள் மொத்தம் 14,000 கார்களை டெலிவிரி செய்ய மஹிந்திரா ஆயத்தமாகி வருகிறது.

ஒவ்வொரு நாளும் 187 எக்ஸ்யூவி700 கார்களை டெலிவிரி செய்ய திட்டமிட்டுள்ள மஹிந்திரா!! டெலிவிரி அக்.30ல் ஆரம்பம்!

அப்படியென்றால், நாளுக்கு ஒரு 187 எக்ஸ்யூவி700 கார்கள். அதேநேரம் பாகங்கள் பற்றாக்குறையால் டெலிவிரிகளில் சில தடைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. முதலாவதாக டெலிவிரி பெற இருக்கும் வாடிக்கையாளர்களுடன் டீலர்கள் தொடர்ந்து இணைப்பில் இருப்பார்கள் எனவும், டெலிவிரி தேதி குறித்த அப்டேட்களை இன்றில் இருந்து பெறுவார்கள் எனவும் மஹிந்திரா கூறியுள்ளது.

ஒவ்வொரு நாளும் 187 எக்ஸ்யூவி700 கார்களை டெலிவிரி செய்ய திட்டமிட்டுள்ள மஹிந்திரா!! டெலிவிரி அக்.30ல் ஆரம்பம்!

தடையில்லாமல் டெலிவிரிகளை வழங்குவதற்காக என்றே மஹிந்திரா ஒரு ஆலோசனை நிறுவனத்துடன் இணைந்து பணிப்புரிந்து வருகிறது. இருப்பினும் வசிக்கும் இடம், முன்பதிவு செய்யப்பட்ட முறை (ஆன்லைன்/ ஆஃப்லைன்) மற்றும் வேரியண்ட்களை பொறுத்து டெலிவிரி தேதி மாறக்கூடும். 5 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் விற்பனை செய்யப்படும் எக்ஸ்யூவி700 காரின் விலைகள் ரூ.11.99 லட்சத்தில் இருந்து ரூ.19.79 லட்சம் வரையில் உள்ளன.

ஒவ்வொரு நாளும் 187 எக்ஸ்யூவி700 கார்களை டெலிவிரி செய்ய திட்டமிட்டுள்ள மஹிந்திரா!! டெலிவிரி அக்.30ல் ஆரம்பம்!

எம்.எக்ஸ், ஏ.எக்ஸ்3, ஏ.எக்ஸ்5 மற்றும் ஏ.எக்ஸ்7 என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் எக்ஸ்யூவி700 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் தற்போது ஏ.எக்ஸ் லக்சரி என்ற புதிய வேரியண்ட்டும் கூடுதல் வசதிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் அனைத்து-சக்கர ட்ரைவ் தேர்வுடன் வழங்கப்பட்டுள்ள இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.22.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் 187 எக்ஸ்யூவி700 கார்களை டெலிவிரி செய்ய திட்டமிட்டுள்ள மஹிந்திரா!! டெலிவிரி அக்.30ல் ஆரம்பம்!

சவாலான விலையில் பிரீமியம் தரத்திலான தோற்றம் இதுதான் தற்கால மாடர்ன் மஹிந்திரா காரான எக்ஸ்யூவி700-இன் அடையாளங்கள். மேலும் இவை தான் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. இந்த காலத்திற்கான கார் என்று ஏன் சொல்கிறோம் என்றால், இன்னும் சில வருடங்களில் பரவலாக அனைத்து கார்களிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்புகள் (ADAS), அமேசான்-அலெக்ஸா இணைப்பு வசதி போன்றவை எக்ஸ்யூவி700இல் உள்ளன.

ஒவ்வொரு நாளும் 187 எக்ஸ்யூவி700 கார்களை டெலிவிரி செய்ய திட்டமிட்டுள்ள மஹிந்திரா!! டெலிவிரி அக்.30ல் ஆரம்பம்!

இதன் உட்புறத்தில் டேஸ்போர்டில் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலிற்கு ஒன்று, இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு ஒன்று என 10.25 இன்ச்சில் இரு திரைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் சிறப்பம்சங்களாக ஓட்டுனர் தூங்குவதை கண்டறிந்து எச்சரிக்கும் வசதி, இரட்டை நிலை க்ளைமேட் கண்ட்ரோல், லெதரில் ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்டேரிங் சக்கரம் & சக்கரங்கள் மற்றும் 6-விதங்களில் மடக்கக்கூடிய இருக்கை உள்ளிட்டவற்றையும் மஹிந்திரா வழங்கியுள்ளது.

ஒவ்வொரு நாளும் 187 எக்ஸ்யூவி700 கார்களை டெலிவிரி செய்ய திட்டமிட்டுள்ள மஹிந்திரா!! டெலிவிரி அக்.30ல் ஆரம்பம்!

எக்ஸ்யூவி700-இல் 18-இன்ச் டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அம்சங்களுடன் எக்ஸ்யூவி700 காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்புற மற்றும் உட்புறத்திற்கான ஆக்ஸஸரீ தொகுப்புகளும் வழங்கப்படுகின்றன. எம்.எக்ஸ் மற்றும் அட்ரெனோ எக்ஸ் (ஏஎக்ஸ்) என பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த ஆக்ஸஸரீ தொகுப்புகள் மஹிந்திராவின் தொழிற்சாலையிலேயே பொருத்தி தரப்படும்.

ஒவ்வொரு நாளும் 187 எக்ஸ்யூவி700 கார்களை டெலிவிரி செய்ய திட்டமிட்டுள்ள மஹிந்திரா!! டெலிவிரி அக்.30ல் ஆரம்பம்!

இந்த ஆக்ஸஸரீகளில் ரூ.16,799 மதிப்பில் சாடின் க்ரோம் கிட் உள்ளது. மேலும் முன் & பின்பக்க பம்பர் அலங்கரிப்பும் முறையே ரூ.2.050 மற்றும் ரூ.3,050 என்ற விலையில் இந்த ஆக்ஸஸரீகளில் அடங்குகின்றன. இவற்றுடன் க்ரில் பகுதியினை ரூ.1,895-இல் கூடுதல் அழகாகவும், பின்பக்க டெயில்லேம்ப்பினை ரூ.2,425-லும், சக்கர வளைவுகள் மற்றும் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகளை முறையே ரூ.4,570 மற்றும் ரூ.1,475-இல் மெருக்கேற்றி கொள்ளலாம்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra planned to deliver 14,000 units XUV700 by 2022 Jan.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X