மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காருக்கு என்ன பெயர் வைக்க போறாங்க தெரியுமா? இது சூப்பரா இருக்கே!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரின் பெயர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காருக்கு என்ன பெயர் வைக்க போறாங்க தெரியுமா? இது சூப்பரா இருக்கே!

பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மஹிந்திரா நிறுவனம் அடுத்ததாக 13 புதிய கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. இதில், 8 கார்கள் பேட்டரி மூலமாக இயங்கும் எலெக்ட்ரிக் கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காருக்கு என்ன பெயர் வைக்க போறாங்க தெரியுமா? இது சூப்பரா இருக்கே!

வரும் 2027ம் ஆண்டிற்குள் இந்த 8 எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என மஹிந்திரா நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. இந்த 8 எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று, ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். மஹிந்திரா எக்ஸ்யூவி300 சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காருக்கு என்ன பெயர் வைக்க போறாங்க தெரியுமா? இது சூப்பரா இருக்கே!

இந்த செக்மெண்ட்டில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 திகழ்கிறது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக மிக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த செக்மெண்ட்டில் உள்ள மற்றொரு காரான டாடா நெக்ஸானின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஏற்கனவே விற்பனையில் உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காருக்கு என்ன பெயர் வைக்க போறாங்க தெரியுமா? இது சூப்பரா இருக்கே!

எனவே மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு போட்டியாக அமையும். இந்த புதிய எலெக்ட்ரிக் காருக்கு எக்ஸ்யூவி400 (XUV400) என பெயர் சூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா குழுமத்தின் ஆட்டோ மற்றும் விவசாய துறை நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெஜூரிகர் இது தொடர்பாக பேசியுள்ளார்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காருக்கு என்ன பெயர் வைக்க போறாங்க தெரியுமா? இது சூப்பரா இருக்கே!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காருக்கு எக்ஸ்யூவி400 என பெயர் சூட்ட மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது என ராஜேஷ் ஜெஜூரிகர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் தற்போதைய நிலையில் எதுவும் முடிவு செய்யப்படவில்லை. எனவே எக்ஸ்யூவி400 என்பதற்கு பதிலாக வேறு பெயர் சூட்டப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காருக்கு என்ன பெயர் வைக்க போறாங்க தெரியுமா? இது சூப்பரா இருக்கே!

முன்னதாக மஹிந்திரா நிறுவனம் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது. எக்ஸ்யூவி300 மற்றும் எக்ஸ்யூவி500 கார்களுக்கு இடைப்பட்ட மாடலாக இதனை நிலைநிறுத்தவும் ஆலோசிக்கப்பட்டிருந்தது. இந்த காருக்குதான் ஆரம்பத்தில் எக்ஸ்யூவி400 என பெயர் சூட்டுவதற்கு மஹிந்திரா நிறுவனம் ஆலோசனை செய்து கொண்டிருந்தது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காருக்கு என்ன பெயர் வைக்க போறாங்க தெரியுமா? இது சூப்பரா இருக்கே!

இந்த மிட்-சைஸ் எஸ்யூவி காரை ஃபோர்டு நிறுவனத்தின் B-பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்க திட்டமிட்டிருந்தது. ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த காரை விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மஹிந்திரா மற்றும் ஃபோர்டு நிறுவனங்களின் கூட்டணி எதிர்பார்த்தபடி அமையவில்லை.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காருக்கு என்ன பெயர் வைக்க போறாங்க தெரியுமா? இது சூப்பரா இருக்கே!

எனவே தற்போது எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கு எக்ஸ்யூவி400 என்ற பெயர் பரிசீலனை செய்யப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை மஹிந்திரா நிறுவனம் காட்சிப்படுத்தியது. அப்போதே இந்த கார் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காருக்கு என்ன பெயர் வைக்க போறாங்க தெரியுமா? இது சூப்பரா இருக்கே!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரின் தயாரிப்பு நிலை வெர்ஷன் 350V மற்றும் 380V என மொத்தம் 2 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், விலை குறைவான ஆரம்ப விலை மாடல், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் உடன் போட்டியிடும். தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிதான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காருக்கு என்ன பெயர் வைக்க போறாங்க தெரியுமா? இது சூப்பரா இருக்கே!

மறுபக்கம் விலை உயர்ந்த டாப் மாடல், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுடன் போட்டியிடும். இதுகுறித்து லைவ் ஹிந்துஸ்தான் செய்தி வெளியிட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு (2022) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காருக்காக வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வமுடன் காத்து கொண்டுள்ளனர். இதுதவிர இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களையும் மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra xuv300 electric car may be named xuv400 check details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X