அப்பாடா... ஒருவழியாக புதிய தலைமுறைக்கு மாறும் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி!

வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதவரை மிக நீண்ட காலமாக தக்க வைத்து வரும் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட உள்ளது.

 அப்பாடா... ஒருவழியாக புதிய தலைமுறைக்கு மாறும் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி!

கடந்த 2000ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மஹிந்திரா பொலிரோ வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற எஸ்யூவி மாடலாக இருந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 எஸ்யூவி மாடல் என்ற பெருமையை மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி பெற்றிருந்தது.

 அப்பாடா... ஒருவழியாக புதிய தலைமுறைக்கு மாறும் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி!

நீடித்த உழைப்பு, வலுவான கட்டமைப்பு, போதிய இடவசதி, சிறந்த டீசல் எஞ்சின் என நடைமுறை பயன்பாட்டில் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. விலையிலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கிறது. ஆனால், பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 அப்பாடா... ஒருவழியாக புதிய தலைமுறைக்கு மாறும் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி!

இந்த நிலையில், நவீன யுக எஸ்யூவி கார்கள் புற்றீசல் போல சந்தையில் பெருகியதால் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் சந்தைப் பங்களிப்பு குறைந்து போயுள்ளது. எனினும், விற்பனையில் மல்லுக்கட்டி சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

 அப்பாடா... ஒருவழியாக புதிய தலைமுறைக்கு மாறும் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி!

இந்த சூழலில், பொலிரோ எஸ்யூவியை புதிய தலைமுறை மாடலாக மாற்றுவதற்கு மஹிந்திரா முடிவு செய்துவிட்டது. சில குறைகளை நிவர்த்தி செய்து வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் சிறப்புகளுடன் புதிய பொலிரோ எஸ்யூவி வர இருக்கிறது.

 அப்பாடா... ஒருவழியாக புதிய தலைமுறைக்கு மாறும் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி!

மேலும், சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள புதிய தார் எஸ்யூவி உருவாக்கப்பட்ட கட்டமைப்புக் கொள்கையை பயன்படுத்தி புதிய பொலிரோ எஸ்யூவி உருவாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும், க்ராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர பாதுகாப்பு தரத்திற்கு இணையாக மேம்படுத்தும் திட்டமும் மஹிந்திரா வசம் உள்ளது.

 அப்பாடா... ஒருவழியாக புதிய தலைமுறைக்கு மாறும் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி!

இதற்காக, ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட பல அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்படும். இதனால், கட்டமைப்புத் தரத்தில் சிறந்த மாடலாக இருக்கும். அதேபோன்று, ஓட்டுதல் தரமும் மேம்படுத்தப்பட உள்ளது.

 அப்பாடா... ஒருவழியாக புதிய தலைமுறைக்கு மாறும் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி!

தற்போது வவங்கப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தொடர்ந்து வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. புதிய மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 அப்பாடா... ஒருவழியாக புதிய தலைமுறைக்கு மாறும் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி!

வரும் 2026ம் ஆண்டு புதிய மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். புதிய தலைமுறை பொலிரோ மாடல் சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு மறைமுகமாக கடும் போட்டியை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra is planning to launch new generation Bolero SUV by 2026.
Story first published: Saturday, May 29, 2021, 13:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X