என்ன இப்படியாயிடுச்சு.. தாருக்கு குவியும் முன்பதிவுகளால் செய்வதறியாது நிற்கும் மஹிந்திரா! பாகங்கள் பற்றாக்குறை

இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கொண்டில்லாத மஹிந்திரா தார் எஸ்யூவி வாகனங்களின் படங்கள் சில டீலர்ஷிப் மையங்களில் இருந்து வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

என்ன இப்படியாயிடுச்சு.. தாருக்கு குவியும் முன்பதிவுகளால் செய்வதறியாது நிற்கும் மஹிந்திரா! பாகங்கள் பற்றாக்குறை

மஹிந்திரா நிறுவனம் புத்தம் புதிய தார் எஸ்யூவி காரை மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் கடந்த ஆண்டு செப்டம்பர் துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

என்ன இப்படியாயிடுச்சு.. தாருக்கு குவியும் முன்பதிவுகளால் செய்வதறியாது நிற்கும் மஹிந்திரா! பாகங்கள் பற்றாக்குறை

அப்போதில் இருந்து இந்த வாகனத்திற்கு முன்பதிவுகள் குவிந்து வருவதால் மஹிந்திரா நிறுவனம் இதன் தயாரிப்பு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இருப்பினும் வாடிக்கையாளர்களிடம் இருந்துவரும் முன்பதிவுகள் குறைந்த பாடில்லை.

என்ன இப்படியாயிடுச்சு.. தாருக்கு குவியும் முன்பதிவுகளால் செய்வதறியாது நிற்கும் மஹிந்திரா! பாகங்கள் பற்றாக்குறை

இதன் காரணமாக 2020 தாரின் தயாரிப்பில் மஹிந்திரா நிறுவனத்திற்கு சில பற்றாகுறைகள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து ரஷ்லேன் செய்திதளம் வெளியிட்டுள்ள செய்தியில், தாரில் பொருத்தப்படும் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட் மற்றும் மியுசிக் சிஸ்டம் மஹிந்திரா நிறுவனத்திடம் மிகவும் குறைவாகவே கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

என்ன இப்படியாயிடுச்சு.. தாருக்கு குவியும் முன்பதிவுகளால் செய்வதறியாது நிற்கும் மஹிந்திரா! பாகங்கள் பற்றாக்குறை

இதன் காரணமாக இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்படாமல் சில தார் வாகனங்கள் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சில படங்களும் அந்த செய்தியில் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றைதான் தற்போது பார்த்து கொண்டிருக்கிறீர்கள்...

என்ன இப்படியாயிடுச்சு.. தாருக்கு குவியும் முன்பதிவுகளால் செய்வதறியாது நிற்கும் மஹிந்திரா! பாகங்கள் பற்றாக்குறை

மேலும், இந்த தொழிற்நுட்பங்கள் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் டீலர்களின் மூலமாக அவை அந்தந்த தார் வாகனங்களில் பொருத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுண்செயலிகளுக்கு உலகளவில் தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் தொடுத்திரை வழங்குவதில் தயாரிப்பு நிறுவனத்திற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கலாம்.

என்ன இப்படியாயிடுச்சு.. தாருக்கு குவியும் முன்பதிவுகளால் செய்வதறியாது நிற்கும் மஹிந்திரா! பாகங்கள் பற்றாக்குறை

இந்த பற்றாக்குறைகளால் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது தார் வாகனம் டெலிவிரி செய்வதில் சிறிது தாமதம் ஏற்படலாம். எனவே 2020 தாரை முன்பதிவு செய்து டெலிவிரிக்காக காத்திருப்பவர்கள் கால தாமதத்தை ஏற்க தயாராக வேண்டும்.

என்ன இப்படியாயிடுச்சு.. தாருக்கு குவியும் முன்பதிவுகளால் செய்வதறியாது நிற்கும் மஹிந்திரா! பாகங்கள் பற்றாக்குறை

ஏனெனில் பொருத்தப்படாத பாகங்கள் பொருத்தப்படும் வரை புதிய தலைமுறை தார் டெலிவிரி செய்யப்படாது. 2020 தாரில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆனது 7-இன்ச்சில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதிகளுடன் வழங்கப்படுகிறது.

என்ன இப்படியாயிடுச்சு.. தாருக்கு குவியும் முன்பதிவுகளால் செய்வதறியாது நிற்கும் மஹிந்திரா! பாகங்கள் பற்றாக்குறை

நாவிகேஷனை உள்ளமைக்கப்பட்ட இந்த தொடுத்திரை சிஸ்டத்தில் பிராண்டின் ப்ளூசென்ஸ் அப்ளிகேஷன் இணைப்பையும் மஹிந்திரா வழங்குகிறது. ஏஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் என்ற இரு விதமான ட்ரிம் நிலைகளில் விற்பனை செய்யப்படும் 2020 மஹிந்திரா தாரின் விலைகள் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.14.15 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles
English summary
Mahindra Thar SUVs Spotted At Dealerships Without Infotainment System: Here Are The Details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X