சாங்யாங் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை விற்க மஹிந்திரா தீவிரம்!

நொடித்து போய் நிற்கும் சாங்யாங் நிறுவனத்தில் உள்ள பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்ய மஹிந்திரா நிறுவனம் தீவிர முயற்சிகளில் இறங்கி உள்ளது.

சாங்யாங் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை விற்க மஹிந்திரா தீவிரம்!

தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனம், எஸ்யூவி தயாரிப்பில் உலக அளவில் பிரபலமானது. ஆனால், வர்த்தகத்தில் பெரிய அளவிலான முன்னேற்றத்தை பதிவு செய்ய முடியாமல் தொடர்ந்து நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

சாங்யாங் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை விற்க மஹிந்திரா தீவிரம்!

கடந்த 2013ம் ஆண்டு சாங்யாங் நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளை மஹிந்திரா நிறுவனம் வாங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ரூ.2,100 கோடி அளவுக்கு முதலீடு செய்தது. இதன்மூலமாக, சாங்யாங் நிறுவனத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை பெற்றது.

சாங்யாங் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை விற்க மஹிந்திரா தீவிரம்!

மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு காரணமாக, சாங்யாங் நிறுவனம் புதிய மாடல்களை வெளியிட வாய்ப்பு கிட்டியது. சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியை மஹிந்திரா இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. அதேநேரத்தில், சாங்யாங் நிறுவனத்தின் வர்த்தகம் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதுடன் தொடர்ந்து பெரிய நஷ்டத்தில் இயங்கி வந்தது.

சாங்யாங் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை விற்க மஹிந்திரா தீவிரம்!

இதனால், புதிய முதலீடுகளை வழங்கப்போவதில்லை என்று மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது. மேலும், சாங்யாங் நிறுவனத்தில் உள்ள தனது பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்யவும் முடிவு செய்தது.

சாங்யாங் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை விற்க மஹிந்திரா தீவிரம்!

இதனிடையே, கடந்த மாதம் திவால் நிலையில் இருப்பதாக சாங்யாங் மோட்டார்ஸ் அறிவித்தது. வங்கிகளில் வாங்கப்பட்ட கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலையில் அந்த நிறுவனம் உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.680 கோடி கடன் தொகையை உடனடியாக திருப்பி செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

சாங்யாங் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை விற்க மஹிந்திரா தீவிரம்!

இந்த சூழலில், சாங்யாங் நிறுவனத்தில் உள்ள பங்குகளை விற்பனை செய்வதற்காக புதிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ தெரிவித்துள்ளார்.

சாங்யாங் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை விற்க மஹிந்திரா தீவிரம்!

அடுத்த வார இறுதியில் சாங்யாங் நிறுவனத்தின் புதிய பார்ட்னர் குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும், நடைமுறைகள் அடுத்த மாத இறுதியில் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சாங்யாங் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை விற்க மஹிந்திரா தீவிரம்!

இதன்படி, சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தில் 75 சதவீத பங்குகள் மஹிந்திரா வசம் உள்ளது. இதில், 30 சதவீத பங்குகளை வைத்துக் கொண்டு மீதமுள்ள 70 சதவீத பங்குகளை வேறு புதிய நிறுவனத்திற்கு விற்பனை செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
--
English summary
Mahindra has revealed to sell a major stake in SsangYong Motor very soon.
Story first published: Saturday, January 2, 2021, 10:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X