சூப்பர்... மஹிந்திரா தார் எஸ்யூவியின் 5 டோர் மாடல் பற்றி புதிய தகவல்

மஹிந்திரா தார் எஸ்யூவி பிரியர்களுக்கு ஒரு சூப்பரான செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது, 5 கதவுகள் கொண்ட மஹிந்திரா தார் எஸ்யூவியின் சோதனை ஓட்டங்கள் விரைவில் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் 5 டோர் மாடலின் சோதனை ஓட்டம் விரைவில் துவங்குகிறது!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தோற்றத்தில் மிக பிரம்மாண்டமாகவும், கம்பீரமாகவும் மாறியதோடு, அதிசெயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகள் மற்றும் வசதிகள் வாடிக்கையாளர்களை சுண்டி இழுத்தது. இதனால், புக்கிங் எக்கச்சக்கமாக குவித்து வருகிறது. தேவைக்கு தக்கவாறு டெலிவிரி கொடுக்க முடியாமல் மஹிந்திரா திணறி வருகிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் 5 டோர் மாடலின் சோதனை ஓட்டம் விரைவில் துவங்குகிறது!

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி 3 டோர் கொண்ட மாடலாகவே அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானபோதே, 5 டோர் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் வெளியானது.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் 5 டோர் மாடலின் சோதனை ஓட்டம் விரைவில் துவங்குகிறது!

இந்த நிலையில், மஹிந்திரா தார் எஸ்யூவியின் 5 டோர் மாடலுக்கான அனுமதிகள் பெறப்பட்டுள்ளதால், விரைவில் சோதனை ஓட்டம் துவங்கப்பட உள்ளதாக டீம் பிஎச்பி தளத்தின் செய்தி கூறுகிறது. சோதனை ஓட்டங்களில் கிடைக்கும் தரவுகளை ஆய்வு செய்து பின்னர் சந்தைக்கு கொண்டு வரப்படும்.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் 5 டோர் மாடலின் சோதனை ஓட்டம் விரைவில் துவங்குகிறது!

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் பாடியுடன் தார் எஸ்யூவியின் 5 டோர் மாடல் ஓட்டம் நடத்தி ஆய்வு நடத்தப்படஉள்ளதாகவும் அந்த தகவல் கூறுகிறது. சில மாத சோதனை ஓட்டங்களின் முடிவில் தயாரிப்பு நிலை மாடல் உருவாக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, தார் எஸ்யூவியின் 5 டோர் மாடல் மீது அதிக ஆவல் எழுந்துள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் 5 டோர் மாடலின் சோதனை ஓட்டம் விரைவில் துவங்குகிறது!

இந்திய சந்தையில் 5 டோர் மாடல் கொண்ட கார்களுக்கு கூடுதல் மதிப்பு உண்டு. எனவே, நிச்சயம் மஹிந்திரா தார் எஸ்யூவியின் 5 டோர் மாடலுக்கும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் 5 டோர் மாடலின் சோதனை ஓட்டம் விரைவில் துவங்குகிறது!

ஏனெனில், தார் எஸ்யூவியின் 3 டோர் மாடலில் வயதானவர்கள் மற்றும் உடல் பருமனானவர்கள் ஏறி, இறங்குவதிலும், முன் இருக்கையில் அமர்ந்து செல்பவருக்கும் நடைமுறையில் பல சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. ஆனால், 5 டோ் மாடலில் இந்த நடைமுறை சிக்கல்கள் இருக்காது என்பதால், 5 டோர் மாடல் அதிக வசதியாக இருக்கும்.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் 5 டோர் மாடலின் சோதனை ஓட்டம் விரைவில் துவங்குகிறது!

மேலும், 5 டோர் மாடலானது ஹார்டு டாப் எனப்படும் நிரந்தரமான மூடிய கூரை அமைப்புடன் கிடைக்கும் என்று தெரிகிறது. அதேநேரத்தில், தார் எஸ்யூவியின் 5 டோர் மாடல் குறித்து இதுவரை எந்த தகவலும் மஹிந்திராவிடம் இருந்து வரவில்லை.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் 5 டோர் மாடலின் சோதனை ஓட்டம் விரைவில் துவங்குகிறது!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் 3 டோர் மாடல் போன்றே, 5 டோர் மாடலிலும் 2.0 லிட்டர் டி-ஜிடிஐ எம்-ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 130 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் வரும் வாய்ப்பு இருக்கிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் 5 டோர் மாடலின் சோதனை ஓட்டம் விரைவில் துவங்குகிறது!

ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மெக்கானிக்கல் லாக்கிங் டிஃபரன்ஷியல், ஷிஃப்ட் ஆன் ஃப்ளை வசதியுடன் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவையும் இந்த எஸ்யூவியில் எதிர்பார்க்கலாம். மேலும், அனைத்து வசதிகளும் கொண்ட டாப் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது.

Most Read Articles
English summary
Mahindra launched the new-generation Thar in October 2020. The new off-road SUV has been well-received in the country. At the time of launch, there were speculations about the company launching the 5-door version of the Thar SUV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X