Just In
- 4 hrs ago
525எச்பி ஆற்றலில், ஆற்றல்மிக்க டிஃபெண்டர் காரை உலகளவில் வெளியிட்டது லேண்ட் ரோவர்!! இந்தியாவர வாய்ப்பிருக்கா?
- 4 hrs ago
மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை விட சிறந்த காரா டொயோட்டா அர்பன் க்ரூஸர்? ரோடு டெஸ்ட் ரிவியூ!
- 6 hrs ago
2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு
- 9 hrs ago
ஹெக்டர் எஸ்யூவி காரின் உற்பத்தியில் புதிய மைல்கல்... பெண்களுக்கு பெருமை சேர்த்த எம்ஜி மோட்டார்...
Don't Miss!
- News
தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுர் கைது.. 'சொல்வது அத்தனையும் பொய்' - ஹரியானா போலீஸ்
- Movies
48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து !
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Lifestyle
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2020ம் ஆண்டில் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்த மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்... காரணம் தெரியுமா?
2020ம் ஆண்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாத மத்தியில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்த இந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, தற்போது ஒவ்வொரு மாதமும் ஓரளவு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

மஹிந்திரா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 32,200 எக்ஸ்யூவி300 கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் 2020ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார்களின் பட்டியலில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் (2019 பிப்ரவரி-டிசம்பர்), மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் விற்பனை சரிவடைந்துள்ளது.

2019ம் ஆண்டில் மஹிந்திரா நிறுவனம் 40,197 எக்ஸ்யூவி300 கார்களை விற்பனை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் விற்பனையில் 19.9 சதவீத வீழ்ச்சியை மஹிந்திரா எக்ஸ்யூவி300 பதிவு செய்துள்ளது. இந்த வீழ்ச்சிக்கு கொரோனா வைரஸ், ஊரடங்கு ஆகிய பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். எனினும் 2020ம் ஆண்டின் கடைசி மாதத்தை மஹிந்திரா எக்ஸ்யூவி300 வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் மஹிந்திரா நிறுவனம் 3,974 எக்ஸ்யூவி300 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 2,132 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 86 சதவீத வளர்ச்சியை மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி கார் பதிவு செய்து அசத்தியுள்ளது.

ஆனால் 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிட்டால், 2020ம் ஆண்டு டிசம்பரில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. ஏனெனில் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் மஹிந்திரா நிறுவனம் 4,458 எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 3,974 ஆக குறைந்துள்ளது. இது 11 சதவீத வீழ்ச்சியாகும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி கார் இந்திய சந்தையில், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட் மற்றும் ஹூண்டாய் வெனியூ ஆகிய கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. இதுதவிர டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிஸான் மேக்னைட் ஆகிய கார்களுக்கும் விற்பனையில் சவால் அளித்து வருகிறது.

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளள மேட் இன் இந்தியா கார்களில் ஒன்று என்ற பெருமை மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு உள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 தவிர அதே காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டை சேர்ந்த டாடா நெக்ஸான் காரும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

மேலும் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டை சேர்ந்த டாடா அல்ட்ராஸ் காரும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை தன்வசப்படுத்தியுள்ளது. தற்போது வரை இந்த 3 மேட் இன் இந்தியா கார்கள் மட்டுமே குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.