எக்ஸ்யூவி900 பெயரில் வருகிறது மஹிந்திராவின் முதல் கூபே ஸ்டைல் எஸ்யூவி?

மஹிந்திரா நிறுவனத்தின் முதல் கூபே ரக எஸ்யூவி கார் எக்ஸ்யூவி900 என்ற பெயரில் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

எக்ஸ்யூவி900 பெயரில் வருகிறது மஹிந்திராவின் முதல் கூபே ஸ்டைல் எஸ்யூவி?

இந்தியாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட் என்ற பெருமையை தக்க வைத்து வரும் மஹிந்திரா நிறுவனம் தனது புதிய மாடல்களை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கி உள்ளது. டிசைனிலும், தொழில்நுட்பத்திலும் இந்த எஸ்யூவி மாடல்கள் உலகத் தரம் வாய்ந்ததவையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.

எக்ஸ்யூவி900 பெயரில் வருகிறது மஹிந்திராவின் முதல் கூபே ஸ்டைல் எஸ்யூவி?

அந்த வகையில், எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு மாற்றாக புதிய மாடலை அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த மாடல் எக்ஸ்யூவி700 என்ற பெயரில் அழைக்கப்படும்.

எக்ஸ்யூவி900 பெயரில் வருகிறது மஹிந்திராவின் முதல் கூபே ஸ்டைல் எஸ்யூவி?

இதனைத்தொடர்ந்து, அடுத்து ஒரு கூபே ரக எஸ்யூவி மாடலையும் கொண்டு வர மஹிந்திரா முடிவு செய்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ என்ற கான்செப்ட் மாடல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

எக்ஸ்யூவி900 பெயரில் வருகிறது மஹிந்திராவின் முதல் கூபே ஸ்டைல் எஸ்யூவி?

இந்த மாடலானது எக்ஸ்யூவி500 அடிப்படையிலான கூபே ரக எஸ்யூவி மாடலாக உருவாக்கப்பட்டு இருந்தது. அதாவது, பின்புறத்தில் கூரை அமைப்பு தாழ்ந்து செல்லும் வகையில் கூபே மாடலாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

எக்ஸ்யூவி900 பெயரில் வருகிறது மஹிந்திராவின் முதல் கூபே ஸ்டைல் எஸ்யூவி?

இந்த மாடல் அப்போது பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், இந்தியர்கள் மத்தியில் இந்த எஸ்யூவி கூபே ரக மாடல் எந்த அளவுக்கு எடுபடும் என்பதில் ஐயப்பாடு இருந்ததால், இந்த திட்டத்தை பரிசீலனை அளவிலேயே வைத்திருந்தது.

எக்ஸ்யூவி900 பெயரில் வருகிறது மஹிந்திராவின் முதல் கூபே ஸ்டைல் எஸ்யூவி?

இந்த நிலையில், இந்த கூபே ரக எஸ்யூவியை தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கு மஹிந்திரா பச்சைக் கொடி காட்டி இருப்பதாக ஆட்டோகார் இந்தியாதளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

எக்ஸ்யூவி900 பெயரில் வருகிறது மஹிந்திராவின் முதல் கூபே ஸ்டைல் எஸ்யூவி?

விரைவில் வர இருக்கும் எக்ஸ்யூவி700 அடிப்படையிலான கூபே ரக எஸ்யூவி மாடலாக இந்த கார் உருவாக்கப்பட உள்ளது. அதாவது, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எகஸ்6 எஸ்யூவி கார் கூபே ரகத்திலான மாடலாக முதன்முதலில் வெளியிடப்பட்டது. இவை மிகவும் தனித்துவமானதாக பெரும் பணக்காரர்களை வசீகரித்து வருகிறது.

எக்ஸ்யூவி900 பெயரில் வருகிறது மஹிந்திராவின் முதல் கூபே ஸ்டைல் எஸ்யூவி?

அந்த வகையில், இந்த எஸ்யூவியை கூபே ரக எஸ்யூவி பிரியர்களை கவரும் வகையில் நிலைநிறுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இந்த புதிய மாடலானது W620 என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.

எக்ஸ்யூவி900 பெயரில் வருகிறது மஹிந்திராவின் முதல் கூபே ஸ்டைல் எஸ்யூவி?

இந்த மாடலானது 4 டோர் கூபே மாடலாக இருக்கும். இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கலாம். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும். எனினும், வரும் 2024ம் ஆண்டுவாக்கில்தான் இந்த புதிய மாடல் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra is planning to launch XUV700 based SUV Coupe In India.
Story first published: Tuesday, May 11, 2021, 10:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X